உடல்நல குறிப்புகள் – குழந்தைப்பேறு

“படைப்புப்பல படைத்து பலரோடு உண்ணும் உடைப்பெருஞ் செல்வர்

ஆயினும் இடைப்படக் குறுகுறு நடந்து சிறுகை நீட்டி

இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும் நெய்யுடை

அடிசில் மெய்பட விதிர்த்தும் மயக்குறு மக்களை

இல்லோர்க்குப் பயக்குறை இல்லைத் தாம் வாழும் நாளே.”

— (பாண்டியன் அறிவுடைநம்பி, புறநானூறு 188)

குழந்தைப்பேறு

பல வகையான செல்வங்களையும் பெற்று, பலரோடு உண்ணும் பெரும் செல்வந்தர் ஆயினும், மெல்ல மெல்ல குறுகிய அடிகளை வைத்து நடந்து, தன் சிறிய கையை நீட்டி உணவில் இட்டு,தொட்டு, வாயால் கவ்வி, கையால் துழாவி,நெய்யுடன் கலந்த சோற்றை தன் உடலில் பூசி பெற்றோரை இன்பத்தில் மயக்கும் குழந்தைகள் இல்லாதவர்களின் வாழ்நாட்கள் பயனற்றவையாகும் என்பதே இதன் பொருள்.

மேலும் படிக்க – கர்ப்பப்பை கோளாறு நீங்கி குழந்தை பாக்கியம் பெற

பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி என்னும் பாண்டிய மன்னன் இன்னும் ஒருபடி மேலே சென்று உள்ளான். அவன் போருக்குப் போகும் பொழுது பகைவருடைய நாட்டில் உள்ளவர்களில் பிள்ளைகள் இல்லாத வர்களை நோக்கி நீங்கள் பாதுகாப்பான இடத்திற்குச் செல்லுங்கள் என்று கூறுவதாக புறநானூற்றில் நெட்டிமையார் என்ற புலவர் குறிப்பிடுகிறார்.

குழந்தைப்பேறு இல்லாததை இவ்வாறு சொல்ல  காரணம் என்ன?

குழந்தைப்பேறு இல்லாத ஆண்மகன் போரில் இறந்து விட்டால்  அவனின் மனைவி குழந்தை பாக்கியம் இல்லாமலே போய்விடுவாளே என்பதுதான் காரணம்.

“மக்கள் மெய் தீண்டல் உடற்கின்பம் மற்று

அவர் சொற்கேட்டல் இன்பம் செவிக்கு”

 என்கிறார் திருவள்ளுவர்.

தனது அழகு நடையில் ‘கறிக்கு அரைக்கும் தேங்காய்க்கு கைநீட்ட பிள்ளை வேண்டும்’ என்கிறார் கவிஞர்.

இவ்வாறு வாழ்க்கையில் குழந்தைப்பேறு எவ்வளவு முக்கியமானது என்பதையும், அதன் மகிமையையும் சொல்லிக்கொண்டே போகலாம்.

மேலும் படிக்க – பூப்பெய்திய பெண்குழந்தைகளுக்கான ஆரோக்கிய உணவு

குழந்தைப்பேறு பெற குறிப்புகள்

இனி குழந்தைப்பேறு இல்லாதவர்கள் குழந்தைப்பேறு அடைய கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள்  சிலவற்றை இங்கு பார்க்கலாம்.

  • மன அழுத்தத்தில் இருந்து முதலில் வெளிவரவேண்டும். காதலர் இருவர் ( கணவன் மனைவி) கருத்தொருமித்து ஆதரவு பெற்ற வாழ்க்கை வாழ்வதே குழந்தை பேறுஅடைய மிக முக்கியமான ஆரம்ப மாகும்.மனம் அதற்கு முந்தைய தவிர்க்க வேண்டிய நினைவுகள் மற்றும் நிகழ்வுகளை கனவாக கருதி கலைத்துவிட வேண்டும். காதல் அறிவார்ந்தது. தூய்மையானது .உறவின் வழியது.காதல் ஒரு நோன்பு .இந்த நோன்பினை அறிவார்ந்த நிலையில் செயல் படுத்துபவர்கள் காதல் வாழ்வில் சிறக்கின்றனர். இத்தகையோரே நன்மக்களைப் பெறுகின்றனர்.
  • அன்றாடம் உணவில் பீன்ஸ், முழு தானிய உணவுகள், மீன், கீரை வகைகள், கோதுமை பிரெட் ,கேரட் , முட்டை, ஆலிவ் ஆயில், முட்டைக்கோஸ், உருளைக்கிழங்கு, தக்காளி ஆகியவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும்
  • பால், தயிர் ஆகியவைகளையும் பாதாம், வால்நட், பூசணி விதை, ஆலிவிதை, சூரியகாந்தி விதை ஆகிய பருப்பு வகைகளையும் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது.
  • எடையில் சிறிது கட்டுப்பாடு இருப்பது மிகவும் அவசியம்.
  • ஆல்கஹால் ,காப்ஃபைன் மற்றும் நிக்கோடின் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.
  • பூண்டுக் குழம்பு, சின்ன வெங்காய தயிர் பச்சடி, எள்ளுத் துவயல், கருப்புத் தோல் உளுந்து சாதம் மற்றும் வெந்தயப்பொடி சாதம் ஆகியவை கருத்தரித்தலுக்கு மிகவும் ஊட்டந்தரக்கூடியவை.
  • மாதவிடாய் முடிந்து 12 நாட்களில் இருந்து 18 நாட்கள் வரை தினமும் சாப்பாட்டுக்குப் பிறகு சுமார் 4 மணி நேரம் கழித்து  உறவில் ஈடுபடுவது விரைவில் கர்ப்பம் தரிக்க ஏதுவான கால நேரமாகும்.

மேலும் படிக்க – கர்ப்பிணிகளுக்கான கருவேப்பிலை மருந்து

இவ்வகை செயல்பாடுகளை நடைமுறைப்படுத்திய பின்பும் பிள்ளைப்பேறு இல்லையெனில் உடன் மருத்துவரை நாடுவது நலம் மிக்க செயலாகும். அவருடைய கண்காணிப்பில் அவர் அறிவுரைப்படி செயல்பட வேண்டியது நமது கடமையாகும்.

இந்நிகழ்வில் சித்த மருத்துவம் நல்ல பலனை தரக்கூடியது.

இதுவரையில் குழந்தைப்பேறு அடையாத தம்பதியினர் குழலினும் யாழினும் இனிமை மிக்க மழலையின் மொழி கேட்க எங்களின் பிரார்த்தனையும் ஆசியும் வாழ்த்துக்களும் என்றும் உண்டு.

Follow us on Insta – Moms QnA – Instagram and Facebook – Moms QnA – Facebook 

Author Profile 

சாது

வ.போ.அலுவலரின் நே.மு. உதவியாளர் (ஓய்வு)

படித்தல், எழுதுதல்.

Share This Article

Related Post

Tips for better sleep at night

How to Get Better Sleep at Night

How to Get Better Sleep at Night Sleep is essential fo...

நல்வாழ்வு குறிப

நல்வாழ்வு குறிப்புக...

non stick cookware

Myths and Facts about Nonstick Cookware

Myths and Facts about Non-Stick Cookware Nonstick Cook...

Leave a Comment

error

Enjoyed this blog? Please spread the word :)