காய்ச்சல் மருந்
காய்ச்சல் மருந்து க...
தினசரி பழக்கமாக தினமும் நிறைய தண்ணீர் குடித்து வந்தாலே கிட்னி கற்கள் போன்ற உபாதைகளை தவிர்க்கலாம்.
முள்ளங்கி ஒரு மிகச்சிறந்த ஊட்டச்சத்துக்கள் நிறைந்த காய் வகையை சேர்ந்ததாகும். மிகவும் குறைந்த அளவு பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் மட்டுமே உடைய காய்கறி என்பதால் இதனை பயன்படுத்துவதால் சிறுநீரகக் கல் போன்ற பிரச்சனைகளுக்கு நல்ல பலனை அளிக்கிறது.
வெளிப்புறத் தோலை சீவி நன்கு கழுவி சுத்தம் செய்த முள்ளங்கி களை எடுத்துக் கொள்ளவும். முள்ளங்கியை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி பின் அதனை சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து , வடிகட்டி சாறு எடுத்துக் கொள்ளவேண்டும்.
அந்த முள்ளங்கி சாறை தினமும் காலை வெறும் வயிற்றில் தொடர்ந்து 14-21 நாட்கள் குடித்து வர வேண்டும்.
இப்படி முள்ளங்கி சாறை தினமும் வெறும் வயிற்றில் குடிப்பதினால் சிறுநீரகக் கல் சிறிது சிறிதாக வெளியேற்றப்பட்டு அதனுடைய அளவு மிக வேகமாக குறைந்து முழுவதுமாக நீங்கப் பெறுகிறது.
பீன்ஸை நன்கு அலசி பின் அதனுடன் ஒரு டம்ளர் அளவு தண்ணீர் சேர்த்து, நன்கு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். வேகவைத்து எடுத்த பீன்ஸை நன்கு கடைந்து கொள்ள வேண்டும். கடைந்த பீன்ஸ் தண்ணீரை வடிகட்டி குடிக்கவும்.
வலி ஏற்படும் வேளையில் ஒரு நாளில் அவ்வப்பொழுது 3-4 முறை செய்து குடித்து வர வலி நீங்கும். நாட்பட்ட நிவாரணமும் அளிக்கும்.
முள்ளங்கிச் சாறை குடிக்கும் பொழுது அது உங்களது தொண்டைப் பகுதிக்கு அசௌகரியமாக இருக்கும். எரிவை உணரலாம். முள்ளங்கி சாறை குடிக்க முடியாதவர்கள் வேகவைத்த பீன்ஸ் சாறை பயன்படுத்தலாம்.
முள்ளங்கியின் சாறு எரிவை தந்தாலும் கற்கள் வெளியேற மிகவும் உதவுகிறது. மேலும் திரும்பவும் கற்கள் உண்டாவதற்கான வாய்ப்புகளும் மிகவும் குறைவு.
5 Comments