Different types of Millets and their Benefits
Millets and their Benefits Carbohydrates are the basis...
நம்மை ஈன்ற தாயிடம் இருந்து நமக்கு கிடைத்த மிகப்பெரிய ஈடு இணை இல்லாத பரிசு மற்றும் நமக்கு ஏற்படும் அனைத்து நோய்களுக்கும் இதன் மூலம் கண்டிப்பாக நிச்சயமாக தீர்வு உண்டு என்றால் அது ஒவ்வொரு மனிதனின் தொப்புள்தான்.
இன்று பல்வேறு விதங்களில் முன்னேறியுள்ள அறிவியலின் கூற்றுப்படி நாம் கருவில் இருக்கும் பொழுதே முதல் முதலாக நம் உயிரினுள் ஏற்பட்ட ஒரு இணைப்பு இந்த தொப்புள் கொடி.
நம்முடைய உடலும் உயிரும் வளர்ந்து இந்த உலகத்திற்கு வருவதற்கு முதல் காரணமானது, நமது கருப்பையில் இருந்து நம்முடைய தாய்க்கு தொடர்பு ஏற்படுத்தியது இந்த தொப்புள் கொடி தான்.
அந்த தொப்புள் கொடியில் மறைந்துள்ள அதிசயங்களும் ஆச்சரியங்களும் எண்ணற்றவை.
இக்கால அறிவியல் கூற்றின்படி ஒரு மனிதன் இறந்த பின்பும் அடுத்து மூன்று மணி நேரத்திற்கு சூடாகவே இருக்கக்கூடிய ஒரே இடம் தொப்புள் தான்.
இந்தத் தொப்புள் ஒவ்வொரு மனிதனின் உடலிலும் சரியாக நடுவில் அமைந்து, அதனைச் சுற்றி உள்ள அனைத்து நாளங்களும் சேரும் ஒரு இடமாக விளங்குகிறது
இந்த தொப்புளில் உடம்பில் உள்ள 72 ஆயிரம் நாளங்கள் வந்து சேர்கின்றன.
ஆக ஒரு மனிதனுடைய உடலில் தேவையான அனைத்தும் சரியான நேரத்தில் இயங்குவதற்கான ஒரு மையப் புள்ளியாக இந்தத் தொப்புள் உள்ளது.
நமக்கு மிக சாதாரணமாக ஏற்படக்கூடிய கண் எரிச்சல், கண் பார்வை குறைபாடு, சிறுநீரகக் கல், பித்தப்பை பிரச்சனை, கால் பாத எரிச்சல், மூட்டு வலி, முழங்கால் வலி, குதிங்கால் வலி, சோர்வுறுதல், தோல் பிரச்சனைகள், தலைமுடி வளர்ச்சியில் பிரச்சனைகள் போன்ற பலவிதமான பிரச்சனைகளுக்கும் தீர்வாக அமைகிறது இந்த தொப்புளும் எண்ணெய் வைத்தியமும்.
ஒரு வயது முதல் எந்த வயதினரும் இந்த கை வைத்தியத்தை தாராளமாக பின்பற்றலாம். இதனால் எந்த ஒரு பக்க விளைவுகளும் ஏற்படாது.
தொப்புளில் எண்ணெய் விடுவதை பொதுவாக இளைப்பாறும் நேரமான மதியம் அல்லது இரவு செய்வது நல்லது. இரவு தூங்கப்போகும் முன் செய்வதே வழக்கம்.
வாரத்திற்கு ஓரிரு முறை செய்யலாம்.
தொப்புளில் என்னை சிறிது சொட்டுக்கள் விட்டு தொப்புளை சுற்றி தேய்த்து விடுவதால் நமக்கு ஏற்படும் நன்மைகள் பல.