பாட்டி வைத்தியம் – தலை முடி நன்கு செழித்து அடர்த்தியாக வளர
காலங்காலமாக மருதாணி இலைகளை நாம் பயன்படுத்தி வருகிறோம். உடல் சூட்டை தணிக்க வல்லது. மருதாணியியிட கைகள் அபரிதமான அழகு. இவ்விலைகளை நாம் தலை முடி செழித்து வளரவும் பயன்பத்தலாம்.
தலை முடி நன்கு செழித்து அடர்த்தியாக வளர –
செய்முறை:
இரு கை கொள்ளும் அளவிற்கு மருதாணி இலைகளை எடுத்து அதை நன்கு மைய அரைத்து வைத்துக் கொள்ளவும்.
பின்பு அதனை 250 மில்லி லிட்டர் தூய தேங்காய் எண்ணெயில் கலந்து அதனை குறைந்த தீயில் நன்கு காய்ச்சி எடுக்கவும்.
தீயில் காய்ச்சும் பொழுது இந்த எண்ணெயில் பச்சை நிறம் மாறாமல் பார்த்துக் கொள்ளவும்.
காய்ச்சி எடுத்த எண்ணெயை நன்கு குளிரும் வரை பொறுத்திருந்து பின்பு அதனை வடிகட்டி பயன்படுத்தலாம்.
உபயோகிக்கும் முறை:
மேலே குறிப்பிட்ட முறையில் தயாரித்த எண்ணையை தினம்தோறும் தலைக்கு தடவலாம்.
பயன்கள்:
மருதாணி இயற்கையிலேயே உடலுக்கு குளிர்ச்சியைத் தந்து உடலின் வெப்பத்தையும் உடலிலுள்ள பித்தத்தையும் தணிக்கும் ஆற்றல் உடையது. ஆதலால் இதனை தூயத் தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தினமும் உபயோகிக்கும் பொழுது மயிர்க்கால்களில் ஊட்டம் கொடுத்து தலைமுடி செழித்து வளர உதவி செய்கிறது .
அது மட்டுமல்லாது உடல் சூட்டை தணிக்கவும் உடலில் உள்ள அதிகமான பித்தத்தினால் ஏற்படும் இளநரையை தடுக்கவும் பயன்படுகிறது. மருதாணி இலையை தேங்காய் எண்ணெய்யில் காய்ச்சி பயன்படுத்துவதால் தலை முடி வளர்ச்சிக்கு தேவையான இன்னும் அதிகமான போஷாக்கை கொடுக்கிறது.
இதனால் முடி நன்கு செழித்து வளர்வது மட்டுமல்லாது அதற்கு நல்ல ஒரு பளபளப்பு தன்மையையும் கொடுக்கிறது.
பின்குறிப்பு:
இந்த எண்ணெயை கண்ணாடி ஜாரில் வைத்து பயன்படுத்த வேண்டும். இந்த எண்ணெயைப் பயன்படுத்துவதால் வேறு எந்த பக்கவிளைவுகளும் ஏற்படாது.
3 Comments