நல வாழ்வு – சூப்பர் ப்ரெயன் யோகா

Super Brain Yoga என்ற பெயரில் மேலை நாடுகளில் பரவலாக மிக அதிகமான கட்டணத்தில் சொல்லித் தரப்படும் பயிற்சி எது தெரியுமா?

நம் நாட்டில் பன்னெடுங்காலமாக ஒரு வழிபாட்டு முறையாகவும் தவறுக்கு தண்டனையாகவும் இருந்து இப்போது மறந்து . மறைந்து போன தோப்புக்கரணம் எனும் உக்கிதான்.

மேலும் படிக்க – ஆக்சிஜன் அளவை அதிகரிக்கும் லிங்க முத்திரை

இதன் செய்முறை பெரும்பாலும் பலருக்கும் தெரிந்திருக்கும்… எனவே சுருக்கமாக சொல்கிறேன்.

Super Brain Yoga

  • கால்களை சற்று அகலமாக விரித்து நேராக நிற்க வேண்டும்
  • வலது காது மடலை இடது கை விரல்களாலும்
    இடது காது மடலைவலது கை விரல்களாலும் பிடித்துக்கொண்டு
    நன்றாக உட்கார்ந்து எழுந்திருக்க வேண்டும்
  • குறிப்பாக கவனிக்க வேண்டியது, வலதுகை இடதுகைக்கு மேலே இருக்க வேண்டும்.
  • கட்டை விரல் காதுமடலின் வெளிப்பறமும் ஆள்காட்டி விரல் உள்புறமும் இருக்க வேண்டும்
  • உட்காரும்போது கால்பாதம் தரையில் நன்றாகப் பதிந்திருக்கவேண்டும்
  • நிதானமாக உட்கார்ந்து எழுந்திருக்க வேண்டும். மூச்சை அடக்கக் கூடாது
  • மூட்டு வலி, முதுகு வலி உள்ளவர்கள் செய்யக்கூடாது

சூப்பர் ப்ரெயன் யோகா – பலன்கள்

  • நினைவுத்திறன் சிந்தனனைத்திறன் பெருகும்
  • காது மடலில் நிறைந்திருக்கும், அக்குபங்க்சர் புள்ளிகள் தூண்டப்படுகின்றன.
    இதனால் உடல் முழுதும் சீர்செய்யப் படுகிறது
  • காலில் குருதி ஓட்டம் சீராகி இதயம் வலுப்பெறுகிறது
  • முதுகுத் தண்டு தூண்டப்பட்டு இளமை காக்கப்படுகிறது

மேலும் படிக்க – உடலையும் மனதையும் சீர் செய்ய சுரபி முத்திரை

சூப்பர் ப்ரெயன் யோகா செய்வதன் மூலம் நினைவுத்திறன் எப்படி அதிகரிக்கிறது??

மேலே கூறியதை போல் சரியான முறையில் பயிற்சியை செய்வதால், நாம் ஒவ்வொரு முறை உட்கார்ந்து எழுந்திருக்கும் பொழுது நம்முடைய உடலில் உள்ள முழு உந்து சக்தியும் நம்முடைய இரண்டு கால்களில் இருந்து தூண்டப்பட்டு உடல் மேலும் கீழும் நகர்த்தப்படுகிறது.

இதனால் கால்களில் உள்ள கட்டைவிரலில் மிக அதிகமாக ரத்தம் பாய்கிறது. அதுமட்டுமல்லாது அதே வேகத்தில் அது உடல் முழுதும் பரவி மூளையை சென்றடைகிறது.

நம்முடைய வலது மூளை இடது கால் பெருவிரல்லிலும், நம்முடைய இடது மூளை வலது கால் பெருவிரல்லிலும் நரம்புகளால் இணைக்கப்பட்டுள்ளது.

இதனாலேயே ஒவ்வொரு முறை இந்தப் பயிற்சியைச் செய்யும் பொழுது ரத்தஓட்டம் தூண்டப்பட்டு மூளையில் உள்ள அனைத்து நரம்புகளுக்கும் சீராக இரத்த ஓட்டம் பாய்ந்து அது தன்னுடைய முக்கிய வேலையான நினைவுத் திறன் மற்றும் சிந்தனை திறன் போன்ற ஆற்றலை பெருக்க உதவுகிறது.

மேலும் படிக்க – புத்தி கூர்மை அதிகரிக்க

இதனை சிறு வயது குழந்தைகள் செய்யும் பொழுது அவர்களுக்கு மிகுந்த பயன் அளிக்கிறது. இதனாலேயே அன்றைய பள்ளிக்கூடங்களில் ஆசிரியர்கள் தங்களுடைய மாணவர்களை தினந்தோறும் இந்த பயிற்சியை செய்யத் தூண்டுவது வழக்கமாக இருந்து வந்தது.

இப்படி மறந்துபோன ஒரு முக்கியமான பயிற்சியினை இனிவரும் நாட்களில் நாம் நமது குழந்தைகளுக்கு தினந்தோறும் செய்ய பழக்க வேண்டும். அப்படி செய்வதால் உடலும் மனமும் ஒரு சேர புத்துணர்ச்சி அடைய பேருதவியாக இருக்கும்.

முதலில் ஒரு நாளைக்கு பத்துமுறை அல்லது முடிந்த வரை செய்யத் துவங்கி படிப்படியாகக் கூட்டலாம்.

மறந்து போன இந்தப் பயிற்சி இப்போது புத்துயிர் பெற்று யோகாசனத்தின் ஒரு அங்கமாக பல இடங்களில் பயிற்றுவிக்கப்படுதிறது

உடலுக்கும் உள்ளத்துக்கும் உரமூட்டும் உக்கியை பயின்று நலமுடன் வளமுடன் வாழ்வோம்.

Author Profile

P. Sherfuddin B.Sc.

Dip in Acupuncture
P.G.Dip in PKT
M.Sc., 1) Yoga.  2) Varma and Thokkanam Science  3)Memory Development and PN
sherfuddinp.blogspot.com

Share This Article

Related Post

ஆஸ்த்மாவிலிருந்

மூச்சுத் தடை எனும் ஆ...

ருத்ர முத்திரை

ருத்ர முத்திரை R

 ருத்ர முத்திரை ருத...

சுரபி முத்திரை

உடலையும் மனதையு

சுரபி முத்திரை –பல ந...

Leave a Comment

error

Enjoyed this blog? Please spread the word :)