காய்ச்சல் வரும்பொழுது சிறு சிறிதாக சுடு தண்ணீர் அடிக்கடி குடித்து வர சூடு தணியும்.
எண்ணெய் தேய்த்து தலைக்கு குளிக்கும் பொழுது, எந்த எண்ணையாக இருந்தாலும் (தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் அல்லது நல்லெண்ணெய்) காய்ச்சி ஆறிய பின் தேய்த்து குளித்தல் முக்கியம்.
வாரம் ஒரு அல்லது இரு முறை குழந்தைகளுக்கு சிறிது சாதத்தில் ஓமம் வறுத்து நெய்யோடு பிசைந்து கொடுக்க வாயு தொல்லை வராது.
அதிகமாகவோ அல்லது அசைவ உணவு சாப்பிட்ட பின், ஒரு அரை ஸ்பூன் அளவு சீரகத்தை தண்ணீரோடு விழுங்கவும் (மாத்திரை சாப்பிடுவது போல), அல்லது சோம்பை வாயில் வைத்து மெதுவாக மெல்லவும். ஜீரணம் எளிதாகும்.
சாயங்கால நேரத்தில் தூங்குவதை தவிர்த்தல் நல்லது. அந்தி நேரத்தில் தூங்க புத்தி மந்தமாகும் என்பது முன்னோர் வாக்கு.
தாளிக்கும் பொழுது கடுகு கருக கூடாது. கருகிய கடுகு மிகவும் தீங்கானது.
சாதத்தை சூடு செய்து சாப்பிடக்கூடாது.
வரும் ஒரு முறையேனும் துளசி, ஓமவல்லி (கற்பூரவல்லி) மிளகு, இஞ்சி, பூண்டு, சீரகம், சோம்பு ஆகியவற்றில் சிலதையேனும் வைத்து கஷாயம் காய்ச்சி குடித்தால் ஜீரண கோளாறு, வாயு தொல்லை போன்றவை தீர்வதுடன் சளி, காய்ச்சல் போன்ற கிருமி தொற்று நோய்களும் தொற்றாமல் இருக்கும்.
மருதாணி இலைகளை அரைத்து உள்ளங்கால்களில் சிறிதாக வைத்து வர உடல் சூடு குறையும்.
1 Comment