Keto Diet – Advantages and Disadvantage
Keto Diet - Advantages and Disadvantages “Ketogenic...
“உன்னையே நீ அறிவாய்!” – கிரேக்கப் பேரறிஞர் சாக்ரடீஸ்.
“உன்னை அறிந்தால்.. நீ உன்னை அறிந்தால்… இந்த உலகத்தில் போராடலாம். உயர்ந்தாலும்… தாழ்ந்தாலும்… தலை வணங்காமல் நீ வாழலாம்” – கவியரசு கண்ணதாசன்.
தன்னை அறிவது என்பது ஏதோ ஞானிகள், சித்தர்கள் மற்றும் துறவியர்கள் சம்பந்தப்பட்டது என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.
அப்படி அல்ல!
தன்னை அறிதல் மனிதர்களுக்கு மிக முக்கியமானது என்பதை நாம் முதலில் தெரிந்துகொள்ளவேண்டும். தன்னை அறிதல் என்பது சில நேரங்களில் சுய அறிவு அல்லது சுய அலசல் என்றும் அழைக்கப்படுகிறது. ஒருவர் தன்னைப் பற்றி அதிகம் அறிய, அறிய அவரால் வாழ்க்கையின் மாற்றங்களுக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்ள இயலுகிறது.
“ஏதிலார் குற்றம்போல் தம் குற்றம் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு”
முன்பின் தெரியாத ஒரு மனிதனின் தவறு உனக்கு தெரிவது போல் உன்னுடைய தவறுகள் உனக்கு தெரியும் என்றால் அப்புறம் வாழ்க்கையில் எந்த தீமையும் வராது என்கிறார் திருவள்ளுவர்.
மனிதன் தனக்குள் அமிழ்ந்து தன்னைத் தேட பொறுமை, மனவுறுதி, தீவிரம் எல்லாமே வேண்டும்.
தன்னை உணர்தல் என்பது துறவியின் அம்சம் அல்ல. அது தெளிவின் அம்சம்.
ஒரு மனிதன் தன்னை உணர்ந்தவன் ஆக மாறும் போது தன்னை சுற்றி உள்ள பிரபஞ்சம் முழுவதையும் தனக்குள் உணர்கிறான்; அவன் எல்லோரையும் தன்வசம் ஈர்க்கிறான். எல்லோரையும் தனக்குள்ளே பார்க்கிறான் தன்னை உணர்ந்த மனிதனின் ஆளுமை சமூகத்தில் பரவுகிறது.
சுலபம். நான் அறிந்ததை என்னால் முடிந்த அளவு சுருக்கமாக தங்களுக்கு விளக்க முயற்சிக்கிறேன்.
1)உண்பதும், உறங்குவதும், கலவி புரிவதும், சண்டையிடுவதும் ஆகிய மிருக குணம்…
2) விஷமம் செய்வது, ஏமாற்றுவது, பித்தலாட்டங்கள் செய்யும் அரக்க குணம் மற்றும்…
3) அன்பு, கருணை, இரக்கம், கொடை, பிறர்க்கு உதவி போன்ற தெய்வ குணம் கொண்டது.
மேற்கண்ட பண்புகளில் தற்செயலானவை எவை? இன்றியமையாதவை எவை? தவிர்க்கப்பட வேண்டியவை எவை ?என்பதை பகுத்து உணர்ந்து மிருக மற்றும் அரக்க குணங்களின் மேல் மனதை ஆட்சி அதிகாரம் செய்து கட்டுப்படுத்த முற்படுவதே தன்னை அறிதல் ஆகும்.
அதாவது ஒருவன் தனது இயல்பை உள்ளவாறு அறியும் அறிவைப் பெற்று விடுவானாயின், அவன் தன்னை பிறர் போற்றும் அளவிற்கு உயர்ந்து இருப்பான் என்பது இதன் பொருள்.
தன்னை அறிந்து இன்னும் இதுபோன்ற பல பலன்களையும் அனுபவித்து நல்வாழ்வு வாழ்வோம்.
வ.போ.அலுவலரின் நே.மு. உதவியாளர் (ஓய்வு)
படித்தல், எழுதுதல்.
1 Comment
Ays Abdhul
என்னை நான் எப்படி உணர்வேன்
Reply