உடல் பலம் பெற 8 வழ
உடல் பலம் பெற வழிகள...
மழைக்காலம் மற்றும் பனிக்காலம் ஆகிய காலங்களில் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் அனைவருக்கும் நரம்பு சம்பந்தப்பட்ட நிறைய பிரச்சனைகள் வரும். அதில் மிகவும் சாதாரணமாக வரும் பிரச்சினை காது வலி.
இதற்கு எந்த ஒரு வைத்தியமும் வெகு விரைவாகவும் நிரந்தரமாகவும் எடுபடாது. அதற்காகவே என்று ஒரு கை வைத்தியம் உள்ளது. அதுதான் வாழை மட்டைச்சாறு.
வாழை மட்டையை எடுத்து அதனை தீயில் நன்கு வாட்டி அதன் மேல் இருந்து வரும் சாறை பிழிந்து ஐந்து முதல் பத்து சொட்டு வரை இரவில் காதில் ஊற்றினால் நாட்பட்ட காது வலியும் ஓரிரு நாட்களிலேயே குணமாகும்.
உடம்பு குளிர்ச்சியால் ஏற்படும் காது வலி, மற்றும் மிகுந்த நேரம் நீரில் குளித்தால் ஏற்படும் காது வலி, கடல் கரையில் விளையாடினால் ஏற்படும் காது வலி, கிணற்றுக்குள் அதிக நேரம் நீச்சல் அடிப்பதால் ஏற்படும் காது வலி, குளிக்கும் பொழுது காதிற்குள் தண்ணீர் சென்றதால் ஏற்படும் காது வலி ஆகிய அனைத்து காது வலிக்கும் வாழைமட்டை சாறு கை கண்ட மருந்து.
மிகவும் வெப்பம் வாய்ந்த தமிழ்நாட்டில் அக்டோபர் மாதம் முதல் நன்கு மழை பெய்ய ஆரம்பித்து அது அடுத்த இரண்டு மாதங்களில் அதாவது டிசம்பர் முதல் பிப்ரவரி வரையிலான மாதங்களில் காலை மற்றும் மாலையில் தட்பவெப்பம் மாறி அதிக பனி ஏற்படும்.
இதனால் நமது தோல் சுருங்குதல், தோல் வெடிப்பு, பித்த வெடிப்பு, காது வலி, சளி தும்மல், பல் வலி போன்ற பல பிரச்சனைகள் அதிகமாக வரும். முக்கியமாக குழந்தைகளை எடுத்துக் கொண்டால் அவர்கள் அதிக நேரம் சாயங்காலம் பனியில் விளையாடிவிட்டு வரும்பொழுது அல்லது தண்ணீரில் வெகு நேரம் விளையாடிவிட்டு வரும் பொழுது காது வலியால் துடிப்பதை காண முடியும்.
ஆனால் இதற்காக அனேக மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் காது வலிக்கான சொட்டு மருந்து வெகுவிரைவாகவோ அல்லது நிரந்தரமாகவோ காது வலியை நிறுத்தாது. மேலே குறிப்பிட்ட பல பிரச்சினைகளை சமீப காலமாக பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கோ அல்லது தங்களுக்கோ ஏற்பட்டு அதனை சரி செய்ய ஒரு நிரந்தர தீர்வை தேடிக் கொண்டிருப்பீர்கள். அவர்களுக்காகவே நம்முடைய நம்முடைய பாரம்பரிய கைமருத்துவத்தில் காது வலிக்கு வாழை மட்டை சாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
The Information provided here by MomsQnA site is just for educational purpose only. This Information should not be used for diagnosis or treatment. And it cannot be taken as medical advice or any replacement of any clinical treatments.