பூப்படைதல் பகுதி 2

பூப்படையும் நேரத்தில் உட்கொள்ள வேண்டிய சத்தான உணவுகள்

பெண் குழந்தைகள் 9 வயதை கடக்கும் பொழுது எந்த மாதிரியான உணவு முறைகளை நாம் கையாளவேண்டும்.

பூப்படையும் பெண்களை மனதளவில் தயாராக்குவது போல உணவும் முக்கிய பங்குவகிக்கிறது. இரும்பு சத்து அதிகமான அளவில் வீணாவதால் உணவில் இரும்பு சத்துக்கு முக்கிய இடமளிக்கவேண்டும். இரும்பு சத்து உட்கிரகித்தலை அதிகமாக்கும் வைட்டமின் சி-யுடன் சேர்த்து உட்கொள்ளலாம்.

அத்துடன் கால்சியம் மற்றும் புரதசத்து அதிகமாக இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.

பூப்படைதல் – தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் Part 1

இரும்புச் சத்து அதிகமாக உள்ள உணவுகள்:

இரும்புச் சத்து அதிகமாக உள்ள பழங்களான வாழைப்பழம் ஆப்பிள் மாதுளம்பழம் போன்றவைகளையும், காய்கறிகள் வகையில் அனைத்து கீரை வகைகளும், இதுதவிர முந்திரி பருப்பு, பூசணிக்காய் விதை, பயிறு வகைகள் முக்கியமாக கருப்பு உளுந்து, கொண்டைக்கடலை, பேரீச்சம்பழம், உலர் திராட்சை, உலர்ந்த அத்திப்பழம், அனைத்து வகையான உலர்ந்த பழங்கள் போன்றவற்றை கொடுத்து வர வேண்டும்.

அசைவ உணவு வகையில் ஆட்டு ஈரலை விட மண்ணீரலில் (சுவரொட்டி, Spleen) அதிகளவு இரும்புசத்து நிறைந்துள்ளதால் இதுவும் சேர்த்துக்கொள்ளலாம்.

கால்சியம் 

சத்து அதிகம் உள்ள பழங்களான கொய்யாப்பழம் பப்பாளி பழம் ஆரஞ்சு பழம் கிர்ணி பழம் வெள்ளரிக்காய் போன்றவற்றையும், காய்கறிகளில் கேரட், முள்ளங்கி, சோயா பீன்ஸ், முட்டைக்கோஸ், ப்ரோக்கோலி, போன்றவற்றையும் முட்டை பால் ஆகியனவற்றையும் கொடுத்து வரலாம்.

பூப்பெய்திய பெண்குழந்தைகளுக்கான ஆரோக்கிய உணவு

புரதச் சத்து

அதிகம் உள்ள அசைவ உணவு வகைகளான கோழி கறி, ஆட்டுக்கறி, மீன்கள், இறால், மற்றும் இதர பொருட்களான தயிர், பால், உருளைக்கிழங்கு, பச்சை பட்டாணி, வெண்ணை போன்றவற்றையும் கொடுத்து வரலாம்.

மாதவிடாய் வரும் காலம் கட்டத்தில் உண்டாகும் பிரச்சினைகளுக்கு சில எளிதான வீட்டு கை வைத்தியம் .

மாதவிடாய் நேரங்களில் வரும் வயிற்று வலி:

 • சிறிது சீரகத்தை எடுத்து தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து அதனுடன் சிறிது மண்டை வெல்லம் சேர்த்து குடிக்கக் கொடுக்கலாம்.
 • சிறிது ஓமத்தை தண்ணீருடன் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து அதனுடன் சுவைக்கு சிறிது வெல்லம் சேர்த்து குடிக்கக் கொடுக்கலாம்.

உடலில் உள்ள எலும்புகளை வலுப்படுத்த:

 • உளுந்தங்களியுடன் சிறிது நல்லெண்ணெய் சேர்த்து அதனுடன் கருப்பட்டி/ மண்டை வெல்லமும் சேர்த்து வாரத்திற்கு இரண்டு முறை கண்டிப்பாக சாப்பிட கொடுக்கலாம்.
 • ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை தண்ணீரிலோ அல்லது இளநீரிலோ ஊறவைத்து அதை நீருடன் சேர்த்து உண்ணக் கொடுக்கலாம்.
 • தினமும் ஒரு முட்டை அவசியமாக கொடுக்கவேண்டும். நாட்டுக்கோழி முட்டையை பச்சையாக உடைத்து கூடவே நல்லெண்ணெய் சேர்த்தும் கொடுக்கலாம்.

முகத்தில் வரும் பருக்கள்:

 • கடலைமாவுடன் சிறிது கஸ்தூரி மஞ்சள் பொடி சேர்த்து முகத்தில் தடவி பின்பு கழுவினால் பருக்கள் மறையும்.
 • விதவிதமான க்ரீம்களை முகத்தில் பூசுவதை தவிர்க்க வேண்டும்.
 • நிறைய தண்ணீர் அருந்த வேண்டும்.
 • அதிகம் எண்ணெயில் பொரித்தெடுத்த உணவுகளை உண்பதை தவிர்க்க வேண்டும்.

இந்தக் காலகட்டத்தில் கடைப்பிடிக்க வேண்டிய பொதுவான விஷயங்கள்.

 • உங்கள் குழந்தைக்கு சுத்தமான பழக்கத்தை கற்றுக் கொடுங்கள். எப்படி தன்னை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதையும் கற்றுக் கொடுங்கள்.
 • சுகாதாரமின்மையால் ஏற்படும் சில தொற்றுநோய்கள் அதைப்பற்றி அவர்களுக்கு விளக்கிச் சொல்லுங்கள்.
 • இந்த காலகட்டத்தில் அவர்கள் தினமும் உடற்பயிற்சி செய்து அவர்களை புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ள வேண்டும்.
 • அவர்கள் விரும்பிய ஏதேனும் ஒரு விஷயத்தை செய்யலாம். அது வரைவதாகவோ அல்லது புத்தகம் படிப்பதாகவோ அல்லது கைவினைப்பொருட்கள் செய்வதாகவோ இருக்கலாம். இது அவர்கள் மனதில் உள்ள இறுக்கத்தை மிக எளிதாக குறைக்கும்.
 • கண்டிப்பாக 8 மணி நேரம் உறக்கம் தேவை. அதுவே அவர்களை மனதளவிலும் உடலளவிலும் புத்துணர்ச்சியுடன் வைக்கும்.
 • அவர்கள் சில யோகாசன பயிற்சிகளையும் செய்யலாம் அப்படி செய்வதால் மாதவிடாயினால் ஏற்படும் வயிற்றுவலி அல்லது ஒழுங்கற்ற மாதவிடாய், சீரான ரத்த ஓட்டம் இல்லாது போதல் போன்ற பிரச்சினைகளிலிருந்து விடுபட முடியும்.

Follow us on Insta – Moms QnA – Instagram and Facebook – Moms QnA – Facebook

Share This Article

Related Post

டீன் ஏஜ்

டீன் ஏஜ் எனும் பத

டீன் ஏஜ் - உங்கள் பிள...

டீன் ஏஜ் எனும் பத

இளமை இனிமை - டீன் ஏஜ் ...

Puberty – Age, Signs and Symptoms

Puberty: First Periods - Age, Symptoms, Discussion With...

Leave a Comment

error

Enjoyed this blog? Please spread the word :)