மணத்தக்காளி கீரை சட்னி

ஆண்டாண்டு காலமாக நமது மண்ணில் விளைகின்ற உடலுக்கு மிகவும் உயிர்சத்துக்கள் தரக்கூடிய கீரை வகைகளில் முக்கியமான ஒன்று மணத்தக்காளி கீரை. ஆனால், காலமாற்றத்தினால் இன்று மிகவும் குறைவாகவே அறியப்படுகிறது, உண்ணப்படுகிறது. 

வெளி உணவு, காரமான உணவு மற்றும் ரசாயனங்களால் வளர்க்கப்பட்ட பயிர்கள் ஆகியவற்றின் காரணமாக வயிற்று புண் மற்றும் செரிமான பிரச்சனைகள் மக்களிடையே பெருகி வருகின்றன. இதை வழக்கமாக உண்டு வர, பல உடல் குறிப்பாக வயிறு மற்றும் செரிமான பிரச்சனைகள் வராமல் இருக்க பெருமளவு உதவுகிறது.

கல்லீரலை பலப்படுத்தும் கீழாநெல்லி – கீழாநெல்லி சூப்

மணத்தக்காளி கீரை பயன்கள்

  1. மணத்தக்காளி கீரையில் அதிக அளவில் வைட்டமின் ஏ, பி மற்றும் சி, ஐயர்ன், கால்சியம், பாஸ்பரஸ் ஆகிய சத்துக்கள் இருக்கின்றன.
  2. மணத்தக்காளி செடியின் கீரை மட்டுமல்லாது தண்டு, காய், பழம் ஆகியவையும் சமையலிலும், மருத்துவத்திலும் வெகுவாக பயன்படுகின்றன.
  3. வயிற்றுப்புண்களை ஆற்ற உதவும்.
  4. மலச்சிக்கல் பிரச்சனையை தீர்க்கிறது.
  5. கல்லீரல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு அருமருந்தாக அமைகிறது.
  6. உடலில் உள்ள கெட்ட நீரை வெளியாக்க உதவுகிறது.

வாழைத்தண்டு சூப்

மணத்தக்காளி கீரை சட்னி

மணத்தக்காளி கீரை சட்னி செய்வது எப்படி என பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

மணத்தக்காளி கீரை – 1 கைப்பிடி
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 2
தேங்காய் துருவல் – 1 கப்
சின்ன வெங்காயம் – 50 கிராம்
தக்காளி – அரை பழம்
கறிவேப்பிலை – சிறிதளவு
கொத்தமல்லித்தழை – சிறிதளவு
புளி – சிறிய நெல்லி அளவு
எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
பெருங்காயம் – 1 சிட்டிகை
உப்பு – தேவையான அளவு

செய்முறை

  • ஒரு வாணலியில் ஒரு டீ ஸ்பூன் எண்ணெய் சேர்த்து, உளுத்தம்பருப்பை லேசாகவும், பொன்னிறமாகவும் வறுத்து கொள்ளவும்.
  • வறுத்த பருப்பை தனியே எடுத்து வைத்து கொள்ளவும்.
  • அதே வாணலியில் மீதமுள்ள எண்ணையை சேர்த்து சூடானபின், உப்பு தவிர்த்து மேலே குறிப்பிட்டுள்ள பொருட்களை எல்லாம் சேர்த்து மிதமாக வதக்கவும்.
  • அத்துடன், வறுத்த பருப்பை சேர்த்து கிளறவும்.
  • சூடு ஆறியபின், மையாக அரைக்க சுவையான மணத்தக்காளி கீரை சட்னி தயார்,

உடல் நலம் – இயற்கை மருத்துவ குறிப்புகள்

குறிப்பு – மண் சட்டியில் வதக்கி, அம்மியில் அரைத்து சாப்பிட இன்னும் சுவை மற்றும் அதிக நலனும்.

Follow us on Insta – Moms QnA – Instagram and Facebook – Moms QnA – Facebook

Share This Article

Related Post

Juices

புதிய சுவையில் வ

புதிய சுவையில் ஜூஸ் ...

panakam recipe

Summer Special Drink: Traditional Panakam

Summer Special Drink: Traditional Panakam In Sanskrit,...

Chicken soup

Easy No Oil Chicken Soup (Mutton Soup)

No Oil Chicken Soup (Mutton Soup) Chicken Soup is a gr...

Leave a Comment

error

Enjoyed this blog? Please spread the word :)