பாட்டி வைத்தியம் – தலை முடி பிரச்சனைகள் தீர 10 எளிய வழிகள் 

தலைக்கு குளிக்கும் பொழுது நீங்கள் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான விஷயங்கள்.

1. வாரத்திற்கு இரு முறையாவது கண்டிப்பாக தலை குளிக்க வேண்டும்.

2. மருத்துவ பரிந்துரை இருந்தால் ஒழிய சுடு தண்ணீரில் தலை குளிப்பதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

3. குளிர்ந்த நீரிலோ அல்லது வெதுவெதுப்பான நீரில் மட்டுமே தலை குளிக்க வேண்டும்.

4. அதிகவெப்பமாக உள்ள நீரில் தலைக்கு குளிப்பதால் முடி கொட்டுவது மட்டுமின்றி முடியின் மினுமினுப்பு தன்மை முற்றிலும் குறைந்து, உங்களது கேசம் உறுதியற்றதாகவும், மிகவும் மோசமான நிலையில் சேதமடைகிறது.

மேலும் படிக்க – இளநரை நீங்க – எளிய வழி

5. வாரத்தில் ஒருமுறையேனும் கேசத்திற்கு போஷாக்கு தரும் ஹேர் மாஸ்க் போடுவது மிகவும் நல்லது. அந்த ஹேர் மாஸ்க்கை குறைந்தது பதினைந்து நிமிடங்களாவது வைத்திருந்து பின் குளிக்க வேண்டும்.

இங்கு வீட்டிலேயே மிக எளிமையாக செய்யக்கூடிய சில ஹேர் பேக்ஸ் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது.

ஹேர் மாஸ்க் 1

சிறிது வெங்காயச் சாற்றுடன் சிறிது தேங்காய் எண்ணெயை நன்கு கலந்து இந்த கலவையை தலையில் உள்ள அனைத்து மயிர்கால்களில் படும்படி நன்கு தேய்த்து அதனை 15 – 20 நிமிடங்கள் வரை ஊற விடவும். பின்பு நீங்கள் தலையை குளிர்ந்த நீரிலோ அல்லது வெதுவெதுப்பான நீரிலோ அலசலாம்.

ஹேர் மாஸ்க் 2

நன்கு அடித்து கலக்கப்பட்ட ஒரு முட்டையில் சிறிது எலுமிச்சை சாறு கலந்து அந்த கலவையை தலையில் உள்ள அனைத்து மயிர்கால்களில் படும்படி நன்கு தேய்த்து 15 நிமிடம் ஊறவிடவும். பின் வெதுவெதுப்பான நீரிலோ குளிர்ந்த நீரிலோ தலைக்கு குளிக்கலாம்.

ஹேர் மாஸ்க் 3

தயிருடன் சிறிது தேனையும் அதனுடன் சிறிது எலுமிச்சம் பழச் சாற்றையும் சேர்த்து கலந்து அந்த கலவையை தலையில் உள்ள அனைத்து மயிர்கால்களில் படும்படி நன்கு தேய்த்து 20 நிமிடம் ஊற விடவும். பின் வெதுவெதுப்பான நீரிலோ அல்லது குளிர்ந்த நீரிலோ தலைக்கு குளிக்கலாம்.

6. மேலே குறிப்பிட்ட மிக எளிமையான வீட்டிலேயே செய்யக்கூடிய இந்த ஹேர் பேக் தவிர உங்கள் தலைமுடிக்கு பொருந்தும் வேறு சில ஹேர் பேக்குகளையும் நீங்கள் செய்து தலையில் தடவி அதனை 15 லிருந்து 20 நிமிடம் வரை ஊற வைத்து குளிர்ந்த நீரிலோ வெதுவெதுப்பான நீரிலோ வாரம் ஒரு முறை கழுவி வரலாம்.

7. அதுமட்டுமின்றி நீங்கள் தலைமுடியை அலச பயன்படுத்தும் ஷாம்புவை நேரடியாக முடியில் உபயோகிக்காமல் அதனை ஒரு சிறிய கிண்ணத்தில் ஊற்றி அதனுடன் சிறிது தேங்காய் பால் அல்லது சாதம் வடித்த நீர் அல்லது தண்ணீர் இவற்றில் ஏதேனும் ஒன்றை கலந்து பின் பயன்படுத்துவதே மிகவும் சிறந்தது. இதனால் ஷாம்பு களில் உள்ள கெமிக்கல்கள் நேரடியாக மயிர்க்கால்களில் பட்டு தலைமுடிக்கு ஏற்படும் பலவிதமான சேதங்களையும் தடுக்கிறது.

மேலும் படிக்க – தலை முடி நன்கு செழித்து அடர்த்தியாக வளர

8. இதனுடன் நீங்கள் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான குறிப்பு தலைமுடியை எப்பொழுது வார வேண்டும் என்பது. தலைமுடி ஈரமாக இருக்கும் பட்சத்தில் அதனை கண்டிப்பாக வாரக் கூடாது. நன்கு உலர்ந்ததும் பெரிய அகலமான பற்களை உடைய சீப்பில் மட்டுமே தலைமுடியை வாரி எடுத்து பின் உங்களுக்கு விரும்பும் தலை அலங்காரங்களை செய்து கொள்ளலாம்.

9. தலையில் அதிகமாக பிளாஸ்டிக்கினால் அல்லது இரும்பினால் தயாரிக்கப்பட்ட கிளிப்புகளை தவிர்ப்பது நல்லது.

10. வாரத்திற்கு கண்டிப்பாக மூன்று முறையாவது தலையில் உங்களுக்கு பொருந்துகிற எண்ணெயை தேய்ப்பதனால் முடி நன்கு போஷாக்குடன் காணப்படும்.

Follow us on Insta – Moms QnA – Instagram and Facebook – Moms QnA – Facebook

Share This Article

Related Post

Leave a Comment

error

Enjoyed this blog? Please spread the word :)