பொன்னாங்கண்ணி கீரை பொரியல்

பொன்னாங்கண்ணி கீரை

கீரை வகைகளில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படும் பொன்னாங்கண்ணி கீரை சாலையோரங்களில் சாதாரணமாக காணக்கிடைப்பதாகும்.

பொன்னாங்கண்ணி கீரை மகத்துவம் நிறைந்தது. இந்த கீரை மேனிக்கு பொன் போன்ற மினுமினுப்பையும் அழகையும் தரக்கூடியது. அதனால் தான் அதை பொன்னாங்கண்ணி என்று கூறினார்கள்.

பொன்+ஆம்+ காண்+ நீ = பொன்னாங் கண்ணி.
பொன்னாங்கண்ணி ‌கீரையை தொடர்ந்து 27 நாட்கள் சாப்பிட்டால் பகலிலும் நிலவைப் காணலாம். அந்த அளவிற்கு கண்பார்வைக்கு மிக துல்லியமாக தெரிய உதவுமாம் பொன்னாங்கண்ணி.

உணவே மருந்து – மணத்தக்காளி கீரை சட்னி

பொன்னாங்கண்ணி கீரையில் இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ், புரதம், வைட்டமின்கள் ஏ,பி,சி போன்ற சத்துக்கள் உள்ளன. பொதுவாக காய்கறிகள், கீரைகளில் அரிசி உணவை போல் அதிக கார்போஹைட்ரேட் இருக்காது. வைட்டமின்கள், தாதுஉப்புக்கள், உயிர்ச்சத்துக்கள் மட்டுமே அதிகம் இருக்கும். ஆனால் இந்த பொன்னாங்கண்ணி கீரையில் மட்டும் வைட்டமின்கள், தாது உப்புக்களோடு உடலுக்கு சக்தி அளிக்கும் மாவு சத்தும் இருக்கிறது. சோறு பாதி, இந்தக் கீரை பாதி என்று சாப்பிட பல வேலைகள் செய்ய கூடிய பலம் தருகிறது.

பொன்னாங்கண்ணி கீரையின் பயன்கள்

  1. பொன்னாங்கண்ணி கீரையானது மூல நோய், மண்ணீரல் நோய்களை குணப்படுத்துகிறது.
  2. பொன்னாங்கண்ணி கீரையுடன் மிளகு மற்றும்உப்பு சேர்த்து சாதத்துடன் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.
  3. பொன்னாங்கண்ணி கீரையை வாரம் இரு முறை சாப்பிட்டு வந்தால் உடலும், தோலும் பளபளப்பாகும்.
  4. பொன்னாங்கண்ணி கீரையை மசியல் செய்து சாப்பிட்டுவந்தால் அசுத்த இரத்தம் சுத்தமாகும், உடலுக்கும் புத்துணர்ச்சி உண்டாகும்.
  5. அதிக வெயிலில் வேலை செய்பவர்களுக்கும், கணினியில் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கும், சரியான தூக்கம் இல்லாதவர்களுக்கும் கண்கள் சிவந்து காணப்படும், கண்களில் எரிச்சல் இருந்துகொண்டே இருக்கும். இவர்கள் பொன்னாங்கண்ணி கீரையை பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் கண் சம்பந்தமான பிரச்சனைகள் நீங்கும்.
  6. பொன்னாங்கண்ணி கீரையானது வாய் துர்நாற்றத்தை போக்கும். இதயத்திற்கும் மூளைக்கும் புத்துணர்வு உண்டாகும்.
  7. பொன்னாங்கண்ணி கீரையை துவரம் பருப்பு மற்றும்நெய்யுடன் சேர்த்து சாப்பிட்டால் உடல் எடை கூடும்.
  8. உடல் வெப்பத்தை குறைத்து சாதாரண நிலைக்கு கொண்டு வரும். கண்களை குளிர்ச்சியாகவும் வைத்திருக்க உதவும்.
  9. பொன்னாங்கண்ணி கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண் எரிச்சல், பார்வை மங்குதல், கண்ணில் கட்டி, கண்ணில் நீர் வடிதல், பீளை தள்ளுதல் போன்ற கண் நோய்கள் குணமாகும்.
  10. பொன்னாங்கண்ணி கீரையில் கால்சியம் சத்து மிகுதியாக இருப்பதால் எலும்புகள், மற்றும் பற்கள் உறுதியாகின்றன.
  11. பொன்னாங்கண்ணி கீரையை சாப்பிடுவதால் ஆண்களின் விந்து உற்பத்தி அதிகமாகும்.

கல்லீரலை பலப்படுத்தும் கீழாநெல்லி – கீழாநெல்லி சூப்

பொன்னாங்கண்ணி கீரை பொரியல்

தேவையான பொருட்கள்

பொன்னாங்கண்ணி கீரை – 1 கப்
பச்சை மிளகாய் – 1 அல்லது 2
சின்ன வெங்காயம் – 10-12
துருவிய தேங்காய் – 2 தேக்கரண்டி
சீரகம் – 1 சிட்டிகை
உப்பு – சுவைக்கேற்ப
எண்ணெய் – தாளிக்க தேவையான அளவு

பொன்னாங்கண்ணி கீரை பொரியல்

செய்முறை

  • ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு, சூடான பின் சீரகத்தை சிவக்க விடவும்.
    பின்னர், இரண்டு மூன்றாக நறுக்கிய சின்ன வெங்காயம் மற்றும் இரண்டாக கிள்ளிய பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும்.
  • வெங்காயம் கண்ணாடி போல ஆகும்பொழுது, கழுவி நறுக்கிய பொன்னாங்கண்ணி கீரையை சேர்த்து சில நொடிகள் வதக்கவும்.
  • பின்னர் சிறிது தண்ணீர் தெளித்து, உப்பும் சேர்த்து கிண்டி விடவும். கீரை வேகவில்லையெனில் இன்னும் சிறிது தண்ணீர் தெளித்து கொள்ளலாம். உப்பு அளவு சரி பார்க்கவும்.
  • கீரை நன்கு வெந்த பின் துருவிய தேங்காய் சேர்க்கவும். எல்லாம் சேர கிளறிவிட்டு இறக்கவும்.
  • சத்தான சுவையான பொன்னாங்கண்ணி கீரை பொரியல் தயார்.

குறிப்பு –

  • சிறிது கூடுதல் விட்டு, கீரை வெந்த பின் தண்ணீர் மீதமிருக்கும் நிலையில் தேங்காய் சேர்க்கலாம். சில நொடிகள் கொதிக்க விட்டு இறக்கும் பொழுது, தேங்காய் சாறு கீரை மற்றும் தண்ணீரில் இறங்கி தேங்காய் பால் சேர்த்தது போல் இன்னும் சுவை கூடும்.
  • குழந்தைகளுக்கு சூடான சாதத்தில், நெய் விட்டு இப்படி நீருடன் உள்ள கீரை பொரியலை சேர்த்து சாப்பிட கொடுக்கலாம். சுவை மிக அலாதியானதா இருக்கும். மிகுந்த சத்துக்கள் நிறைந்த சுவையான உணவு.

Follow us on Insta – Moms QnA – Instagram and Facebook – Moms QnA – Facebook 

Share This Article

Related Post

Manathakkali Chutney

உணவே மருந்து –

மணத்தக்காளி கீரை சட...

Aam Panna recipe

Summer Special Drink – Aam Panna

Summer Drink Recipe - Aam Panna  Aam panna is a perfe...

sukhdi recipe

Sukhdi or Gol Papdi: A Traditional Sweet Reci

Sukhdi or Gol Papdi Recipe Sukhdi is a Gujarati sweet ...

Leave a Comment

error

Enjoyed this blog? Please spread the word :)