பூப்பெய்திய பெண்குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து உணவுகள்

பூப்பெய்திய குழந்தைகளுக்கு உடல் வலுவாக இருக்க கடைபிடிக்க வேண்டிய உணவு மற்றும் கை மருத்துவக் குறிப்புகள்.

பெண் குழந்தைகள் 9 வயதிலிருந்து 14 வயதிற்குள் பூப்பெய்தி விடுகிறார்கள். ஆதலால் அவர்களுக்கு சத்துள்ள உணவுகள் கொடுத்து அவர்களுடைய எலும்பு மற்றும் உடலை வலுவாக்க வேண்டும். 

மேலும் படிக்க – பூப்படைதல் – தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் Part 1

அதுமட்டுமல்லாது அந்த வயதில் ஏற்படும் சிற்சில பிரச்சனைகளுக்கும், கருப்பை பிரச்சனைகளை தவிர்க்கவும், நாட்டு மருந்துகளை நம்முடைய முன்னோர்கள் கொடுத்து வந்தார்கள். அவற்றில் இன்றும் நடைமுறையில் உள்ள மருந்துகளையும் செய்யும் முறைகளையும் கீழே காண்க.

  • பொதுவாக ஒரு பெண் குழந்தை முதன்முதலில் மாதவிலக்கு உண்டாகி புஷ்பவதியாகும் தருணத்தில், அவளுக்கு ஏதேனும் ஒருவகை கீரை (நாட்டு கீரை வகைகளான தண்டுக்கீரை , அரைக்கீரை, சிறுகீரை) விதைகள் ஒரு டீஸ்பூன் அளவு எடுத்து அதனை ஒரு கிளாஸ் பாலுடன் கலந்து குடிக்கக் கொடுக்கலாம். திடிரென்று அவர்களுடைய உடலில் ஏற்பட்ட இந்த பருவ மாற்றத்தால் ஏற்படக்கூடிய வயிற்று வலி, உடல் உஷ்ணம் மற்றும் இதர உடல் உபாதைகளை பெருமளவு தவிர்க்கவோ குறைக்கவோ உதவும். வயிற்றை சுத்தம் செய்யவும், உடம்பில் உள்ள அசுத்தங்கள் அனைத்தும் வெளியேறவும் இந்த முறையை கையாண்டு வந்தார்கள்.
  • அடுத்து 7 அல்லது 9 நாட்களுக்கு அதி காலையில் வெறும் வயிற்றில்,ஒரு முட்டையை எடுத்து அதன் மேல் புறமாக உள்ள ஓட்டை மட்டும் உடைத்து அந்தப் பச்சை முட்டையை அப்படியே வயதிற்கு வந்த பெண்ணிற்கு குடிக்க கொடுப்பார்கள். அதே ஓட்டில் அதே அளவு காய்ச்சாத நல்லெண்ணையை ஊற்றி அதையும் அப்படியே குடிக்க கொடுப்பார்கள். இந்தப் பழக்கத்தை வயதிற்க்கு வந்த நாள் முதல் தொடர்ந்து 7 நாட்கள் தொடர வேண்டும்.   

இப்படி செய்வதால் பெண்கள் உடம்பில் தேவையான புரதச் சத்து, இரும்புச்சத்து மற்றும் கால்சியம் சத்து அனைத்தும் ஒருசேர கிடைக்கிறது. இதனை தொடர்ந்து ஏழு நாட்கள் செய்வதால் அவர்கள் உடல் இயற்கையிலேயே மிக வலிமை வாய்ந்ததாக எந்தவொரு நோய்த்தொற்றும் அதிகம் பாதிக்காதவாறு வழு பெறுகிறது. கருப்பை ஆரோக்கியத்திற்கும் மிகவும் உகந்தது 

  • அடுத்த முக்கியமான உணவு இன்றளவும் நம் வீடுகளில் செய்யப்படும் உளுந்தங்களி. உளுந்தங்களி என்பது உளுந்து ஒரு கப் அதனுடன் ஒரு டீஸ்பூன் வெந்தயம் இரண்டையும் சேர்த்து குறைந்தது ஆறு மணி நேரம் ஊற வைத்து, பின் நன்கு அரைத்து அதனை வாணலியில் வைத்து நன்கு களி கிண்டி அதனுடன் சிறிது வெல்லம் மற்றும் நல்லெண்ணெய் சேர்த்து சாப்பிடக் கொடுப்பது. இந்த உளுந்தங்களியை யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம். ஆண் பெண் இருபாலரும் சாப்பிடலாம். உளுந்து இயற்கையிலேயே உடல் எலும்பிற்கு நல்ல ஒரு வலிமையை தரக்கூடியதாகும். அதனுடன் சேர்த்து வெந்தயத்தையும் கொடுக்கும்பொழுது உடம்பில் உள்ள சூடு தணிக்கப்பட்டு… பித்தம் ,கபம், வாதம் அனைத்தும் சமநிலையில் நிலை நிறுத்தப்பட்டு உடம்பில் எந்த ஒரு நோய் தொற்றும் எளிதில் வராமல் இருக்க பெரிதும் உதவுகிறது. இனப்பெருக்க ஆரோக்கியத்திற்கு உகந்தது.

இந்த உளுந்தங்களியை 9 வயதிலிருந்து 60 வயது வரை யார் வேண்டுமானாலும் உண்ணலாம். இதனுடன் வெந்தயத்தை அதிகமாக்கி வெந்தயக்களி ஆகவும் உட்கொள்ளலாம். வாரத்தில் 2-3 முறையாவது எடுத்து கொள்வது மிகவும் பயனளிக்க வல்லது.

  • இப்படி உளுந்துக் களியை எடுத்துக் கொள்ள முடியாத பட்சத்தில் அதற்கு மாற்று வழியாக  உளுந்தை நன்கு வறுத்து அதனுடன் கறிவேப்பிலையையும் வறுத்து இட்லி போடி செய்வது போல் அரைத்து பொடித்து கொள்ளலாம்.

அந்தப் பொடியை அடிக்கடி உணவுடன் ஏதேனும் ஒரு வகையில் நல்லெண்ணை கலந்து சேர்த்துக் கொள்ளலாம். இட்லி, தோசை போன்ற காலை உணவுடன் இந்தப் பொடியை  அதனடன் எண்ணெய் சேர்த்து தொட்டு சாப்பிடலாம். 

மேலும் படிக்க – பூப்படைதல் 2 – பூப்படையும் நேரத்தில் உட்கொள்ள வேண்டிய சத்தான உணவுகள்

ஒரு பெண் குழந்தை 9 வயதிற்குப் பிறகு கண்டிப்பாக அவர்களுடைய உணவில் மிக அதிகமான இரும்புச்சத்து, கால்சியம் சத்து , புரதச்சத்து உள்ள உணவு வகைகளையும் கண்டிப்பாக தினம்தோறும் சேர்த்துக் கொள்ள வேண்டும். மேலே குறிப்பிட்ட குறிப்புகள் அல்லாமல் மற்ற உணவுப் பொருட்கள் ஆகிய காய்கறி, பழங்கள், கீரைகள், உலர் பழங்கள், அசைவ உணவுகள் மற்றும் அனைத்து சத்துமிக்க உணவு வகைகள் அனைத்தையும் சரி விகிதமாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.

மேலே குறிப்பிட்ட இந்த நான்கு பழக்கங்களும் இன்றும் பல குடும்பங்களில் தொன்று தொட்டு பல தலைமுறைகளாக பின்பற்றப்பட்டு வருகின்றன. இதனால் இந்தப் பெண்களுக்கு பிற்காலத்தில் கருப்பை சம்பந்தப்பட்ட எந்த பிரச்சனைகளும் வராமல், அவர்கள் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் நன்கு பக்குவப்பட்டு ஆரோக்கியமாக வாழ்கிறார்கள். குழந்தைப்பேறு எந்த ஒரு குறையும் இல்லாது கிடைக்கப் பெறுகிறது. குழந்தை பெற்றப் பின் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் தாயும் சேயும் நலமுடன் இருக்க இவ்வகையான பழங்கால உணவு பழக்க வழக்கங்களை கடைப்பிடிப்பதன் மூலம் நாம் நிச்சயமாக பயன்பெறலாம்.

Follow us on Insta – Moms QnA – Instagram and Facebook – Moms QnA – Facebook

Share This Article

Related Post

Puberty – Age, Signs and Symptoms

Puberty: First Periods - Age, Symptoms, Discussion With...

EArly Periods in girls

Early Puberty in Girls – Why and How to Avo

Menarche - Early Puberty in Girls – Causes, Problems ...

டீன் ஏஜ்

டீன் ஏஜ் எனும் பத

டீன் ஏஜ் - உங்கள் பிள...

Leave a Comment

error

Enjoyed this blog? Please spread the word :)