இளமை காக்கும் (கு
இளமை காக்கும் (குதிர...
“வயிறு நம் உயிரு” – என்ற தலைப்பில் பல ஆண்டுகள் முன்பு விகடனில் ஒரு தொடர் கட்டுரை. எழுதியவர் வயிற்று நோய் மருத்துவத்தில் புகழ் பெற்ற சிறப்பு நிபுணர். மிகப் பொருத்தமான தலைப்பு.
“வயிறு, செரிமான உறுப்புகள் சரியாக இயங்கினால் பெரும்பாலான நோய்கள் தவிர்க்கப்படும்
ஒரு நாளைக்கு மூன்று முறை- சிறப்பு
இரண்டு முறை – நலம்
ஒரு முறை –கட்டாயம்
இதெல்லாம் கேட்க நன்றாகத்தான் இருக்கிறது.
ஆனால் நடைமுறையில்?
தெரிந்தோ தெரியாமலோ , விரும்பியோ விரும்பாமலோ உணவுப் பழக்கத்தில், உண்ணும் நேரத்தில் தலை கீழ் மாற்றங்கள். அதற்கும் மேலாக வாழ்க்கை நடை முறை மாற்றங்கள். காலையில் தூங்கி மாலையில் எழுவது பலருக்கு இயல்பாகி விட்டது.
இவையெல்லாம் மாற்ற முடியாத மாற்றங்கள்!
தகவல் தொழில் நுட்பப் பணியாளரிடம் இரவு 10 மணிக்குப் படுத்து காலை 5 மணிக்கு எழுந்து விடு என்று சொல்லமுடியாது. ஏன்? மாணவர்கள், மூத்த குடி மக்கள் எல்லோரிடமும் இரவில் நீண்ட நேரம் விழித்திருக்கும் பழக்கம் வந்து விட்டது.
மாற்ற முடியாத மாற்றங்களை அப்படியே விட்டு விட்டு உடல் நலத்தை சரி செய்ய முயற்சிக்கலாம்.
அந்த வகையில் ஒரு எளிய முயற்சி முத்திரைகள்
முத்திரைகளின் சிறப்பு பற்றி பல முறை சொல்லியிருக்கிறேன் —
செய்வதற்கு எளிதானவை, கருவிகள், சிறப்பு உடைகள், இடம் எதுவும் தேவை இல்லை. பொருட் செலவு இல்லை. நமக்கு நாமே செய்து கொள்ளலாம்.
பயன்கள் நன்றாக இருக்கின்றன. பக்க விளைவுகள ஏதும் இல்லை.
இன்ற நாம் பார்க்கும் சுச்சி முத்திரை, நல வாழ்வின் உயிரான வயிறு, செரிமானம் சார்ந்த நோய்களை சரி செய்கிறது.
மூச்சை உள்ளே இழுக்கும்போது வலது கையை வலது பக்கம் நீட்டி வலது ஆள்காட்டி விரலை (index finger) நன்றாக நீட்டவும்.
இடது கையை இடது பக்கம் விரல்களை மூடியபடி நீட்டவும் விரலை நீட்ட வேண்டாம்.
இந்த நிலையில் 6 மூச்சுகள்
அடுத்து இடது கையை இடது பக்கம் நீட்டி ஆட்காட்டி விரலை நன்றாக நீட்டவும்.
வலது கையை வலது பக்கம் வெறுமனே விரலை நீட்டாமல் நீட்டவும்.
இந்த நிலையில் 6 மூச்சுகள்
நீட்டும் ஆள்காட்டி விரல் தவிர மற்ற எல்லா விரல்களும் இறுக்கமாக மூடியே இருக்க வேண்டும்
வலது அல்லது இடது எதாவது ஒரு கை ஆள்காட்டி விரல்தான் ஒரு நேரத்தில் நீட்டியிருக்க வேண்டும்.
படிக்க சற்று நீளமாக குழப்புவது போல் இருக்கும் செய்யத் துவங்கினால் எளிதாகி விடும்.
அதி காலையில் படுக்கையில் படுத்த நிலையிலும் செய்யலாம்.
முதல் நாள் செய்யும்போதே நல்ல பலன் தெரியும் என்கிறார்கள்.
காலை 7 மணிக்கு செய்தால் 9 மணிக்கு வயிறு சரியாகிவிடுமாம்.
நீங்கள் வழக்கமாக சாப்பிடும் மருந்து மாத்திரைகள், மருத்துவம் எதையும் தகுந்த மருத்துவ ஆலோசனை இல்லாமல் நிறுத்த வேண்டாம். MUDRAS are not substitutes, only supplements for your regular treatment.
M.Sc. 1. Yoga 2. Varma and Thokkanam Science 3. Memory Dev and Psycho Neurobics
P.G.Diploma in Pancha Karma Therapy
Diploma in Acupuncture