Pregnancy Due Date Calculation
Pregnancy Due Date Calculation Congrats!!! There is ...
தங்களின் வாழ்க்கையில் தாய்மார்கள் அவசியம் செயல்படுத்த வேண்டிய, செயல்படும்படி பிறருக்கு அறிவுறுத்த வேண்டிய முக்கியமான சில விஷயங்களில் தாய்ப்பால் கொடுப்பதும் ஒன்று.
குழந்தை பெற்ற உடனேயே தாய்ப்பால் கொடுக்க வேண்டியதன் அவசியத்தை சொல்லாத மருத்துவர்களோ, சுற்றம் மற்றும் நட்பில் உள்ள பெரியோர்களோ கிடையாது.
ஆனால் அதையும் மீறி நாகரீகம் எனும் போர்வை போர்த்தியோ, உடல் அழகு கெட்டுவிடும் என்ற மாயையினாலோ அல்லது வேறு சில அர்த்தமற்ற காரணங்களினாலோ தாய்ப்பால் கொடுக்கும் பழக்கத்தை தவிர்க்க நினைக்கும் தாய்மார்களுக்காகவே இந்த பதிவு.
சுமார் 1400 வருடங்களுக்கு முன்பே விவசாயமும், கால்நடை பராமரிப்பு மட்டுமே தொழிலாக இருந்த அரேபிய நாடுகளில் கால்நடைகளின் பாலை தவிர்த்து விட்டு வாடகைத் தாய் மூலம் தாய்ப்பால் கொடுக்கப்பட்டது என்பது வரலாற்று உண்மை.
பெண் குழந்தையின் தாய்ப்பாலை விட ஆண் குழந்தையின் தாய்ப்பால் இரண்டு மடங்கு அதிக அடர்த்தி உடையது என்பது படைப்பின் மகிமை என்பதை அவர்கள் அறிந்து வைத்திருந்தனர். அவ்வாறு இருக்க அதிக அடர்த்தி கொண்ட கால்நடைகளின் பாலினை தாய்ப்பாலுக்கு பகரமாக குழந்தைக்கு கொடுப்பது எந்த விதத்திலும் நியாயம் இல்லை என்பதை அவர்கள் தெரிந்து வைத்திருந்தனர். நாம் இதை சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?
குறைந்தது 6 மாதங்கள் அதிகபட்சம் இரண்டு வருடங்களுக்கு தாய்ப்பால் கொடுக்கலாம். ஆறு மாதங்களுக்குப் பிறகு தாய்ப்பாலுடன் பிற கூடுதல் உணவுகளையும் கொடுக்கலாம்.
தாய்க்கு உடல்நலக்குறைவு ஏற்படும் காரணத்தினால் தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்த வேண்டிய அவசியம் இல்லை. எனினும் இது போன்ற நிகழ்வுகளில் மருத்துவரை கலந்துகொண்டு செயலாற்றுவது மிகவும் நல்லது.
நிகழ்காலத்தில் நாம் தெரிந்தோ தெரியாமலோ விஞ்ஞான மன நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். நமது உடல் இயற்கையோடு தொடர்புடையது என்பதை புரிந்து கொண்டாலே தாய்ப்பால் கொடுப்பதன் அவசியத்தை நாம் புரிந்து கொள்ள முடியும்.
இவற்றினை மருத்துவர்கள் அல்லது வீட்டில் உள்ள பெரியவர்களின் ஆலோசனைப் படி பயன்படுத்த வேண்டும்.
விரிவான செய்தி சோர்வு தருமோ என்ற அச்சத்தினால், தாய்ப்பாலின் தன்மை, நன்மை மற்றும் பெருமையினைப் பற்றி இங்கு குறைவாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது. தாய்ப்பால் கொடுப்பதால் தாய்க்கும் சேய்க்கும் இன்னும் ஏராளமான நன்மைகள் உள்ளன. அதை தெரிந்து உணர்ந்து அனைத்து தாய்மார்களும் அவசியம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்பதே இப்பதிவின் நோக்கமாகும்.
சாது
வ.போ.அலுவலரின் நே.மு. உதவியாளர் (ஓய்வு)
படித்தல், எழுதுதல்.