கண் பார்வை அதிகரிக்க இயற்கை மருத்துவம்
கண்பார்வை கோளாறு என்பது பரவலான ஒன்று. வயோதிகம், சத்து குறைபாடு, அதிக நேரம் கண் விழிப்பது, அதீதமாக மொபைல் போன்கள் அல்லது கம்ப்யூட்டர் உபயோகிப்பது என் பல பல காரணங்களால் கண்களில் கோளாறு ஏற்படுகின்றது. கண்ணில் நீர் வடிதல், மங்கலான பார்வை, அடிக்கடி வரும் தலை வலி ஆகியவை கண் பார்வை குறைபாடுகளுக்கான அறிகுறிகள் ஆகும்.
பொதுவான சில கண்பார்வை கோளாறுகள் சில.
- தூர பார்வை
- கிட்ட பார்வை
- கேட்டராக்ட்
- வெள்ளெழுத்து
- இரட்டை பார்வை
- பார்வை மங்குதல்
இவை அனைத்திற்கும் மருத்துவ ஆலோசனை மற்றும் வைத்தியம் இன்றியமையாதது என்றாலும் சில சில உணவு மற்றும் தினசரி பழக்கங்கள் கண்டிப்பாக இக்கண் கோளாறுகளை சரி செய்ய உதவும். கண்ணுக்கு பயிற்சி, நல்ல தேவையான தூக்கம், கேரட் மற்றும் கீரை வகைகளை அதிகமா உணவில் சேர்த்தல், மொபைல் போன்கள் அல்லது கம்ப்யூட்டர் தேவைக்கேற்ப மட்டும் உபயோகித்தல் போன்றவை அவற்றில் அடங்கும்.
இதோ இப்பொழுது கண் கோளாறை சரி செய்ய உதவும் பாதாம் பொடி எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.
கண் பார்வை அதிகரிக்க இயற்கை மருத்துவம்
தேவையான பொருட்கள்-
பாதாம் – 100 கிராம்
சோம்பு – 50 கிராம்
கற்கண்டு – 20 கிராம்
வெள்ளை மிளகு – 10 கிராம்
செய்முறை-
- மேற்கூறிய பொருட்கள் அனைத்தையும் மிக்சியில் போட்டு நன்கு பொடியாக பொடித்து கொள்ளவும்.
- தினமும் இரவு உணவிற்கு பின், ஒரு டம்ளர் பாலில் ஒரு டீஸ்பூன் கலந்து குடிக்கவும்.
- தினசரி குடித்து வர 15 நாட்களில் கூட வித்தியாசத்தை உணரலாம்.
குறிப்புகள்-
- பால் குடிக்கும் பழக்கம் இல்லாதவர்கள், வெதுவெதுப்பான தண்ணீரில் கலந்து குடிக்கலாம்.
- சிறியவர் முதல் பெரியவர் வரை எல்லா வயதினரும் குடிக்கலாம்.
- சிறு குழந்தைகள் எனில் அரை டீஸ்பூன் எடுத்துக்கொண்டால் போதும்.
- சர்க்கரை போன்ற நோயுள்ளவர்கள் கூட எடுத்து கொள்ளலாம்.
- சர்க்கரை கண்டிப்பாக சேர்க்க கூடாது.
- வெள்ளை மிளகிற்கு பதில் வெள்ளை மிளகு பொடி சேர்த்து கொள்ளலாம்.
- வெள்ளை மிளகு என்பது கண் பறவையை மேம்படுத்த மிகவும் உதவ கூடியது.
- மேல குறிப்பிட்ட அளவுகளில் சரியாக சேர்க்கவும்.
- சோம்பு வாசனை தூக்கலாக இருக்கும் பட்சத்தில், சிறிதளவு குறைத்துக்கொள்ளலாம்.
- தொழில்நுட்ப யுகமான இக்காலத்தில் குழந்தைகளுக்கு மிகவும் உதவக் கூடியது இந்த பாதாம் பொடி.