கல்லீரலை பலப்படுத்தும் கீழாநெல்லி

இது ஒரு சிறிய செடி, வயல் வரப்பு, வாய்க்கால் கரை என எல்லா இடங்களிலும் தானாக வளரும்.
சிறிய இலைகள் , புளிய இலை போல் இரண்டு வரிசையாக. இலைகளுக்குக் கீழே சிறிய பூக்களும் சின்னஞ்சிறு உருண்டையாக காய்களும் பார்க்க அழகாக இருக்கும். இதனாலேயே இது கீழாநெல்லி என்றழைக்கப்படுகிறது. மிகக் கசப்பான சுவை கொண்டது.
எண்ணற்ற மருத்துவ குணங்கள் கொண்டது. கல்லீரல் சார்ந்த நோய்களுக்கு மிகவும் நல்லது. 
கல்லீரலை பலப்படுத்தும் கீழாநெல்லி 

மேலும் படிக்க – கர்ப்பிணிகளுக்கான கருவேப்பிலை மருந்து

கீழாநெல்லி பயன்கள்

  • மஞ்சள் காமாலை, கல்லீரல் தொடர்பான நோய்கள் இவற்றிற்கு மிகச் சிறந்த தீர்வாக அறியப்படுகிறது.
  • கண் நோய்கள், தலைவலி, உடல் சூடு, தோல் நோய்கள் , தலை முடி பராமரிப்பு இவற்றிற்கும் பயன்படும்.
  • சிறுநீரைப்பெருக்கி சிறுநீரகம் தொடர்பான நோய்களை சரி செய்யும்.
  • சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும்.
  • மலட்டுத் தன்மையைப் போக்கும்.

கீழாநெல்லியை எளிதாக உட்கொள்ள வழிகள் சில..

வரும்முன் காக்க என்பதிற்கேற்ப, கீழாநெல்லி கீரையை உணவில் அவ்வப்போது சேர்த்து வர, கல்லீரல், சிறுநீரகம் சம்பந்தமான பல நோய்களை தவிர்க்கலாம்.

  • கீழாநெல்லியை மையாக அரைத்து சாறாக்கி அப்படியே குடிக்கலாம்.
  • பசலை, முடக்கத்தான் கீரைகளை போல அரைத்து மாவில் கலந்து தோசையாக சாப்பிடலாம்.
  • பொடி செய்து மோரிலோ, வெந்நீரிலோ கலந்து குடிக்கலாம்.

மேலும் படிக்க – தொண்டை கரகரப்பு,தொண்டை பிடிப்பு – உடனடி நிவாரணம்

இங்கே சூப் செய்வது எப்படி என பார்க்கலாம்….

கீழாநெல்லி சூப்

பொருட்கள் –

• கீழாநெல்லி – 30-40 gms
• சீரகம் – ½ tsp
• மிளகு – ½ tsp
• இஞ்சி – 2 அங்குலம்
• பூண்டு – 2 பல்
• தண்ணீர் – 1.5 to 2 கப்
• உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை –

  • வாணலியில், 1 ஸ்பூன் அளவு எண்ணெய் விட்டு, அது சூடானபின் சீரகம் போட்டு வெடித்த பின், பொடியாக நறுக்கிய இஞ்சி மற்றும் பூண்டு பற்களை போடவும்.
  • நன்றாக கலந்து 2 நிமிடங்களுக்கு நல்ல மணம் வரும் வரை வதக்கவும்.
  • இதனிடையில், நன்கு நறுக்கிய கீழாநெல்லி கீரையை வதங்கிய இஞ்சி பூண்டின் மீது போடவும். (கீழாநெல்லி காம்போடு சாப்பிட கூடியது, நறுக்கி சமைத்தால் உண்பது சுலபம்.)
  • தேவையான ளவு தண்ணீர் சேர்த்து கலக்கவும்.
  • மிதமான தணலில் 5-6 நிமிடங்கள் வரை கொதிக்க விட, கீரின் சத்தும் சாரும் நன்கு தண்ணீரில் இறங்கிவிடும்.
  • அடுப்பை அணைத்து, சூடாக பரிமாறவும்.
இந்தப்பதிவு ஒரு மருத்துவக் குறிப்பு அல்ல.
அங்கிங்கு கண்ணில் படும் செடி கொடிகளை மூளிகைகளாக அறியர்ச் செய்யவே இந்தப்பதிவு
தகுதிவாய்ந்த, அனுபவம் மிக்க மருத்துவர்களைக் கலந்தாலோசித்து அவர்கள் அறிவுரைப்படி மருத்துவம் செய்து கொண்டு நலமுடன் வளமுடன் வாழுங்கள்

மேலும் படிக்க – சிறுநீரகக் கற்கள் கரைந்து சரியாக

குறிப்பு –

எந்த கீரையையும் இரவில் உண்பதை தவிர்த்தல் மிகவும் நல்லது.

Follow us on Insta – Moms QnA – Instagram and Facebook – Moms QnA – Facebook 

Author Profile

P. Sherfuddin B.Sc.

Dip in Acupuncture
P.G.Dip in PKT
M.Sc., 1) Yoga.  2) Varma and Thokkanam Science  3)Memory Development and PN
sherfuddinp.blogspot.com

Share This Article

Related Post

மூத்த குடிமக்கள் நலன் - குறிப்புகள் 

மூத்த குடிமக்கள

என்றும் மாறா இளமை: ம...

உச்சிக்குழியின் பயன்கள்

உடல் நலத்துக்கு

உடல் நலத்துக்கு உச்...

நல்வாழ்வு குறிப

நல்வாழ்வு குறிப்புக...

Leave a Comment

error

Enjoyed this blog? Please spread the word :)