உ டல் நலக் குறிப்புகள் – தூக்கம்
இரவு ஒன்பது மணிக்கே படுத்து காலை ஐந்து மணிக்கு எழுந்த பழைய காலம் நினைவிருக்கிறதா? அடுத்த நாள் தேர்வு என்றால் கூட இரவெல்லாம் கண் விழித்துப் படித்த் நினைவில்லை…
அடுத்து வானொலியில் இரவு பாடல் கேட்கும் பழக்கம் வந்தது. சென்னை வானொலியிலும் இலங்கை வானொலியிலும் அரை அரை மணி நேரமாக தொடர்ந்து திரைப்பாடல்கள் ஒலிக்கும். இரவின் அமைதியில் விளம்பரங்கள் இல்லாமல் இசை ஒலிப்பது ஒரு இனிய அனுபவம். இதனாலேயே இரவுத்தூக்கம் தள்ளிப்போனது.
பிறகு தொலைக்காட்சி. முதலில் பொதிகை மட்டும் அதுவும் இரவு ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நிறுத்தி விட்டு காலையில் துவங்கும். பின்பு நாள் முழுதும் பல அலைவரிசை ஒளிபரப்பு வந்து இரவுத்தூக்கம் நடு இரவுக்கு மேலும் தள்ளிப் போனது.
தகவல் தொழில் துறையின் தாக்கத்தில் இரவு பகல் என்பதே மறந்து போனது . காலை ஒன்பது மணிக்குப் படுக்கைக்குப் போய், மாலை ஐந்து ஆறு மணிக்கு எழுவது இயல்பான ஒன்றாகி விட்டது. அந்தத் துறையைத் தாண்டி பொதுவாக எல்லோருக்கும் பரவி விட்டது.
அதிலும் குறிப்பாக மாணவர்களுக்கும இரவு முழுதும் கண் விழித்துப்படித்தால்தான் அடுத்த நாள் தேர்வு எழுத முடியும் என்ற நிலை.
இது பழக்கமாகிவிட்டது, இதனால் உடல் நலம் பெரிதாக பாதிக்கப்படவில்லை என்று ஒரு கருத்து சொல்லப்படுகிறது.bஇது சரி என ஒத்துக்கொள்ள முடியவில்லை.
கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை. நரற்பது வயதில் போட்ட கண்ணாடி இப்போது நாலு வயதிலேயே வந்து விட்டது. போகிற போக்கைப் பார்த்தால் காதுக் கருவிகளும் இயல்பான ஒன்றாகி விடும் போல் இருக்கிறது. அந்த அளவுக்கு விளம்பரங்கள்
இவையெல்லாம் காலத்தின் கட்டாயம், தவிர்க்க முடியாதவை.
இந்த வரையறைக்குள் தூக்கம் பற்றி ஒரு சில கருத்துகளையே சொல்லமுடியும்.
உங்கள் உடல் நிலை, பணியின் தன்மை வயது இவற்றைப் பொறுத்து ஒரு நாளைக்கு ஆறு முதல் எட்டு மணி நேரத் தூக்கம் அவசியம்.
இரவு பதினொரு மணி முதல் காலை மூன்று மணி வரை உடல் உறுப்புகள் புதுப்பிக்கப்படும் நேரம். அந்த நேரத்தில் தூக்கம் மிக மிக அவசியம் என்ற கருத்து வலியுறுத்தப்படுகிறது.
பகல் தூக்கம் கூடாது எனபது எந்த அளவுக்கு சரி என்று தெரியவில்லை.
தூங்கும் அறை முழுதும் இருட்டாக இருக்கவேண்டும், அப்போதுதான் உடல் நலத்துக்கு மிக அவசியமான மெலோடினின் சுரக்கும் என்று ஒரு கருத்து தற்போது பரவலாகப் பேசப்படுகிறது.
இதுவும் எந்த அளவுக்கு சரி என்பது தெரியவில்லை.
குளிரூட்டியும் மின்விசிறியும் இல்லாத காலத்தில் நம் முன்னோர்கள் காற்றோட்டமான இடத்தில்தான் தூங்கி இருப்பார்கள். அங்கு காற்றோடு வானத்து ஒளியும் இருக்கும்
நம்மை விட நம் முன்னோர்கள் நீண்டகாலம் நலமாக வாழ்ந்தார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.
சரி தூக்கம் வராவிட்டால் என்ன செய்வது ? எளிதாகத் தோன்றும் மிகப் பெரிய வினா.
நான் கேள்விப்பட்ட , படித்த சில வழிகள்.
- இரவு படுக்கும் நேரத்துக்கு ஒரு மணி நேரம் முன்பு, உணவு உண்டு விடுங்கள் . தொலைக்கட்சியையும் மூடி விடுங்கள்
- குளிர்ந்த நீரில் முகம் கை கால் கழுவி விட்டுப் படுங்கள்
- தலையணையின் அடியில் படிக்காரம் ஒரு துண்டு வைத்துக்கொள்ளுங்கள் (தலையணை தேவையா இல்லையா என்பது மற்றுமொரு கேள்வி)
- உள்ளங்காலில் சிறிது எண்ணெய் தேய்த்துக் கொள்ளுங்கள்
- தூக்கம் வரும் வரை எதாவது படித்துக்கொண்டிருங்கள்
ஆழ்ந்த தூக்கம், நல்ல பசி இவை நல்ல உடல் நிலையின் அறிகுறிகள்.
இனிய கனவுகளுடன் கூடிய நல்ல தூக்கம் வர வாழ்த்துகள்!!!
Author Profile
P. Sherfuddin B.Sc.
Dip in Acupuncture
P.G.Dip in PKT
M.Sc., 1) Yoga. 2) Varma and Thokkanam Science 3)Memory Development and PN
sherfuddinp.blogspot.com