பாத வெடிப்பு / பி
பாட்டி வைத்தியம் - பா...
நம்மில் பெரும்பாலும் பல பேர்க்கு தலை குளித்த பிறகு தலைபாரம், தலையில் நீர் கோர்த்தல், ஜலதோஷம், இருமல் ,தும்மல் போன்றவை மிகவும் சாதாரணம். இதற்கு காரணம் நம் மூக்கின் பக்கவாட்டில் கண்ணங்களுக்கு மேலே, கண்களுக்குக் கீழே உள்ள சைனஸ் துவாரங்களே.
இந்த துவாரங்களின் வழியாக தொற்று நோய்க்கிருமிகள் உடலுக்குள் மிகவும் எளிமையாக சென்று விடுகிறது. அதனால் தான் மிகுந்த தலைவலி மற்றும் முக வீக்கம் ஏற்படுகிறது.
இவ்வகையான தலையில் நீர் கோர்த்தல், அதனால் ஏற்படும் தலைவலி மற்றும் முக வீக்கம் போன்றவற்றிற்கு சுக்கை உரசி பற்று போடுதல் மிகவும் சரியான வைத்தியம்.
சுக்கை நன்கு உரசி பொடியாக்கி, இந்த பொடியை மிதமான சூட்டில் உள்ள தண்ணீருடன் சேர்த்து அதனை ஒரு நல்ல கலவை (பேஸ்ட்) போன்ற பதத்திற்கு கலந்து வைத்துக் கொள்ள வேண்டும். (சுக்குப்பொடி கடைகளில் கிடைக்கிறது அல்லது சுக்கை அப்படியே மஞ்சள் உரசும் கல்லில் தேய்த்தும் அந்த கலவையை பயன்படுத்தலாம்).
இந்த கலவையை நம்முடைய இரண்டு காதுகளுக்கு பின்புறமும் தடவிக் கொள்ளலாம். மற்றும் இரண்டு பக்க நெற்றிப் பொட்டுகளிலும் பூசிக்கொள்ளலாம்.
இப்படி ஒரு நாளில் 3 – 4 தடவை பூசிக் கொள்வதால் தலைபாரம், தலை நீர் ஏற்றம், அதனால் ஏற்படும் நிற்காத தலைவலி, மற்றும் காய்ச்சல் அனைத்திற்கும் உடனடி நிவாரணம் கிடைக்கிறது.
இந்தப் பொடியை குறிப்பிட்ட இடங்களில் பூசிக் கொள்வதால் எந்த ஒரு பக்க விளைவுகளும் கிடையாது.