தலைமுடி பராமரிப
பாட்டி வைத்தியம் - தல...
கருவேப்பிலை ஒரு கைப்பிடி.
கறிவேப்பிலையை நன்கு அலசி எடுத்துக்கொள்ளவும். அதனை சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து பின் வடிகட்டி ஒரு குவளை நீர் வரும் வரை எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த கருவேப்பிலை மருந்தை கர்ப்பிணி பெண்கள் ஐந்து அல்லது ஏழாம் மாதத்தில் மூன்று நாட்களுக்கு மட்டும் வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்ளலாம்.
இந்த மருந்தை எடுத்துக்கொள்ளும் நாட்களில் மட்டும் அசைவ உணவுகள், எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகள், மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஆகியவைகளை தவிர்ப்பது முக்கியம்.
கர்ப்பிணி பெண்களுக்கு ஐந்தாம் மற்றும் ஏழாவது மாதம் இந்த கருவேப்பிலை மருந்தை கொடுப்பது வழக்கம். இந்த மருந்து வயிற்றுக்குள் வளரும் குழந்தையின் போதிய இரும்பு சத்திற்காகவும், அந்தக் குழந்தையை ஆரோக்கியமாக பெற்றெடுக்க தாயின் நலனுக்காகவும் கொடுக்கப்படுகிறது.
கருவேப்பிலை எடுத்துக்கொள்வதால் தாய்க்கும் சேய்க்கும் ஏராளமான நன்மைகள் ஏற்படுகின்றன. கர்ப்பிணி பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் பொதுவாக ஏற்படும் ரத்தசோகை, அதனால் ஏற்படும் அதிகமான தலை முடி உதிர்வு போன்றவற்றையும் இவை கட்டுப்படுத்துகின்றன.
வயிற்றில் உள்ள சிசுவிற்கும் போதிய ரத்த ஓட்டம் மற்றும் அதன் வளர்ச்சிக்குத் தேவையான இரும்பு சத்துக்கள் அனைத்தும் இதனால் பெறப்படுகிறது.
2 Comments