பாட்டி வைத்தியம் – மாதவிலக்கு சிக்கல்கள் நீங்க
தேவையான பொருட்கள்:
- கணுநீக்கிய அருகம்புல் 30 கிராம்
- மாதுளை இலை 30 கிராம்
செய்முறை:
கணு நீக்கிய அருகம்புல் 30 கிராம் இதனை நன்கு அலசி எடுத்துக் கொள்ளவும் அதனுடன் நன்கு அலசி எடுத்த மாதுளை இலை 30 கிராம் இரண்டையும் அரை லிட்டர் தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து அதனை கால் லிட்டராக வரும் வரை காய்ச்சி எடுக்கவும்.
இப்படி காய்ச்சி எடுத்த 50 மில்லி லிட்டர் நீரை நன்கு வடிகட்டி பின் அதனை அளவாக பயன்படுத்தலாம்.
உபயோகிக்கும் முறை:
அருகம்புல் மற்றும் மாதுளை இலையை சேர்த்து நன்கு காய்ச்சி எடுத்த இந்த மருத்துவ குணம் நிறைந்த நீரை இரண்டு மணி நேரத்திற்கு ஒரு முறை சிறிது சிறிதாக குடித்து வரவேண்டும்.
பயன்கள்:
- இப்படி அருகம்புல்லையும் மாதுளை இலையையும் நன்கு காய்ச்சி வடிகட்டிய இந்த நீரை சிறிது சிறிதாக இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை குடித்து வந்தால் காது ,மூக்கு , ஆசனவாய் ஆகிய இடங்களில் ஏற்படும் ரத்த ஒழுக்கு நிற்கும்.
- உடலிலுள்ள மிக அதிகமான வெப்பம் தணியும்.
- மாதவிடாய் நாட்களில் ஏற்படும் அனைத்து விதமான சிக்கல்களும் நீங்கி மாதவிலக்கு சீராகும்.
- சில பெண்களுக்கு சரியான இடைவெளியில் மாதவிடாய் வருவதில்லை, அதுமட்டுமல்லாது மாதவிடாய் காலங்களில் பலவிதமான பிரச்சினைகள் ஏற்படும்.
- இவை அனைத்திற்கும் இந்த வகையான வைத்தியம் ஒரு நிரந்தர தீர்வாக அமையும்.