Myths and Facts about Nonstick Cookware
Myths and Facts about Non-Stick Cookware Nonstick Cook...
அக்குபஞ்சர்பற்றிய சென்ற பதிவில் உச்சந்தலைப் புள்ளி DU20
பற்றிப் பார்த்தோம் (Click – உடல் நலத்துக்கு உச்சந்தலையை அழுத்தவும்)
இப்போது அப்படியே கீழே இறங்கி உள்ளங்கால் புள்ளி K1 பற்றிப் பார்ப்.போம்
குழந்தைகளுக்கோ, சிறுவர்களுக்கோ பெரியவர்களுக்கோ உடல் நிலை சரியில்லாமல் குளிர் காய்ச்சல் போல் இருந்தால் உள்ளங்காலில் வெறும் கையினாலோ அல்லது நீலகிரித் தைலம் போன்ற மூலிகை மருந்துகளைத் தடவி யோ பரபரவென்று தேய்த்து விடுவார்கள். அப்படி பண்ணும்போது உள்ளங்காலில் உள்ள பல அழுத்தப்புள்ளிகள் தூண்டப்படும்.
அவற்றில் ஒன்று K1.
உள்ளங்காலின் நடுப்பகுதியில் இரு பாதங்களிலும் அமைந்துள்ளது
மிக எளிதில் காணலாம். (படம் பார்த்தால் தெளிவாகும்)
தூக்கமின்மை (insomnia), தலைவலி, காய்ச்சல், தலை சுற்றல் (dizziness) போன்றவற்றை சரி செய்வதில் நீண்ட காலமாக K1 புள்ளி பயன்பட்டு வருகிறது. மேலும், முதுகு வலி, கருவுறுவதில் பிரச்சனை (Infertility), நினைவிழத்தல் போன்ற பிரச்சனைகளும் இந்தப் புள்ளியை அழுத்தி சரி செய்யப்பட்டு வருகின்றன.
இது மூக்குக்கும் மேலுதடுக்கும் இடையில் உள்ளது.
மேலுதடுக்கு மேலே நடுவில் உள்ள சிறிய பள்ளம் மூக்கைத் தொடும் இடத்தில் இருக்கிறது
இதுவும் K1 போல மயக்கம் , வலிப்பு போன்ற நோய்களுக்கு அவசர கால முதலுதவிப் புள்ளியாகும்.
அதோடு முகவாதம் ,முதுகு வலி போன்ற நோய்களுக்கு பயன்படுகிறது. மதுவினால் உண்டாகும் மயக்கத்துக்கு இந்தப் புள்ளிகள் உதவாது.
அழுத்தப்புள்ளிகள் பற்றி , அவற்றால் தீரும் நோய்கள் பற்றியும் படிக்கும் போது இதெல்லாம் உண்மையிலியே நடக்குமா என்ற ஒரு எண்ணம் மனதில் இயல்பாக உண்டாகும்.
நமக்குத் தெரிந்து மருத்துவம் என்றால் உடனே நூற்றுக்கணக்கில், ஆயிரக் கணக்கில், லட்சக் கணக்கில் ஆலோசனைக் கட்டணம், மருத்துவப் பரிசோதனைகள், மருந்து மாத்திரை, அறுவை சிகிச்சை என்று செலவழிக்க வேண்டும்.
“Doctor treats God Cures”
இதுதான் எந்த மருத்துவத்துக்கும் அடிப்படை.
அக்குபஞ்சர் மருத்துவர்கள் இது நமக்கு இறைவன் கொடுத்த மிகப்பெரிய வரம் என்ற புரிதலோடு , நோயாளியின் மேல் ஒரு உண்மையான பாசம், பரிவோடு பணியாற்றினால , இறைவன் அருளால் நல்லதே நடக்கும்.
M.Sc. 1. Yoga 2. Varma and Thokkanam Science 3. Memory Dev and Psycho Neurobics
P.G.Diploma in Pancha Karma Therapy
Diploma in Acupuncture