சின் முத்திரை (அ) ஞான முத்திரை)
இந்த முத்திரையை நிறைய படங்களில் பார்க்கலாம்.
புத்தர், இயேசு இன்னும் பல ஞானிகள் இந்த சின் முத்திரையை சில மாறுதல்களுடன் காண்பிப்பார்கள்.
இந்த முத்திரையில் கை விரல்கள் கீழ் நோக்கி இருந்தால் அது சின் முத்திரை.
கை விரல்கள் மேல் நோக்கி இருந்தால், அது ஞான முத்திரை
மிகச் சிறந்த முத்திரைகளில் இடம்பெறுகின்றன இந்த இரு முத்திரைகளும்.
சின் முத்திரை (ஞான முத்திரை) – செய்முறை
- பெரு விரல் (thumb )நுனியும் ஆட்காட்டி விரல் (index finger) நுனியும் ஒன்றை ஓன்று. அழுத்தாமல் தொடவேண்டும் .
- மற்ற மூன்று விரல்களும் நீட்டிய நிலையில் இருக்க வேண்டும்
- இரண்டு கைகளிலும் இது போல் செய்து கைகளை தளர்வாக தொடைகள் மேல் வைத்துக்கொள்ள வேண்டும்
- தளர்வாக அமர வேண்டும்.
- மூச்சு இயல்பான மூச்சு, சற்று ஆழமாக நிதானமாக. முதுகு வளையாமல், முகம் குனியாமல் நேர் கொண்ட பார்வையாக இருக்க வேண்டும்.
- நாற்காலியில் அமர்ந்து செய்தால் பாதங்கள் தரையில் பதிந்து இருக்க வேண்டும்.
ஒரு முறைக்கு பத்துப் பதினைந்து நிமிடங்களாக ஒரு நாளைக்கு மூன்று முறை செய்தால் நல்ல பலன் கிடைக்கும் என்கிறார்கள்.
இந்த முத்திரையில் கை விரல்கள் கீழ் நோக்கி இருந்தால் அது சின் முத்திரை.
கை விரல்கள் மேல் நோக்கி இருந்தால் அது ஞான முத்திரை
மிகச் சிறந்த முத்திரைகளில் இடம்பெறுகின்றன இந்த இரு முத்திரைகளும்.
சின் முத்திரை (ஞான முத்திரை) – பலன்கள்
- மன அழுத்தம் ,மனச் சோர்வு மன நலக் குறைவு நீக்கி மனதைத் தெளிவாக்கும்
- மனதை ஒரு நிலைப்படுத்தி நினைவுத் திறனை மேம்படுத்தும்
- உயர் குருதி அழுத்தம் (high blood pressure), தூக்கம் இல்லாமை (insomnia) சரியாகும்
முத்திரை பற்றிய முந்திய பதிவில் முத்திரைகள் எப்படி சக்தி ஓட்டப் பாதையை மாற்றுகின்றன என்பதை ஒரு எளிய பயிற்சி மூலம் அறியலாம் என்று எழுதியிருந்தேன்.
- விரல்கள் கீழ் நோக்கி இருக்கும் சின் முத்திரையில் நம்முடைய மூச்சுகாற்று வயிற்றைத் தாண்டி கீழே போவதை உணரலாம்.
- விரல்கள் மேல்நோக்கி இருக்கும் ஞான முத்திரையில் அது வயிற்றோடு நின்று விடுவதை உணரலாம்.
முத்திரைகளின் மிகப் பெரிய நன்மை – செய்ய மிக எளிது, பக்க விளைவு எதுவும் இல்லை
அதே நேரத்தில் they not replace your doctors treatment. rather supplement the treatment என்பதை நினைவில் நிறுத்திக்கொள்ள வேண்டும்.
Author Profile
P. Sherfuddin
M.Sc. 1. Yoga 2. Varma and Thokkanam Science 3. Memory Dev and Psycho Neurobics
P.G.Diploma in Pancha Karma Therapy
Diploma in Acupuncture
sherfuddinp.blogspot.com