மலை பூண்டு என்றால் 5-8 பல், சாதாரண பூண்டு என்றால் 10 -13 பல் எடுத்துக்கொள்ளவும்.
பூண்டை வெறும் தவாவில் வைத்து நன்கு சுட்டு பின் தோல் நீக்கி வெறும் வாயில் அப்படியே சாப்பிட்டு வர உங்கள் குழந்தைக்கு நல்ல அரோக்யமான தாய்ப்பால் கிடைப்பதுடன் குழந்தையின் எடையும் அதிகரிக்கும்.
அதன் ருசி பிடிக்காவிட்டால் சிறிது சக்கரை தொட்டும் சாப்பிடலாம்.
இதன் பலன்கள்:
பூண்டில் இருக்கும் galactagogue எனும் திரவம் நமது மனித உடலில் உள்ள தாய்பால் சுரப்பிகளை தூண்டி அதிக தாய்பால் சுரப்பதற்கு முக்கிய தூண்டுகோலாக உள்ளது. இதனால் தாய்மார்களுக்கு அதிகம் பால் சுரப்பதுடன் உடலில் தங்கியுள்ள தேவையற்ற கொழுப்புகள் வெகுவாக கரையவும் காரணமாக அமைகிறது.