பெற்றோரின் அரவணைப்பு – தாயின் மடியில்

“எங்க அம்மா அப்பா இருந்திருந்தால் என்னை இப்படி விட்டிருப்பார்களா?”

என்று அலுத்துக்கொண்ட அந்த குழந்தைக்கு என்ன வயது என்று நினைக்கிறீர்கள்?

வெறும் எண்பதே எண்பதுதான்.

பெற்றோரின் அரவணைப்பு

பெற்றோரின் அரவணைப்பு 

இரண்டாம் உலகப்போர் உச்ச கட்டத்தில் இருக்கும்போது இங்கிலாந்து அரசு தன் நாட்டை, நாட்டின் அடுத்த தலை முறையைக் காப்பற்ற ஒரு நடவடிக்கையில் இறங்கியது. நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் சிறு குழந்தைகள் –கைக் குழந்தைகளை ஓன்று சேர்த்து மிகப் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு போனார்கள்.

அங்கு சத்தான உணவு ,சிறப்பான மருத்துவ கவனிப்பு , சுத்தம் சுகாதாரம் என குழந்தைகள் நன்கு வளர்வதற்குத் தேவையான அனைத்து வசதிகளும் மிகச் சிறப்பாக அமைக்கப்பட்டன.

குழந்தைகள் கொழுகொழுவென்று காம்ப்ளான் பேபி போல் வேகமாக வளரும் என்று எண்ணினார்கள்.

ஆனால் நடந்தது இதற்கு முற்றிலும் மாறாக இருந்தது. குழந்தைகள் நலிந்து மெலிநது கொண்டே போயின.

குழந்தைகளுக்கு நற்பண்புகள் எனும் விதையிடல்

எங்கே தவறு, என்ன காரணம் என்று கண்டறிய ஒரு மருத்துவக் குழு அமைக்கப்பட்டது. நலிவுக்கும் வளர்ச்சி இன்மைக்கும் க்கும் அந்தக்குழு கண்ட காரணம்-

“Lack of parental care- particularly mothers touch “

“பெற்றோரின் கவனிப்பு, குறிப்பாக தாயின் அரவணைப்பு இன்மையே காரணம்“

இந்தப் பெற்றோரின் கவனிப்பும் தாயின் அரவணைப்பும் ஆறறிவு படைத்த மனிதர் முதல் விலங்கு ,பறவை பூச்சி என எல்லா உயிர்களுக்கும் பொதுவானது.

ஆனால்,

“நங்கள் இருவரும்  வேலைக்குப் போகிறேன் அதனால் பிள்ளையை (களை ) சரிவரக் கவனிக்க முடியவில்லை “

“ஒரு பிள்ளையோடு நிறுத்திக்கொண்டோம் “

என்றெல்லாம் சாக்குப் போக்கு சொல்லும் ஒரே ஒரு உயிரினம் நம் மனித இனம்தான்.

வேறு எந்த உயிரினமும் இது போல் காரணம் காட்டி தன் குஞ்சுகளை குட்டிகளை கவனிப்பதை குறைத்துக்கொள்ளவவில்லை. எலி போன்ற உயிரினங்கள் குட்டிகளின் எண்ணிக்கையை குறைத்துக் கொண்டதாகவும் தெரியவில்லை

உண்மையில், இதெல்லாம் அதிகப்படியான அறிவினாலா அல்லது அறியாமையினாலா?

மனிதனுக்கு இறைவன் கொடுத்த அதிகப்படியான அறிவுதான் இப்படி எல்லாம் சிந்திக்க வைக்கிறது போலும்.

பெற்றோரின் அரவணைப்பு கிடைக்காவிட்டால்?

அன்பு, அரவணைப்பு காட்ட முடியாதபோது அன்பளிப்புகள் அதுவும் விலை உயர்ந்த அன்பளிப்புகள் கொடுத்து அதை ஈடு செய்து விடலாம் என்பது பல பெற்றறோரின் எண்ணம் – ஒரு மிகத் தவறானது.

சரி எந்த வயது வரை, எவ்வளவு அன்பு செலுத்த வேண்டும்?

அன்பிற்கு ஏது அளவுகோல், வயது வரையறை?

கைக்குழந்தை முதல் கம்பூன்றும் வயது  வரை தாயன்பு தேவைப்படுகிறது  என்பதை மேலே பார்த்தோம்.

  • பிள்ளைகள் எதிர்பார்க்கும் அளவுக்கு பெற்றோர அரவணைப்பு, அன்பு கிடைக்காவிட்டால் எங்கு அது  கிடைப்பதுபோல் தோன்றுகிறதோ  அங்கே அவர்கள் மனம் பாய்கிறது. அது உண்மை அன்பா என்பதை பகுத்துப் பார்க்கும் மனநிலை பலருக்கு இருப்பதில்லை.
  • இதன் விளைவு, – கூடா நட்பு, கூடா ஒழுக்கம் அதனால் ஏற்படும் பணத்தேவை பணம் கிடைக்க தவறான வழி என ஒரு சுழலில் சிக்கிக் கொள்கிறார்கள்.
  • பதின்மர் பருவத்தில் கொலை, கொள்ளை , போதை மருந்து, பாலியல் குற்றங்கள் பெருகிக்கொண்டே வருகின்றன
  • குறிப்பாக் நன்கு படித்த, வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் குற்றங்களில் ஈடுபடுவது காவல்  துறைக்கு மிகப் பெரிய அறைகூவலாக இருக்கிறது

டீன் ஏஜ் எனும் பதின்ம பருவம் – பகுதி 1

என் காதில் ,கவனத்தில் விழுந்த சில நிகழ்வுகள்

நிகழ்வு 1

நான் பணிபுரிந்த ஊரில் குடியிருந்த வீட்டின் உரிமையாளர் – நல்ல வசதி , மேலும் செல்வம் சேர்க்க வெளிநாட்டில் பணி. அவரைக் “கண்காணிக்க” (ஆம் அ ப்படிதான் அந்தப்பெண் சொன்னார் ) அவர் துணைவியும் வெளிநாட்டில்.

வெளியூரில் கல்லூரியில் படிக்கும் ஒரே மகனுக்கு அங்கே வசதியான வீடு, வாகனம், சமைக்க, பணி புரிய ஆட்கள் எல்லாம் அமைத்துக் கொடுத்தார்கள். பையனும் பணச் செருக்கு சிறிதும் இல்லாமல் எளிமையாகத்தான் இருந்தார். ஆனால் காலப்போக்கில் அவர் நடை உடையில், நட்பு வட்டத்தில் விரும்பத்தகாத மாற்றங்கள்.

பையனின் தந்தை வெளிநாட்டிலிருந்து வந்திருந்தபோது நான் இதுபற்றி அவரிடம் எடுத்துச் சொன்னேன். குறிப்பாக ஒரே பையனை தனியே விட்டு விட்டு ஏன் வெளிநாடு போக வேண்டும் என்று கேட்டேன்.

நான் பேசியதை அவர் விரும்பவில்லை. இப்போது உள்ள கால கட்டத்தில் அரசியல் தொடர்பு, அதன் விளைவான மாற்றங்கள் தேவைதான் என்று சொன்னார்.

மேலும் “சம்பாதிக்க வேண்டியது எவ்வளவோ இருக்கிறது, எனவே வெளி நாடு போவது காலத்தின் கட்டாயம்”,   என்றார்.

கொஞ்ச நாளில் நான் அங்கிருந்து வேறு ஊருக்கு மாற்றலாகிப் போய் விட்டேன்.

ஒரு 22 வயது இருக்கும் அந்தப் பையனுக்கு. அவர் காலமாகி விட்ட செய்தி  கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்தேன். இறப்பின் காரணம் தெரியவில்லை.

நிகழ்வு 2

பட்டப்பகலில் ஒரு பெருந்தொகை களவு போய்விட்டது ஒரு வீட்டில். தீவிர விசாரணையில் எடுத்தது அந்த வீட்டுச் சிறுவன்தான்  ஆம் சிறுவன்தான் – என்பது தெரிந்தது. கூடாநட்பில் ஏற்பட்ட வயதுக்கு மீறிய தீய பழக்கங்களுக்கு பணம் தேவைப்பட்டது

வீட்டுக்குத் தெரியாமல் நடந்த ஆண் பெண் உறவுகள் இப்போது ஒருபடி மேலே போய்  திருமணம் வரை வந்து விட்டது .அதற்குத் தேவையான பொருளை சொந்த வீட்டிலேயே எடுத்துக்கொள்ளும் துணிச்சல்.

இவை எல்லாவற்றிற்கும் பெற்றோரின் கவனக் குறைவு மட்டுமே காரணம் என்று சொல்ல முடியாது. ஆனால் அது ஒரு மிக மிக முக்கிய காரணம் என்பதையும் மறுக்க முடியாது.

வேலைக்குப்போவது, படிப்பது எல்லாம் தவறு இல்லை. குடும்பத்தைக் கவனிப்பது அதை விட முக்கியம்.

கைப்பேசி ஒரு பெரும் பிரச்சினையாக உருவாகி வருகிறது. முக நூல் கூட பல விரும்பத் தகாத காட்சிகளின் களமாகி விட்டது. யூ டியூப் , இணையம் – சொல்லவே வேண்டாம்.

இவற்றை எல்லாம் அரசு நினைத்தால் கட்டுப்படுத்தமுடியும் என்கிறார்கள்.

இதெல்லாம் நினைக்க அரசுக்கு ஏது நேரம் ?

டீன் ஏஜ் எனும் பதின்ம பருவம் – பகுதி 2

பெற்றோரின் அரவணைப்பு – சில குறிப்புகள் 

நம் குடும்பத்தை , நம் குழந்தைகளை நாம்தான் பார்த்துக்கொள்ளவேண்டும்.

  • தினமும் கொஞ்ச நேரமாவது பிள்ளைகளோடு மனம் விட்டுப் பேசுங்கள்
  • உங்கள் மேல் அக்கறை காட்ட எங்களை விட யாரும் கிடையாது என்பதை அவர்களுக்கு உணர்த்துங்கள்
  • அதே அக்கறையோடு அவர்களைக் கண்காணிக்கவும் செய்கிறோம் என்பதை தெளிவு படுத்துங்கள்
  • குறிப்பாக கைப்பேசியை கண்காணியுங்கள்
  • ஆண் பெண் உறவுகளை முடிந்தவரை கட்டுப்படுத்துங்கள்
  • தேவைக்கு மேல் பணம் கொடுத்துப் பழக்காதீர்கள்

“பெரியவரே! எந்தக் காலத்தில் நீங்கள் இருக்கிறீகள்?” என்று நீங்கள் கேட்பது காதில் விழுகிறது

எந்த காலத்திலும் நாலும் நாலும் எட்டுத்தான். மனக்கணக்காய் போட்டாலும் எழுதிப்பார்த்தாலும் விரல் விட்டு எண்ணினாலும் கணினியில் போட்டாலும் அது ஒன்பதாக மாறாது.

Follow us on Insta – Moms QnA – Instagram and Facebook – Moms QnA – Facebook 

Author Profile

P. Sherfuddin

M.Sc. 1. Yoga 2. Varma and Thokkanam Science 3. Memory Dev and Psycho Neurobics

P.G.Diploma in Pancha Karma Therapy

Diploma in Acupuncture

Share This Article

Related Post

Video Games And Children’s Psychology

Video Games And Children's Psychology Video games are ...

supporting children during exams

Supporting Children During Exams

Helping Children during Exams Exam time can be a stres...

How to teach kids money habits

How to Teach Kids Good Money Habits

MONEY Money is important. But Money is not everything....

Leave a Comment

error

Enjoyed this blog? Please spread the word :)