நல வாழ்வு – பல் பராமரிப்பு
பல்லுப்போனால் சொல்லுப்போச்சு என்று ஒரு சொல்வழக்கு உண்டு
போவது சொல் மட்டும்தானா ? எல்லாப் பற்களும் விழுந்த ஒருவருக்கு முழுமையாக பல் கட்ட எவ்வளவு பணம் தேவைப்படும் ?
இது பற்றி சிந்தித்திக்கொண்டே மேலே போவோம்…
முகத்துக்கு அழகு தருவதில் கண்களுக்கு அடுத்து பற்கள்தான். முத்துப்பல் வரிசை பளீரென மின்னும்படி சிரிக்கும் யாரும் அழகாகத்தான் இருப்பார்கள். சிரிப்பினாலே புகழ்பெற்ற நடிகைகளும் உண்டு.
சரி பல்லைப் பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்?
வலைதலத்தில் தேடினால் நூற்றுகணக்கில் கிடைக்கும்,-பல்லைப்பாதுகாப்பது எப்படி., பல் விழாமல் பாதுகாக்க , என்று பல பல தலைப்புகளில்…
இங்கு நான் சொல்ல நினைப்பது சொல்ல வருவது, எளிதான செயல் முறைகள்.
முதலில் பல்பொடியா பற்பசையா என்றால் எனது தேர்வு பல்பொடிதான்.
நெல் உமியை கருக்கி பொடியாக்கி பல் துலக்கிய நம் முன்னோர்கள் பல் நன்றாகவே இருந்தது. கோபால் பல்பொடி, நஞ்சன்கூடு,பயோரியா என பல பொடிகள்.
இப்போது சித்தம் , ஆயுர்வேதம், வேதம் விஞ்ஞானம் என்று பல பெயர்களில் பல பல்பொடிகள் பற்பசைகள் (நான் பயன்படுத்துவது விக்கோ பல்பொடி).
பற்பசையில் நுரை வருவதற்காக பல வேதிப்பொருட்கள் கலந்திருக்கும்.
நுரை வராத போர்ஹான்ஸ் பசையை விட நுரை வரும் பற்பசையே நன்றாக விற்பனையாகிறது.
பற்பசை விற்பனை அதிகரிக்க, அதிகரிக்க பல் மருத்துவர்கள் எண்ணிக்கையும் அதிகரிப்பது போல் தோன்றுகிறது.
ஆலும் வேம்பும் பல்லுக்கு உறுதிதான். ஆனால் அவற்றைத் தாங்கும் அளவுக்கு நம் பல் ஈறுகள் உறுதியாக இருக்கிறதா என்பது தெரியாமல் ஐமபது அறுபது வயதில் இதெல்லாம் முயற்சி செய்து வாயைப் புண்ணாக்கிக் கொள்ளவேண்டாம்.
பல் பராமரிப்பு குறிப்புகள்
- இரவிலும், காலையிலும் ஒழுங்காகப் பல் துலக்கினால் பல பிரச்சினைகள் விலகி விடும்.
- எதுவும் சாப்பிடுவது, குடிப்பதற்கு முன் கொஞ்சம் தண்ணீர் குடித்து விட்டு சாப்பிடலாம்.
- சாப்பிட்டு, குடித்து சிறிது நேரம் கழித்து வாயை நன்றாகக் கொப்பளித்து விட வேண்டும்.
- கூடிய மட்டும் கூரான பொருட்களால் (பல்குச்சி(tooth pick உட்பட) பல் குத்துவதை தவிர்ப்பது நல்லது.
- பல் துலக்கிய பின் கை விரல்களால் பற்களையும் ஈறுகளையும் நன்றாகத் தடவிக் கொடுக்கவேண்டும் (Massage)
- மாதம் ஒரு முறை வெந்நீரில் உப்புக்கலந்து வாய் கொப்பளிக்கலாம்
- படிக்காரம், அல்லது potassium permanganate கலந்த வெந்நீரிலும் கொப்பளிக்கலாம்
இதை எல்லாம் தாண்டி ஒரு உலகளாவிய விதி இருக்கிறது, அதுதான் இறைவன் நாட்டம் என்பது.
நிறைவாக துவக்கத்தில் கேட்ட வினா – முழுதாக ஒருவருக்கு பல் கட்ட எவ்வளவு செலவாகும்?
பத்துப் பதினைந்து ரூபாய்க்கு கட்டலாம். ஆனால் ஓரளவு தரமான நிரந்தர பல் வரிசை கட்ட நாலைந்து லட்சம், ஆம் லட்சம் ஆகும் என்கிறார்கள் பல் மருத்துவர்கள், இது ஆரம்ப விலைதானாம்.. தரத்தைப் பொருத்து வானமே எல்லை என்கிறார்கள்.
பல் கட்டும் பணத்தில் ஒரு சிறிய வீடே கட்டி விடலாம் போலிருக்கிறது.
பற்பசை உற்பத்தி நிறுவனம் ஓன்று விற்பனையைப் பெருக்க தன் பணியாளர்களைக கலந்தாலோசித்தது. ஒருவர் சொன்ன மிக எளிதான வழியை ஏற்றுக்கொண்டு செயல்படுத்தி விறபனையை பன்மடங்கு பெருக்கியது.
அவர் சொன்ன வழி இதுதான்…
நம் மக்களுக்கு பல் தூரிகை(brush) முழுதும் பற்பசை இருந்தால்தான் பல் துலக்கிய ஒரு நிறைவு ஏற்படும். எனவே பற்பசை குழாயின் (tube) வாயை சற்று அகலப்படுத்தி வைத்துவிட்டால் விற்பனை தன்னால் பெருகும்
Author Profile
P. Sherfuddin
B.Sc (Chemistry)
Dip in Mgmt
PG Dip in NGO Mgmt
Dip in Acupuncture
PG Dip in Panchakarma therapy
M.Sc yoga
M.Sc Varma and Thokkanam science
M.Sc memory Dev and PN
sherfuddinp.blogspot.com
1 Comment
P SHERFUDDIN
Thanks
Reply