தொண்டை கரகரப்பு,
பாட்டி வைத்தியம் - தொ...
கோரைக்கிழங்கு மற்றும் தூய்மையான தேன்.
கோரைக் கிழங்கை நன்கு கழுவி காயவைத்து அதை சூரணம் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும். (சூரணம் செய்வது எப்படி)
நன்கு பொடித்து சூரணம் ஆக்கிய கோரைக்கிழங்கை தினமும் காலை மற்றும் மாலை ஒரு கிராம் அளவு சிறிது தூயதேனில் கலந்து உட்கொள்ள புத்தி கூர்மை அடையும்.
இந்த மருந்தை எவர் வேண்டுமானாலும் உட்கொள்ளலாம், சிறியோர், பெரியோர் என்ற எந்த பாகுபாடும் இல்லை. இந்த மருந்தை உட்கொள்வதால் புத்திக்கூர்மை அடைந்து ஞாபகத் திறன் அதிகரித்து அவர்களுக்கு சொல் திறனும், பேச்சுத்திறனும், எழுத்துத் திறனும் மிக சீராகி மூளைக்கு ஒரு நல்ல பலத்தையும் அளிக்கிறது.
வல்லாரை, பசு நெய்
வல்லாரை இலைகளை பறித்து அதனை சூரணமாக்கி கொள்ளவும்.
வல்லாரை இலை சூரணம் 50 மில்லி கிராம் எடுத்து அதனை காலை மாலைகளில் தூய்மையான பசு நெய்யுடன் கலந்து உட்கொள்ள வேண்டும்.
இப்படி வல்லாரை இலை சூரணம் பசு நெய்யுடன் உட்கொள்வதால் மூளையிலுள்ள நரம்புகள் மிகுந்த பலப்படுத்தப்பட்டு, அதனால் மூளை சுறுசுறுப்படையும். அதுமட்டுமல்லாது சிந்தனைத் திறனும் அதிகரிக்கும். இந்த மருந்தை எவர் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். சிறியோர் பெரியோர் என்ற எந்த பாகுபாடும் கிடையாது.
3 Comments