மூலிகை அறிமுகம்: மூட்டுகளின் வாய்வு நீரை வெளியேற்றும் விழுதி

அதிகம் அறியப்படாத மிக அற்புதமான மருத்துவ குணங்கள் கொண்ட மூலிகை விழுதி.

சில ஆலயங்களில் தல விருட்சமாக விளங்கும் இந்த மூலிகையை அதிகமாக வேறெங்கும் பார்க்க முடியாது. நம் நாட்டில் அருகி வரும் தாவர இனமாக உள்ள

இதன் தாவரவியல் பெயர்: கடபா ஃப்ரடிகோசா – Cadaba Fruticosa 

விழுதி: Vizhuthi - Cadaba Fruticosa

தனித் தனியான இலைகளையும், இள வெண்ணிற மலர்களையும், சிவப்பு வண்ணக் கனிகளையும் கொண்ட விழுதி மரம், சிறு செடி வகையைச் சேர்ந்ததாகும். விளசசி மரம் எனவும் ஒரு பெயர் உண்டு.

கல்லீரலை பலப்படுத்தும் கீழாநெல்லி – கீழாநெல்லி சூப்

விழுதி மரத்தின் கனிகள் சிவந்த நிறத்தில், சுவையாக இருக்கும். மேலும், இதன் நறுமணம் தனிச்சிறப்பு வாய்ந்தது. இந்த காரணங்களுக்காக, இன்று உலகின் பல இடங்களில் நறுமணத்துக்காக வளர்க்கப்படுகின்றன,

விழுதி பலன்கள்

இலை,காய், வேர்கள் என இச்செடியின் பலதும் அதிக மருத்துவ பலன்கள் தருபவை.

  • விழுதி குணமாக்கும் நோய்கள்

வாத நோய்கள்

வீக்கங்கள், கட்டிகள்

குழந்தைப்பேறு இல்லாமை

சளி, காய்ச்சல், இருமல்

கை கால் இடுப்பு வலி

உடல் அசதி

  • மூட்டுகளில் வாய்வு நீர் (கெட்ட நீர்) கோர்த்துக்கொண்டு வீக்கம்/வலி ஏற்படுத்தும். அந்த வாய்வு நீரை வெளியேற்ற விழுதி இல்லை உதவும்.
  • வாதம், பித்தம், கபத்தை சமநிலைப்படுத்தும்.
  • கெட்ட கொழுப்பைக் கரைக்கும்.
  • உடல் வலிமை கூடும்.
  • நுரையீரலை பலப்படுத்தி, மூச்சு வாங்குவதை சரி செய்யும்.
  • குறிப்பாக பெண்களின் குழந்தைப்பேறு இன்மைக்கு ஒரு அருமருந்தாகிறது என சொலப்படுகிறது.

சுருக்கமாகச் சொன்னால் உடலில் உள்ள அனைத்து நோய்களுக்கும் ஒரு மருந்தாகிறது.

கண் பார்வை அதிகரிக்க இயற்கை மருத்துவம்

விழுதி சூப் (ரசம்) செய்முறை

  • இதை சூப் போன்று செய்து குடிப்பதன் மூலம் பலன் கிடைக்கும்.
  • கைப்பிடியளவு விழுதி இலைகளை எடுத்து இடித்துக் கொள்ளவும்.
  • சிறிது மிளகை பொடித்து தூளாக்கி  இடித்த விழுதி இலையுடன்  சேர்த்து கொள்ளவும். விழுது போல் ஆகிவிடும்.
  • பிறகு ஒரு சிட்டிகை  சீரகம் மற்றும் 5-6 பூண்டுப்பல் சேர்த்து சிறிது விளக்கெண்ணெயில் தாளிக்கவும்.
  • அடுத்து, விழுதி இலை மற்றும் மிளகு விழுது சேர்த்து, சிறிது நேரம் கொதிக்க விடவும்.
  • பின், இறக்கி கொத்துமல்லி தழை, உப்பு சேர்க்கவும்.
  • ரசம் போல் செய்து சாதத்தில் வார்த்து உண்ணலாம் அல்லது அப்படியே சூப் போல குடிக்கலாம்.

வழக்கமான எச்சரிக்கை-

இது ஒரு நலவாழ்வுக் குறிப்பு அல்ல. செடி, மரம் ,கொடிகளை மூலிகைகளாக அறிமுகபடுத்வே இந்தப்பதிவு. தகுந்த, அனுபவம் வாய்ந்த மருத்தவரைக் கலக்காமல் மருந்தாகப் பயன்படுத்த வேண்டாம்.

Follow us on Insta – Moms QnA – Instagram and Facebook – Moms QnA – Facebook 

Author Profile

P. Sherfuddin

M.Sc. 1. Yoga 2. Varma and Thokkanam Science 3. Memory Dev and Psycho Neurobics

P.G.Diploma in Pancha Karma Therapy

Diploma in Acupuncture

 

 

 

Share This Article

Related Post

Healthy EAting Tips for night shift workers

Eating Habits – 4: Tips for Night Shift

Healthy Eating Habits for Night Shift Workers Working ...

Benefits of Ghee and Its Side Effects

Benefits of Ghee and How to Use Most of us could vivid...

எளிய நல்வாழ்வு க

எளிய நல்வாழ்வு குறி...

Leave a Comment

error

Enjoyed this blog? Please spread the word :)