தொண்டை கரகரப்பு,
பாட்டி வைத்தியம் - தொ...
முட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் தனியாக பிரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும். பின்பு பாசிப்பயறை ஒரு அகலமான சில்வர் அல்லது கண்ணாடி தட்டில் பரப்பி அதனுடன் வெள்ளை முட்டை கருவை அனைத்து பாசி பயிரிலும் நன்றாக கலந்து பின் அதை காயவிடவும்.நன்றாக காய்ந்த பாசிப்பயறை மிக்ஸியில் நன்கு அரைத்து எடுத்து மாவாக்கி வைத்துக் கொள்ளவும்.
அரைத்த மாவிலிருந்து தேவையான அளவு மாவை எடுத்து அதனுடன் அவரவர் சருமத்திற்கு ஏற்ப காய்ச்சாத பால் அல்லது பாலாடை அல்லது தயிர் சேர்த்து கலந்து குளிப்பதற்கு முன் முகம் கை கால்களில் தேய்த்து குளிக்கலாம்.
இந்த பொடியினை வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் பயன்படுத்துவதால் நல்ல பலனைப் பெறலாம்.
இந்தப் பொடி நமது மேனிக்கு இயற்கையான ஒரு நல்ல பொலிவையும், மென்மையையும் தரவல்லது. அதுமட்டுமல்லாது தேவையில்லாத நாட்பட்ட அழுக்குகளையும் போக்கும் ஒரு நல்ல இயற்கை மருந்து.
பாசிப்பயறை முட்டையுடன் பயன்படுத்துவதால் அதிகமாக எந்த ஒரு பக்க விளைவுகளும் இல்லை.