காது வலிக்கு வாழ
காது வலிக்கு வாழை மட...
பெரும்பாலானோர் தமது தலைமுடிக்கும், முகத்திற்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தை அவர்களுடைய கால்களுக்கோ, கால் பாதங்களுக்கோ கொடுப்பதில்லை.
சரியான பராமரிப்பு இல்லாத காரணத்தினால் கால் பாதங்கள் பலவித பிரச்சினைகளுக்கு உள்ளாகின்றன. தேவையான ஊட்டச்சத்து இல்லாத காரணத்தினால் கூட கால் பாதங்களில் வெடிப்புகள் ஏற்படுகின்றன. ஆனால் கால் பாத வெடிப்பிற்கான மிக முக்கிய காரணம் கால்களை சுத்தமாக வைத்துக் கொள்ளாததே.
நாம் அணியும் காலணி எவ்வளவு நேர்த்தியாக இருக்கிறது, அவை எப்படி பல பல வண்ணங்களிலோ, புதிய வகை விதவிதமான டிசைன்களிலோ நம்மை கவர்கிறதா என்று தான் பார்க்கிறோம். அவை கால்களுக்கு ஏற்றபடி வடிவமைக்கப்பட்டதா என்று நாம் பார்ப்பதில்லை. அந்தக் காலணி தயாரிக்க பயன்படுத்தும் பொருட்களை பற்றியும் நாம் பெரிதாக கவலைப்படுவதில்லை. இப்படி தரம் இல்லாத பொருட்களினால் உருவான காலணிகளை உபயோகிப்பதாலும் பாத வெடிப்புகள் மற்றும் கால் வலி ஏற்படுகின்றன.
ஆதலால் பாத வெடிப்புகளை சரி செய்ய நாம் இவை அனைத்தையும் ஆராய்ந்து நமக்குத் தேவையான அதேநேரம் நம் உடலுக்கு தீங்கு விளைவிக்காத தரமான காலணிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
அதுமட்டுமல்லாது, நீர் சத்து அதிகம் உள்ள உணவுப் பொருட்களை அதிகம் உட்கொள்ள வேண்டும். ஒரு நாளைக்கு குறைந்தது 1.5 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். கால்களை அடிக்கடி சுத்தம் செய்து மிகத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்.
இவை அனைத்தையும் நாம் ஒருசேர பின்பற்றினால் கால் வெடிப்பு வராமல் தடுக்கலாம். அதுமட்டுமல்லாமல் அதனால் ஏற்படும் பலவிதமான நோய்த் தொற்றுகளில் இருந்தும் நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்.
வேப்பிலை, விராலி மஞ்சள் அல்லது கஸ்தூரி மஞ்சள்.
சிறிது வேப்பிலையை எடுத்து நன்கு அலசி அதனுடன் சிறிது விராலி மஞ்சள் அல்லது கஸ்தூரி மஞ்சள் சேர்த்து நன்கு மையாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். இதனை பித்தவெடிப்பில் பூச 10 நாட்களில் பித்தவெடிப்பு தீரும்.
கால்களை மிதமான வெந்நீரில் ஊற வைத்து பின்பு நன்கு அலசி தேவையற்ற செதில் செதிலாக உள்ள பித்த வெடிப்புக்களை நக வெட்டி கொண்டு நீக்க வேண்டும். பின்பு கால்களை நன்கு துடைத்து வேப்பிலை மற்றும் மஞ்சள் சேர்த்து அரைத்த கலவையை பித்த வெடிப்பு உள்ள இடங்களில் பூசவும். இதை பூசிய பின்பு நடக்கவோ மற்ற இடங்களில் கால் படும்படி செய்வதோ தவிர்க்க வேண்டும். நன்கு காய்ந்தவுடன் இதனை கழுவி விடலாம். இந்த மருந்தை தொடர்ந்து 10 நாட்கள் பயன்படுத்த நல்ல பலன்கள் கிடைக்கும்.
வேப்பிலை இயற்கையிலேயே நோய் எதிர்ப்புத் தன்மை வாய்ந்த ஒரு அருமருந்து. அதைப்போலவே மஞ்சளும் இயற்கை நோய் எதிர்ப்புத் தன்மை உள்ள அருமருந்து. இரண்டையும் நன்கு தண்ணீர் சேர்த்து அரைத்து அந்த கலவையை நாம் பித்த வெடிப்பு உள்ள இடங்களில் பூசும் பொழுது கண்ணுக்குத் தெரியாத நுண்ணிய கிருமிகள் நீக்கப்பட்டு கால்களில் உள்ள வறட்சி தன்மை நீக்கப்பட்டு பித்தவெடிப்பு சரியாகிறது.
மாம்பிசின்( மாமரத்தில் ஏற்படும் ஒரு வகையான திரவம்), எலுமிச்சை 1, சிறிது கல் உப்பு.
பித்தவெடிப்பு அதிகமாக உள்ள கால்களை வெந்நீரில் ஒரு முழு எலுமிச்சம் பழத்தை பிழிந்து பின் கல் உப்பும் சேர்த்து சிறுது நேரம் ஊற வைக்க வேண்டும். நன்கு ஊறிய கால்களை வெளியே எடுத்து நன்கு தேய்த்து அலசி கால்களில் பித்த வெடிப்பினால் ஏற்பட்ட செதில் செதிலாக உள்ள இறந்த தோலை நீக்க வேண்டும். பின்பு நன்றாக துடைத்து அந்த இடத்தில் மாம்பிசினை சிறிது தண்ணீர் விட்டு குழைத்து பித்த வெடிப்புகள் மீது தடவ வேண்டும்.
இப்படி மாம்பிசினை நீர்விட்டு பித்த வெடிப்புகளில் தடவ சிறிது நாளில் பித்த வெடிப்புகள் சரியாகி கால் பாதம் மிக மென்மையானதாக மாறி விடும்.
மருதம் இலை.
மருதம் இலையை நன்கு அலசி அதனை நன்கு மைய அரைத்து ஒரு எலுமிச்சை அளவு வெறும் வயிற்றில் காலை மட்டும் சாப்பிட்டு வர உடம்பில் ஏற்படும் வறட்சி தன்மை நீங்கி தோளில் சத்துக்கள் அதிகரித்து பித்தவெடிப்பு அனைத்தும் முழுமையாக குணமாகும்.
பாலாடை, மஞ்சள் தூள்
பாலை கொதிக்க விடும் பொழுது தோன்றும் பாலாடையை எடுத்து அதனுடன் மஞ்சள் தூளை கலந்து அந்த கலவையை பித்தவெடிப்பில் தடவி வர பித்தவெடிப்பு நாட்பட மறையும்.
மேலே கூறிய அனைத்து வைத்திய முறையும் எந்த ஒரு பக்க விளைவுகளும் ஏற்படுத்தாது.