புலிமியா – ஒரு உளவியல் பிரச்சினை

புலிமியா உள்ளவர்கள் கட்டுப்பாடு இல்லாமல் மிக அதிகமான அளவில் ஒரு நேரத்தில் உணவு உட்கொள்வார்கள். என்றாவது ஒரு நாள் அல்ல, தினமும்.

புலிமியா பற்றி  சில செய்திகள்…

  • இது ஆண்களை விட பெண்களில் அதிகம் காணப்படுகிறது
  • புலிமியா உள்ளவர்கள் மிகவும் மன அழுத்தம் உள்ளவர்களாய் இருப்பார்கள்
  • அளவுக்கு மீறி அவரகள் சாப்பிடுவதை மற்றவர்கள் பார்த்து விடக்கூடாது என்று நினைப்பார்கள்
  • உடல் பெருத்துவிடும் என்ற அச்சத்தில் உண்ட உணவை உடனே வெளியேற்றுவார்கள். அதனால் பல உடல் சார்ந்த பிரச்சனைகளுக்கு உள்ளாவார்கள்.
Bulimia Nervosa - An Eating Disorder
Bulimia Nervosa – An Eating Disorder

மேலும் படிக்க – உடலையும் மனதையும் சீர் செய்ய சுரபி முத்திரை

புலிமியா அறிகுறிகள் மற்றும் பாதிப்பு

  • புலிமியா தாக்கம் 11 வயதில் இருந்து 25 வயது வரை உள்ளவர்களிம் அதிகம்
    காணப்படுகிறது
  • கடுமையான உணவக்கட்டுப் பாட்டில் இருந்தவர்கள், உடல் எடை குறைந்தவர்களிடம் இதன் தாக்கம் அதிகம்
  • சிறிய மாறுதல்களுடன் உடல் எடை சீராக இருக்கும்
  • கையின் பின்புறத்தோல் தடியாக இருக்கும்
  • பல் மேல் பூச்சு (எனாமல்) தேய்ந்து பல்சொத்தையாகும்
  • சரியான ஊட்டச்சத்து இல்லாமல் அதிக சோர்வு
  • உணவுப் பழக்கங்களும் மற்ற செயல்பாடுகளும்
    • கடுமையான உணவுக்கட்டுப்பாட்டைத் தொடர்ந்து அதிக அளவில் உண்ணுதல்
    • சாப்பிட்டு உடனே கழிவறை போவது
    • வயிறை சுத்தம் செய்ய, அதிக உடல் பயிற்சி, மருந்து மாத்திரைகள் மூலம் உணவை வெளியேற்றுதல்
    • பிறர் பார்க்காமல் மறைத்து உண்ணுதல், விழா விருந்துகளைத் தவிர்த்தல்

மேலும் படிக்க – உ டல் நலக் குறிப்புகள் – தூக்கம்

புலிமியா நெர்வோசா – உளவியல் காரணங்கள்

  • உடல் பயிற்சி உணவுக் கட்டுப்பாடு. உடல் எடையில் மிக அதிக அளவில் கவனம் செலுத்துதல்
  • மனச்சோர்வு தனிமை. றுமையாக உணர்தல்
  • தாழ்வு மனப்பாங்கு
  • சாப்பிடும் அளவு. முறை தவறு என்ற உணர்வு

புலிமியா உள்ளவர்கள் சுயமாக என்ன பராமரிப்பு செய்யலாம் ?

இவ்வகை நோய்க்கு தங்களின் சிகிச்சையைத் தொடர்வதோடு, தங்களின் சுய பராமரிப்புக்காக சில நடவடிக்கைகளும் எடுத்துக்கொள்ளவேண்டும்.

1. தேக பராமரிப்பு மிகவும் அவசியம். தங்களுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் நிறைந்த சத்தான, ஆரோக்கியமான உணவு உட்கொள்ள வேண்டும். தேவையான கூடுதல் சத்துக்கள் மற்றும் உடற்பயிற்சி பற்றி மருத்துவரிடம் ஆலோசிக்க வேண்டும்.

2. மற்றவர்களுடன் அதிகம் தொடர்பில் இருங்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் ஆதரவானது தங்களது ஆரோக்கியமற்ற பழக்கவழக்கங்களிருந்து விடுபடவும், தங்களுக்குள்ளாகவே நல்லுணர்வு அல்லது புத்துணர்வு ஏற்பட உதவும்.

3. பிறர் தூண்டுதல்களை தவிர்த்துக் கொள்ள வேண்டும். நமது உடம்பின் தன்மைக்கு முரணாக சமூக ஊடகங்களில் காண்பிக்கப்படும் பிம்பங்களை நீடித்து நினைவில் நிறுத்திக் கொள்ளக்கூடாது. அடிக்கடி எடை மற்றும் கண்ணாடி பார்த்தல் விட்டு விலகி இருத்தல் நல்லது. சோர்வு, வெறுமை போன்ற உணர்வுகள் மிதமிஞ்சி உண்ணுவதை தூண்டினால், அவைகளை போக்க ஆரோக்கியமான வழிகளை கண்டறிந்து பின்பற்ற வேண்டும். மனநல ஆலோசனை பெறுதல் நலம்.

மேலும் படிக்க – உ டல் நலக் குறிப்புகள் – இயற்கையின் அழைப்பு

புலிமியாவை தடுப்பதற்கான சில குறிப்புகள்

இதனால் தான் புலிமியா உண்டாகிறது என்று வரையறுக்க முடியாத நிலையில், நாம் நம் சிறு மற்றும் பதின்ம வயது குழந்தைகளுக்கு தம் உடல், உணவு மற்றும் ஆரோக்கியம் பற்றிய தெளிவா புரிதலை கொடுத்தல் அவசியம். சில வழிகள் இதோ.

1. அடிக்கடி குடும்பத்துடன் சேர்ந்து உண்ணுவதை பழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.
2. உங்கள் குழந்தைகளிடம் அவர்களின் எடையைப் பற்றி பேசாதீர்கள். மாறாக ஆரோக்கியமான பழக்கவழக்கங்களை பற்றி பேசுங்கள். ஆரோக்கியமான உண்மையான உடற் கூறுகள் பற்றி எடுத்துரையுங்கள்.
3. ஆவல் மிகுதியால் அல்லது ருசிக்காக அதிகம் உண்ணும் பழக்கத்தை தவிர்க்க அறிவுறுத்துங்கள்.

மேலும் படிக்க – வாத உடல்வாகு – இயல்பு, உணவு முறைகள்

இன்னும் நிறைய செய்திகள் சொல்லப்படுகின்றன. ஆனால் அவையெல்லாம் நம் நாடு, நம் ஊர் அளவில் உண்மையா என்று தெரியவில்லை. உளவியல் நூல்கள் பெரும்பாலும், மேற்கத்திய அறிஞர்கள் ஆசிரியர்கள் எழுதியவைதான் இங்கும் படிக்கப்படுகின்றன.

எனவே புலிமியா என்ற சொல்லையும், அதிக அளவில் உணவு உட்கொள்வது என்று அதற்குப் பொருள் என்றும் தெரிந்து கொள்வோம்.
புலிமியாவுக்கு எதிர்ச் சொல் போல் இருக்கும் உளவியல் பிரச்சினை
அனோரெக்சியா – Anorexia Nervosa – பசியே இல்லாத நிலை.

Follow us on Insta – Moms QnA – Instagram and Facebook – Moms QnA – Facebook

Author Profile

P. Sherfuddin

M.Sc. 1. Yoga 2. Varma and Thokkanam Science 3. Memory Dev and Psycho Neurobics

P.G.Diploma in Pancha Karma Therapy

Diploma in Acupuncture

Share This Article

Related Post

விழுதி மூலிகை

மூட்டுகளின் வாய

மூலிகை அறிமுகம்: மூட...

உ டல் நலக் குறிப்

உ டல் நலக் குறிப்புக...

myths and facts chicken

Myths and Facts about Broiler Chicken

Myths about Broiler Chicken Busted Myths and Facts on ...

Leave a Comment

error

Enjoyed this blog? Please spread the word :)