பாசிப் பயறு, முட்
பாட்டி வைத்தியம் - பா...
சின்ன வெங்காயத்தை மேல் தோலை நீக்கி நன்கு அலசி ,கணு நீக்கி அதனை நன்கு பொடித்த கல் உப்பை தொட்டு உண்டால் உடம்பில் ஏற்படும் ஒவ்வாமை தீரும்.
சாம்பல் பூசணிக்காயை மேல் தோல் நீக்கி உள்ளே உள்ள சதைப் பற்றை நன்கு கசக்கி 15 மில்லி லிட்டர் சாறெடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்பு ஓரிதழ் சிகப்பு செம்பருத்தி பூ எண்ணிக்கை 10 எடுத்து அதனை நன்கு கசக்கி சாருபிழிந்து எடுத்துகொள்ள வேண்டும்.
இவ்வாறு எடுத்துக் கொண்ட சாம்பல் பூசணிக்காய் சாறு 15 மிலி லிட்டர் மற்றும் 10 செம்பருத்தி பூ சாறு இரண்டையும் சேர்த்து காலை மாலை சாப்பிட்டு வர மேற்கூறிய எந்த ஒரு காரணத்தினால் ஒவ்வாமை ஏற்பட்டு இருந்தாலும் அது நீங்கும்.
சமூலம்- மூலிகைச் செடியின் எல்லாப் பாகங்களும் சேர்ந்தது.
நீர் முள்ளி செடியின் அனைத்து பாகங்களையும் ( செடி செடியுடன் கூடிய வேர், பூ, இலை, மற்றும் தண்டு) நன்கு அலசி எடுத்து அதனை நன்கு இடித்து 200 கிராம் தனியே வைத்துக் கொள்ள வேண்டும். அதனை 2 லிட்டர் தண்ணீரில் போட்டு அதனுடன் நெருஞ்சில் விதை, சோம்பு, கொத்தமல்லி ( அனைத்தும் சேர்த்து 50 கிராம்) இவை அனைத்தையும் இடித்து அந்தப் பொடியை ஏற்கனவே தயாரித்து வைத்துள்ள நீரில் போட்டு கலந்து நன்கு காய்ச்ச வேண்டும். இரண்டு லிட்டர் தண்ணீர் அரை லிட்டராக வரும் வரை நன்கு காய்ச்சி எடுக்க வேண்டும்.
இப்படி காய்ச்சி எடுத்த தண்ணீரை 125 மில்லி லிட்டர் தினமும் காலை, மதியம், மாலை மற்றும் இரவு என 4 வேலையாக கொடுத்துவர வெறும் மூன்று நாட்களில் எந்த ஒரு காரணத்தினால் ஒவ்வாமை ஏற்பட்டு இருந்தாலும் அது முற்றிலும் நீங்கி உடல் நலம் பெறும்.
மேலே கூறிய மூலிகை மருந்தை எடுத்துக் கொள்கையில் உணவில் புளி தவிர்ப்பது நல்லது. இதனால் வேறு ஏதும் பக்க விளைவுகள், ஒவ்வாமை ஏற்பட வாய்ப்பில்லை.
1 Comment