இளமை இனிமை – டீன் ஏஜ் எனும் பதின்ம பருவம்  – பகுதி 1

துள்ளித்திரியும் இளமைப் பருவம் . டீன் ஏஜ் பதின்மர் பருவம் என பல சொற்கள்.

‘ஓடுகிற பாம்பை கையிலே பிடிக்கிற வயசு’, ‘கல்லைத் தின்றாலும் செரித்து விடும்’, ‘I ate like a fourth form (9th Standard ) boy’ என பல சொல் வழக்குகள்.

எல்லாமே உண்மைதான் ஓரளவுக்கு!

Tips for Teenagers

டீன் ஏஜ் – உடல் மற்றும் மன மாற்றங்கள்

உடல், உள்ளம் முழுதும் சக்தி, உற்சாகம்!!

குழந்தைப்பருவம் நிறைவு பெற்று இளமைப் பருவத்தில் நுழையும் இந்த teenage (13 to 1 ) பருவத்தில், உடலிலும் மனதிலும் நிறைய மாற்றங்கள் உண்டாகும்.

குரல் மாறுதல், மீசை போன்ற முடிகள் வளார்ச்சி, மார்பக வளர்ச்சி, முகத்தில் பருக்கள், இன உறுப்புகள் வளர்ச்சி, பெண்களுக்கு periods துவக்கம் – இவை உடலில் ஏற்படும் மாறுதல்கள்.

உள்ளத்தில் – எதையாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணம், மனது ரெக்கை கட்டிப் பறப்பது போல் ஒரு உணர்வு, பாலினக் கவர்ச்சி, பாலின உணர்வுகள் எண்ணங்கள் (அதன் விளைவாக nocturnal discharge) போன்ற மாற்றங்கள் உண்டாகும்.

இவையெல்லாம் இயற்கையில் நிகழும் மாற்றங்கள் – செடி அரும்பு விட்டு, அரும்பு மலர்ந்து பூவாகி, காயாகி பழுத்தல் போல மாறுதல்கள்.

மேலும் படிக்க – பூப்பெய்திய பெண்குழந்தைகளுக்கான ஆரோக்கிய உணவு

இவற்றில் தவறு, குற்றம் எதுவும் இல்லை. எனவே குற்ற உணர்ச்சி, வெட்கம் எதுவும் தேவை இல்லை.

குறிப்பாக பாலுணர்வுகள், அதன் விளைவாக discharge – இது மிக இயல்பான ஓன்று. இதை ஓரளவு முறைப்படுத்தி ஒழுங்கு படுத்த வேண்டும், இது பற்றி மிகத் தவறான கருத்துகள் பரவியிருப்பதாகவும், அதை வைத்து பல போலி மருத்துவர்கள் பணம் பண்ணுவதாகவும் செய்தி ஓன்று படித்தேன். அதனால்தான் இதை குறிப்பிட்டுச் சொல்கிறேன்.

எரிச்சல், கோபம், தாபம், தன்னை பிறர் – குறிப்பாக எதிர் பாலினத்தினர் கவனிக்க வேண்டும், கவனித்துப் போற்ற வேண்டும், தன்னை ஒரு ஹீரோ, ஹீரோயின் போல் கற்பனை செய்தல் போன்ற எண்ணங்கள் தலை தூக்கும்.

டீன் ஏஜ் பருவத்தினர் அறிய மற்றும் செய்ய  வேண்டிய குறிப்புகள்

 • முதலில் இவர்கள் ஒன்றைத் தெளிவாக மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும் .டீன் ஏஜ் என்ற இந்த ஏழு ஆண்டுக்காலம் இறைவன் கொடுத்த வரம். இதை ஒரு பொற்காலமாகப் போற்றி பயன் படுத்த வேண்டும். கல்வியில் மிக முக்கிய கட்டமான +1, +2 வகுப்புகள் இந்தப் பருவத்தில்தான் வரும்.
 • உங்களிடம் உள்ள மிகப் பெரும் ஆற்றலை முறைப்படுத்தி செலவளித்தால் நீங்கள் எவ்வளோவோ சாதிக்கலாம். அது விளையாட்டாக இருக்கலாம், கல்வியாக இருக்கலாம், புதிய கண்டுபிடிப்புகளாக இருக்கலாம், புதிய மொழிகளாக இருக்கலாம்.

இதற்கு நீங்கள் முதலில் செய்ய வேண்டியது உடல், மனதை ஒரு நல்ல நிலையில் பாதுகாப்பது . அதற்கு நல்ல உடல் உழைப்புத் தேவை .

 • ஒரு நாளைக்கு குறைந்தது அரை மணி நேரம் நன்கு வேர்க்கும்படி ஓடலாம். மிதி வண்டி ஓட்டலாம். கால்பந்து, கபடி, வளைதடிப் பந்தாட்டம் (ஹாக்கி) போன்ற சுறுசுறுப்பான விளையாட்டுகளில் ஈடுபடலாம்.
 • உடல் வேர்க்க உழைத்தல் மனதை ஒருநிலைப்படுத்தி மன ஆற்றலை அதிகரிக்கும்
  யோகா, தியானம் பயிலவும் இது சரியான பருவம்.

உடற்பயிற்சிக்கூடம் (ஜிம்) , உடற்பயிற்சி மிதி வண்டி, நடக்கும் பொறி இது போன்றவற்றில் காசை விரயம் செய்ய வேண்டாம்

 • மறந்தும் தீய பழக்கங்கள் தீயவர்கள் அருகில் போய்ய் விடாதீர்கள்.

தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப்படும்

 • உங்கள் தாய் தந்தையரை உற்ற நண்பனாக, வழிகாட்டியாக நினைத்து அவர்களிடம் மனம் விட்டுப் பேசுங்கள். அவர்களுடைய வயது அனுபவம் நிச்சயம் உங்களுக்கு உதவும். அவர்களும் இந்தப் பருவத்தைக் கடந்து வந்தவர்கள்தானே!
 • தொலைக்காட்சி, கணினி ,கைப்பேசியை அளவோடு பயன்படுத்துங்கள்
 • வேண்டாத, விரும்பத்தகாத காட்சிளை அடிக்கடி பார்த்தல், அதில் ஒரு சலிப்பை உண்டாக்கும். இது காலப்போக்கில் உங்கள் இல்வாழ்க்கையில் மிகப் பெரிய பாதிப்பை உண்டாக்கும்.
 • கர்மா, ஆன்மா போன்ற பலவும் பற்றி முகநூலில் வருவதைப் பார்க்கிறேன் . கர்மா என்றால் என்ன என்று கேட்டால் தெரியாது என்கிறார்கள் . நம் வயதுக்கு மீறி இதெல்லாம் தேவையா ?

அலாவுதீனின் அற்புத விளக்குப் போல கேட்டதெல்லாம் கொடுக்கும் இணையத் தொடர்பு உங்கள் கையில் .அதை நல்லவிதமாக பயன்படுத்தி வாழ்க்கையை செம்மை ஆக்கிக் கொள்வது உங்கள் பொறுப்பு .

 • உணவு முறையில் நம் நாட்டு, நம் வீட்டு உணவுக்கு ஈடு இணை எதுவும் கிடையாது. நம் இட்லி ஒரு மிகச் சிறந்த உணவாக உலக அளவில் பேசப்படுகிறது. பழைய சோறு – கஞ்சியின் பெருமையை மேல் நாட்டில் ஆராய்ந்து நமக்குச் சொல்கிறார்கள்.

பர்கர் பீசா சாட் இதெல்லாம் அறவே வேண்டாம் என்று சொல்லவில்லை. எப்போதாவது மாதம் ஒரீரு முறை அளவாக உண்ணுங்கள்.

 • உடல், மனம் மூளை வளர்ச்சிக்கு காலை உணவு மிக மிக அவசியம் என்பது அறிஞர்கள் கருத்து.
 • ஒரு நாளைக்கு ஆறு ஏழு மணி நேரத் தூக்கம் மிக அவசியம் .அதிலும் இரவு 11-முதல் அதிகாலை 3 மணி வரை தூங்குவது உடல் உறுப்புகளை சீராக வைத்திருக்க உதவும் என்று மருத்துவர்கள் வலியுறுத்திச் சொல்கிறார்கள்.

மேலும் படிக்க – பூப்படைதல் – தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் Part 1

 • உடல் உடைதூய்மை மிக மிக அவசியம். உடலில் அரிப்பு ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இவற்றிற்கெல்லாம் குறிப்பாக பெண்களுக்கு மிகச் சிறந்த வழிகாட்டி உங்கள் தாய்தான்.
 • முகப் பருவை ஒரு பெரிய ஒரு பெரிய பிரச்சனையாக எண்ணி அதற்காக நிறைய செலவில் அழகுபொருட்கள் தேவையில்லை. வழக்கமான சோப்புப் போட்டு முகத்தைக் கழுவி னாலே போதும். ஒரு பருவத்தில் தோன்றும் பருக்கள் தன்னால் மறைந்து விடும்.
 • முகப்பொலிவு,நிறத்தை மாற்றுகிறேன் என்ற பெயரில் ஏகப்பட்ட விளம்பரங்கள். உங்கள் முகம் அழகாக. பொலிவாகத்தான் இருக்கிறது அதை யாரும் மாற்ற முடியாது நிறமும் மாறாது.

மேல் நாடுகளில் வெள்ளை நிறத்தை மாற்ற மணிக்கணக்கில் , நாள்கணக்கில் சூரிய ஒளியில் குளிக்கிறார்கள் இயற்கை அந்த சூரிய ஒளியை நமக்கு இல வசமாக அள்ளிக் கொடுக்கிறது

 • தலை முடிக்கு எண்ணெய் தேய்ப்பது அநாகரீகம் என்றொரு கருத்த பரவி வருகிறது. இது மிகவும் தவறு . எண்ணெய் , சீயக்காய் போல் தலை முடி பாதுகாப்புக்கு வேறு எதுவும் உதவாது.

பொடுகு என்பதே shampoo வால்தான் வருகிறதோ என்று என்னும் அளவுக்கு shampooவின் பயன்பாடு அதிகரிக்க அதிகரிக்க பொடுகு தொல்லையும் அதிகமாகிறது.

 • You tube இல் வராத செய்திகளே இல்லை. அவற்றை எல்லாம் முழுமையாக நம்பி எதையாவது முகத்தில் முடியில் அப்பிக் கொள்ளவேண்டாம். பெற்றோர் சொல்வதைக் கொஞ்சம் காதில் போட்டுக் கொள்ளுங்கள்.
 • உடலைக் குறைக்கிறேன் என்று நீங்களே முடிவு எடுத்து சாப்பாட்டைக் கட்டுப்படுததாதீர்கள். .மூன்று நேரமும் அளவாக நிறைவாக சாப்பிடுங்கள்

நிறைவாக ஓன்று – இந்த டீன் ஏஜ் எனும் பொற்காலத்தை சரிவரப் பயன்படுத்தி ஒரு தளமாக அமைத்துக்கொண்டால் உங்கள் வாழ்க்கை முழுதும் தங்க மயமாக ஒளி வீசும்

மேலும் படிக்க – உ டல் நலக் குறிப்புகள் – இயற்கையின் அழைப்பு

கவனம் கொள்ள வேண்டியவை

அறிவுத் திறன் வளர்ச்சி, எதையும் எளிதில் புரிந்து கொண்டு மனதில் பதிய வைத்துக்கொள்ளும் திறன் இந்தப் பதின்மர் பருவத்தில் மிக அதிகமாக இருக்கும் என்பது உளவியலாளர் கருத்து.

தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் தாக்கம், இளம் தலை முறையினருக்கு கிடைத்திருக்கும் ஒரு வரம் – ஏராளமான தகவல்கள் அவர்கள் விரல் நுனியில். இவை தகவல்களே அன்றி அறிவு அல்ல. ஆனால் அவர்களோ தங்களுக்கு எல்லாம் தெரியும் என்ற மனப்பாங்கை வளர்த்துகொண்டு, மற்றவர்களுக்கு குறிப்பாக பெற்றோருக்கு, அதிலும் இல்லத்தரசியாக இருக்கும் அம்மாவுக்கு ஒன்றுமே தெரியாது என்று எண்ணத் துவங்கி விடுகிறார்கள்.

மிக அண்மைக்காலத்தில் மது, போதை மருந்துகள், பாலியல குற்றங்கள் இந்தப் பதின்மர் பருவத்தில் ஓரளவு அதிகமாகவே பரவி வருகின்றன.

மற்றொன்று தவறான உணவுப் பழக்கங்கள் –

 • ஓன்று உடல் பெருத்து விடக்கூடாது என்பதற்காக தாமாக முடிவு செய்து சாப்பாட்டின் அளவை மிகவும் குறைப்பது , இந்த வயதிலேயே இனிப்பு, தேங்காய் ,சத்துள்ள பல உணவுகளைத் தவிர்ப்பது – இது பெண்களிடத்தில் அதிகமாகப் பரவி வருகிறது.
 • மற்றொன்று நொறுக்குத் தீனிகளை அதிலும் பீசா , பப்ஸ் போன்றவற்றை அதிகமாக உட்கொண்டு அதனால் உடல் எடை கூடுதல்.

சரி இவற்றை எல்லாம் எப்படி சரி செய்வது ? யார் செய்வது?
வினாக்கள் எப்போதும் எளிதாகத்தான் இருக்கும்… விடைகள்?

இதில் மிகப் பெரும் பங்கு பெற்றோருடையது. அதற்கு அடுத்து பதின்மர் பருவத்தினர்
ஆசிரியர், சமூகம் உளவியலார்கள் இவர்கள் எல்லாம் அதற்குப்பின்தான்.

பிறப்பில் இருந்து குழந்தையை அறிந்தவர்கள் பெற்றோர் மட்டுமே .அவர்களும் இந்தப் பருவத்தைக் கடந்து வந்தவர்கள்தான். அவர்களை விட வேறு யார் தங்கள் பிள்ளைகள் மேல் அதிகமான அக்கறை கொண்டிருக்க முடியும்?

இந்தப் பெற்றோரின் பங்களிப்பைப் பற்றி அடுத்த பகுதியில் சற்று விரிவாகப் பேசலாம், 

நிறைவாக ஓன்று – இந்த டீன் ஏஜ் எனும் பொற்காலத்தை சரிவரப் பயன்படுத்தி ஒரு தளமாக அமைத்துக்கொண்டால் உங்கள் வாழ்க்கை முழுதும் தங்க மயமாக ஒளி வீசும்.

All the best!!!

மேலும் படிக்க – கர்ப்பிணிகளுக்கான கருவேப்பிலை மருந்து

Author Profile

P. Sherfuddin B.Sc.

Dip in Acupuncture
P.G.Dip in PKT
M.Sc., 1) Yoga.  2) Varma and Thokkanam Science  3)Memory Development and PN
sherfuddinp.blogspot.com

Share This Article

Related Post

EArly Periods in girls

Early Puberty in Girls – Why and How to Avo

Menarche - Early Puberty in Girls – Causes, Problems ...

டீன் ஏஜ்

டீன் ஏஜ் எனும் பத

டீன் ஏஜ் - உங்கள் பிள...

Puberty – Age, Signs and Symptoms

Puberty: First Periods - Age, Symptoms, Discussion With...

Leave a Comment

error

Enjoyed this blog? Please spread the word :)