ஒவ்வாமை தீர
பாட்டி வைத்தியம் - ஒவ...
ஓரடுக்கு மட்டும் உள்ள சிகப்பு செம்பருத்தி பூவின் இதழ்களை மட்டும் பிரித்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் தினமும் அருந்தும் தேநீர் அளவு நீரை ஒரு குவளையில் எடுத்து அதனை 2 நிமிடம் நன்கு கொதிக்க விடவும்.
அதனுடன் பிரித்து எடுத்த செம்பருத்தி பூவிதழ்களையும் போட்டு கொதிக்க விடவும். கொதித்தபின் இறக்கி அதனை வடிகட்டி அந்த நீரை காலையில் தேநீருக்கு பதிலாக எடுத்துக் கொள்ளலாம்.
இப்படி செம்பருத்தி இதழ்களை கொதிக்க வைத்து அந்த நீரை எடுத்துக் கொள்வதால் நம் உடலில் உள்ள ரத்த அணுக்கள் தூண்டப்பட்டு அதனுடைய எண்ணிக்கை அதிகமாக்கப் படுகிறது. ரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகமாவதால் ரத்த சோகை, பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சினைகள், கருவுற்றிருக்கும் பெண்களுக்கு ஏற்படும் ரத்த பற்றாக்குறை அனைத்தும் இதனால் நீங்க பெறுகிறது.
இந்த செம்பருத்தி இதழ்களை உட்கொள்வதால் ரத்த அணுக்களை அதிகரிப்பது மட்டும் அல்லாது ரத்தத்தை சுத்திகரித்து தூய்மையாக்குகிறது. இதனால் ரத்த ஓட்டம் சீராகவும் ஆக்கப்பட்டு ரத்த அழுத்தமும் சம நிலையில் வைக்கப்படுகிறது.
இந்த நீரை தினமும் தேநீருக்கு பதிலாக அருந்தலாம். சுவைக்கு சிறிது நாட்டுச் சர்க்கரையையும் சேர்த்து பயன்படுத்தலாம்.
2 Comments