இளமை காக்கும் (குதிரை) அஸ்வினி முத்திரை
அஸ்வமேத யாகம் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். அஸ்வினி என்றால் குதிரை என்று நினைவில் நிறுத்த மட்டுமே இந்தக் குறிப்பு.
குதிரையின் அழகும் கம்பீரமும் வேகமும் கண்டு வியக்கத் தக்கவை.
இவை அனைத்தையும் குதிரைக்குத் தருவது அதன் உணவு – கொள்ளு.
அடுத்து குதிரை செய்யும் யோகப் பயிற்சி- அஸ்வினி முத்திரை.
இந்த அஸ்வினி முத்திரை பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.
அஸ்வினி முத்திரை பயன்கள்
- இளமையைக் காக்கும் காயகல்பப் பயிற்சி
- ஆண்மையைப் பெருக்கும்.
- கருப்பை வலிமை பெறும்
- செரிமான பிரச்சினைகள் தீரும்
- மலச்சிக்கல் நீங்கும்
- நோய் எதிர்ப்புச் சக்தி கூடும்
- நரம்பு மண்டலம் ஊக்குவிக்கப்படும்
இவ்வளவு பயன்களை அள்ளிக் கொடுக்கும் இந்தப் பயிற்சி மிக சிரமமாக இருக்குமோ என எண்ணம் வரும். ஆனால் மிக மிக எளிதான பயிற்சி இது.
குதிரையை சற்று கவனித்துப் பார்த்தால் தெரியும். அது அடிக்கடி ஆசன வாயை சுருக்கி விரிக்கும். இதுதான் அஸ்வினி முத்திரை.
அஸ்வினி முத்திரை – செய்முறை
- ஒரு விரிப்பில் தளர்வாக உட்காருங்கள்
- தெரிந்தால், முடிந்தால் பத்மாசனம்/ வஜ்ராசனத்தில். இல்லாவிட்டால் சுகாசனம்.
- ஆசன வாயை சுருக்கி இழுத்துப் பிடிக்க வேண்டும். அவ்வளவுதான்!!
- துவக்கத்தில் 10 ,20 முறை. போகப் போக 40,50 முறை செய்யலாம்.
- எங்கும், எப்போதும் செய்யலாம்.
- மூச்சு இயல்பாக இருக்க வேண்டும்
இப்படி எளிமையான பயிற்சியில் இவ்வளவு பயன்களா என்று எண்ணம் வரும். உடலில் உள்ள நரம்புகள் எல்லாம் வந்து குவியும்ஆசன வாயில் சுருக்கம் ஏற்படும்போது அவை அனைத்தும் தூண்டப் பட்டு உடல் நலம் வலிமையை கொடுக்கிறதாம்.
சித்தர்கள் அருளிய காயகல்பப் பயிற்சி இந்த அஸ்வினி முத்திரையின் அடிப்படையில் அமைந்துள்ளதாம். பொருட்செலவு எதுவும் இல்லை. கருவிகள் தேவை தேவை இல்லை. உடலை வருத்தும் பயிற்சி இல்லை. தனி இடம் கூட தேவையில்லை.
குறிப்பு
முத்திரைகள் செய்வதற்காக மருந்து, மாத்திரை மருத்துவம் எதையும் உங்கள் மருத்துவரைக் கலக்காமல் நிறுத்த வேண்டாம்.
Author Profile
P. Sherfuddin
M.Sc. 1. Yoga 2. Varma and Thokkanam Science 3. Memory Dev and Psycho Neurobics
P.G.Diploma in Pancha Karma Therapy
Diploma in Acupuncture