புளியின் பயன்கள் மற்றும் மருத்துவ குணங்கள்

அறு சுவைகளில் ஒன்றான புளிப்புபைக் கொண்ட புளிக்கு  அறிமுகம் தேவை இல்லை

உப்பு, புளி மிளகாய் இல்லாமல் சமையல் ஏது?

அன்றாடம் நாம்  உணவில் சேர்க்கும் புளி, ஒரு மிகச் சிறந்த ,பல மருத்துவ குணங்கள் கொண்ட ஒரு மூலிகை ஆகும்.

புளியின் பயன்கள்

புளியின் பயன்கள்

புளியின் மருத்துவ குணங்கள் பற்றிய குறிப்புகளைப் பார்ப்போம்.

  • உடலில் அடிபட்ட வீக்கங்சுளுக்கு – புளிக்கரைசளோடு உப்பு சேர்த்து கொதிக்க வைத்து கூழ் போல் ஆக்கி அளவான சூட்டில் பற்றுப் போட்டால் உடன் குணம் தெரியுமாம்.
  • நீர்க்கடுப்பு, அதனால் உண்டாகும் எரிச்சல் , வலிக்கு புளியங்கொட்டை குறிப்பாக அதன் தோல் நல்ல மருந்தாகுமாம்.
  • கோடை வெப்பத்தில் உடல் சூடாகி , அதனால் வரும் வயிற்று வலிக்கு புளிக்கரைசல், கருப்பட்டி சேர்த்துக் குடிக்கலாம்.

எங்கள் ஊர்பக்கம் (திருப்பதூத்ர் , காரைக்குடி)  கோடைக் காலத்தில் திருவிழாவுக்கு வரும் மக்களுக்கு இது போன்ற ஓன்று பானகம் என்ற பெயரில் வழங்கப்படும். நல்ல சுவை  – மலரும் நினைவுகள்.

மூட்டுகளின் வாய்வு நீரை வெளியேற்றும் விழுதி

  • நோய் எதிர்ப்பு சக்தி,
  • புற்று நோய் உயிரணுக்கள் வளர்ச்சியை தடுப்பது,
  • பித்தம் தணிப்பது,
  • வாய்வுத்தொல்லை,
  • வயிற்று மந்தம்  வயிற்றுபோக்குவாந்தி  மலச்சிக்கலை சரி செய்தல்,
  • சதை நரம்புகளைச் சுருங்க வைத்தல்,
  • உடலுக்கு வெப்பம் – குளிர்ச்சி தருதல்,
  • பித்தம் போக்குதல்,
  • சிறுநீர் பெருக்கல்,
  • ஆண்மை அதிகரித்தல்,
  • கண்வலி கண் சிவப்பு ,கருப்பை இறக்கம் சரி செய்தல்,
  • பல், ஈறு  தொடர்பான பல நோய்களை சரி செய்தல்,
  • செரிமானகோளாறு , வயிற்றுப் புண் ,வயிற்று வலியை சரி செய்தல்,
  • எலும்பு தேய்மானம் – அதனால் வரும் மூட்டு வலியை சரி செய்தல்,
  • காய்சல் , பிள்ளைப் பேறினால் உண்டாகும் களைப்பை நீக்குதல்
  • உடலில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துதல்
  • உடலில் தேங்கியிருக்கும் கொழுப்புகளைக் கரைத்தல்,
  • கால்களில் உண்டாகும் நீர்த்தேக்கம், வீக்கம், கீழ்வாதம் போன்றவற்றையும் குணப்படுத்துதல்

என்று பல மருத்தவப் பயன்கள் கொண்டது

புளி – புளிய இலை, பூ, பிஞ்சு , காய் பழம் , மரப்பட்டை எல்லாம் மருத்துவ குணம் கொண்டவை.

இவை எல்லாம் தனியாகவும், பிற மருந்துப் பொருள்களோடு சேர்ந்தும் மருத்துவப் பயன் தருகின்றன.

புளியின் தீமைகள்

  • பித்தப்பை கற்கள் , அதன் தொடர்ச்சியாக மஞ்சள் காமாலை, கல்லீரல் பாதிப்பு
  • சர்க்கரை அளவு வீழ்ச்சி (low sugar)
  • குருதி நாளங்கள் (Blood vessels) சுருங்கி குருதி ஓட்டம் தடைப்படுதல்
  • புளிப்புத் தன்மையால் பற்களுக்கு பாதிப்பு
  • ஒவ்வாமை

யாருக்கெல்லாம் புளி கூடாது

புளியில் அமிலத்தன்மை அதிகம் உள்ளதால், இதய நோயாளிகள், வாத நோய் உள்ளவர்கள் புளி அதிகமாக எடுத்துக்கொள்ளக்கூடாது.

உடலின் சர்க்கரை அளவை புளி குறைக்க கூடியது என்பதால், சர்க்கரை வியாதிக்காரர்களும் புளியை அளவுடனே எடுத்துக்கொள்ள வேண்டும்.

மேலும், புளி நம் உணவில் தினமும் சேர்க்கும் பொருள் என்றாலும் மருத்தவப் பயன் என்று வரும் போது அனுபவம் மிக்க தகுதி வாய்ந்த மருத்துவர்களை கலந்து ஆலோசிக்க வேண்டும்.

ஒரு நாளைக்கு ஒருவருக்கு 10 கிராம் புளி போதும் என்கிறார்கள்.

அளவு மிஞ்சும்போது பல விரும்பத் தகாத பக்க விளைவுகள் ஏற்படலாம்.

இதையெல்லாம் அறிந்துதான் நம் முன்னோர்கள் சற்று அச்சத்தை உண்டாக்கும் விதமாக புளி(புலி ) என்று பெயர் வைத்தார்களா?!

அளவறிந்து பயன்படுத்தி புளி புலியாக மாறிவிடாமல் பார்த்துக்கொள்வோம்.

வழக்கமான எச்சரிக்கை

இது ஒரு மூலிகை அறிமுகப் பகுதி. மருத்துவக் குறிப்புப் பகுதி அல்ல.

Follow us on Insta – Moms QnA – Instagram and Facebook – Moms QnA – Facebook 

Author Profile

P. Sherfuddin

M.Sc. 1. Yoga 2. Varma and Thokkanam Science 3. Memory Dev and Psycho Neurobics

P.G.Diploma in Pancha Karma Therapy

Diploma in Acupuncture

 

 

Share This Article

Related Post

எளிய நலவாழ்வு குறிப்புகள்

எளிய நலவாழ்வு கு

எளிய நலவாழ்வு குறிப...

Mudakathan Keerai

Mudakathan Keerai – Benefits and Recipes

Mudakathan Keerai – Benefits and Recipes Mudakathan ...

Basic Hair Care When You Shampoo Your Hair

Few Points To Know When You Shampoo Your Hair – Basic...

Leave a Comment

error

Enjoyed this blog? Please spread the word :)