லிங்க முத்திரை
இப்போதைய அவசர அவசியத் தேவயான ஆக்சிஜன் அளவை அதிகரிக்கும் லிங்க முத்ரா பற்றி இங்கு பார்ப்போம்.
ஆக்ஸிஜன் அளவு 90க்கும் குறைவாக இருந்தால், நுரையீரலில் பாதிப்பு ஏற்படும். லிங்க முத்திரை நுரையீரலை பாதுகாக்க உதவும்.
லிங்க முத்திரை செய்யும் முறை
- வசதியாக உட்கார்ந்து கொண்டு கண்களை மூடிக்கொண்டு ஓரிரு முறை ஆழ்ந்து மூச்சு விடுங்கள் (Deep Breathing)
- உள்ளங்கைகளை இறுக்கமாக ஓன்று சேர்த்து விரல்களை ஒன்றோடு ஓன்று பின்னிக்கொள்ளுங்கள்
- இடது பெருவிரல் மேலே நீட்டிகொண்டிருக்க வேண்டும். வலது பெருவிரலும் வலது ஆட்காட்டி விரலும் இடது பெரு விரலைச் சுற்றி அழுத்தமாக இருக்க வேண்டும்.
அப்படியே முடிந்தால் ஒரு நாளைக்கு ஒரு முறை ஒரு முப்பது நிமிடம் வைத்திருங்கள் .
முடியாவிட்டால் ஒரு பத்துப் பன்னிரண்டு நிமிடம். இது போல் ஒரு நாளைக்கு மூன்று முறை செய்யுங்கள். மூச்சு இயல்பானதாக் இருக்கட்டும்.
இந்த முத்திரையை செய்வதற்கு பத்மாசனம், வஜ்ராசனம் சிறந்தவையாகும். அவ்வாறு உட்கார இயலாதவர்கள் சாதாரண நிலையில் அமர்ந்து கொள்ளலாம்.
லிங்க முத்திரை – பயன்கள்
இந்திய தொழில் நுட்பக் கழகம்(IIT) சென்னை உயிரியல் மருத்துவ பொறிஇயல் துறை (Bio Medical Engineering Dept), லிங்க முத்திரை பற்றி ஒரு ஆய்வில் முத்திரையின் பயன்களாகக் கண்டவை
- ஆக்சிஜன் அளவு, உடல் வெப்பம்,குருதி ஓட்டம் அதிகரிக்கிறது
- நுரையீரல் விரிவடைகிறது
- அதோடு உடல் வெப்பமும் அதிகரிக்கும்போது. நுரையீரலில் தேங்கியுள்ள நீர் கரைந்து சுவாசிக்கும் திறன் இ யல்பாக அதிகரிக்கிறது
- உடல் பருமனைக் குறைக்கவும் லிங்க முத்ரா பயன்படுகிறது
காசு பணம் செலவில்லை. மருந்து மாத்திரை இல்லை. அதனால் பக்க விளைவுகள் ஏதும் இல்லை. உடலை வருத்தும் பயிற்சிகளும் இல்லை.
பிறகென்ன செய்துதான் பார்ப்போமே!!
Author Profile
P. Sherfuddin B.Sc.
Dip in Acupuncture
P.G.Dip in PKT
M.Sc., 1) Yoga. 2) Varma and Thokkanam Science 3)Memory Development and PN
sherfuddinp.blogspot.com