சத்தான சுவையான எள் துவையல்

உயிர் பிழைக்க பயன்படும் பயிர் என்று கூறப்படும் எள், இந்தியாவில் தான் முதன் முதலில் பயிரிடப்பட்டது. கருப்பு எள், வெள்ளை எள் என இரு வகை உண்டு, இரண்டுமே மிகுந்த சத்துக்கள் நிறைந்தது. நம் முன்னோர்கள் உணவே மருந்தாக உட்கொண்ட உணவு வகைகளில் முக்கியமான ஒன்று எள்.

உடல் நலம் – இயற்கை மருத்துவ குறிப்புகள்

பல கொடிய நோய்களின் வீரியத்தை கட்டுப்படுத்த உதவும் எள்ளின் பயன்கள் சில.

  • செரிமான கோளாறுகளை சரி செய்ய…
  • ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை அளவுகளை சீராக்க…
  • புற்றுநோய் வராமல் தடுக்க…
  • எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்த…
  • காலதாமதமாக வரும் மாதவிடாய் பிரச்சனை ஒழுங்காக்க… (சிறிதளவில்)

எள் மிகவும் பயன்படுகிறது.

மணத்தக்காளி கீரை சட்னி

எள் சாப்பிடும் முறை

நிறைய சத்துக்கள் நிறைந்ததாக இருந்தாலும், தேவைக்கேற்ப, உடல்வாகிற்கு ஒத்துவருவத்திற்கேற்ப அளவாக, பக்குவமாக உட்கொள்ளுதல் மிக அவசியம்.

  • முதலில், எள்ளை ஊற வைத்தோ அல்லது வறுத்தோ சாப்பிட அதன் முழு பலன்களை பெறலாம்.
  • மாதவிடாய் பிரச்சனைகளுக்காக உண்ணும்பொது சிறிதளவில் இருக்க வேண்டும்.
  • எள் உடல் சூட்டை அதிகரிக்கக்கூடியது, எனவே, கர்ப்பிணி பெண்கள் எள் உண்பதை தவிர்க்க வேண்டும்.
  • ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு விரைவாக குறைக்கக்கூடியது எள், அதனால் இப்பிரச்சனை உள்ளவர்கள் கவனமாக உட்கொள்ள வேண்டியது அவசியம்.
  • அதிக அளவில் எள் உணவில் சேர்த்தால், கடும் ஒவ்வாமை, அலர்ஜி, சரும அரிப்புகள் ஏற்படலாம்.
  • சூடான உடல் வெகு கொண்டவர்கள், எள் சாப்பிட்டால் இன்னும் உடல் சூடாகும் வாய்ப்புகள் அதிகம். அதனால் செரிமான கோளாறு, வயிற்று வலி போன்ற பிரச்சனைகள் வரும் வாய்ப்புகளும் அதிகம்.

வாழைத்தண்டு சூப்

எள் துவையல்

தேவையான பொருட்கள்

எள் – 2 டேபிள் ஸ்பூன்
சின்ன வெங்காயம் – 50 கிராம் (பொடியாக நறுக்கியது)
காய்ந்த மிளகாய் – 2
புளி – சிறிய நெல்லிக்காய் அளவு
தக்காளி – ஒன்றில் பாதி (பொடியாக நறுக்கியது)
தேங்காய் துருவல் – அரை மூடி
உப்பு – தேவையான அளவு
பெருங்காயத்தூலன் – 1 சிட்டிகை
கறிவேப்பிலை – சிறிதளவு
கொத்தமல்லித்தழை – சிறிதளவு
எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன்

செய்முறை

  • வாணலியில் எள்ளை சேர்த்து வாசம் வரும் வரை வறுத்து தனியாக வைக்கவும்.
  • வாணலியில் என்னை சேர்த்து சூடானதும் வெங்காயம், புளி, காய்ந்த மிளகாய், தேங்காய்த்துருவல், தக்காளி, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, வறுத்த எள் சேர்த்து வதக்கவும்.
  • இதில் தேவையான அளவு உப்போ சேர்த்து வதக்கி அடுப்பை அணைக்கவும்.
  • ஆறியதும். அம்மியில் அல்லது மிக்ஸியில் மையாக அரைக்கவும். சுவையான எல் துவையல் தயார்.

கல்லீரலை பலப்படுத்தும் கீழாநெல்லி – கீழாநெல்லி சூப்

குறிப்பு –
இந்த துவையலில் சின்ன வெங்காயம் அதிகமாக இருப்பதாக தோன்றலாம். ஆனால் , துவையலின் சுவையை கூட்டுவதே இது தான். மண்சட்டியில் வதக்கி அம்மியில் அரைத்தால் அலாதி சுவையுடன் இருக்கும்.

Follow us on Insta – Moms QnA – Instagram and Facebook – Moms QnA – Facebook

Share This Article

Related Post

Sundaikkai Thokku

உணவே மருந்து –

பச்சை சுண்டைக்காய் ...

No Oil Drumstick Leaves Stir Fry/Poriyal

Drumstick Leaves Stir Fry/MurungakeeraiPoriyal A very ...

Aam Panna recipe

Summer Special Drink – Aam Panna

Summer Drink Recipe - Aam Panna  Aam panna is a perfe...

Leave a Comment

error

Enjoyed this blog? Please spread the word :)