பச்சை சுண்டைக்காய் தொக்கு

நுண் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சுண்டைக்காய், காய்கறிகளுள் மிகவும் சிரியதாகும். பல நாட்டு மருந்துகள் செய்யவும் மற்றும் சமையலிலும் வெகுவாக பயன்படுத்தலாம்.

சுண்டைக்காயின் பயன்கள்

  • சுண்டைக்காயில் நம் உடலுக்கு தேவையான சத்துக்கள் நிறைய உள்ளது. இதில் வைட்டமின் எ ,வைட்டமின் சி ,மற்றும் இரும்பு சத்துக்கள் உள்ளது.
  • சர்க்கரை நோய்,இரத்தக்கொதிப்பு ,இரத்த சோகை உள்ளவர்களுக்கு சுண்டைக்காய் ஒரு அருமருந்து.
  • இது இரத்த சிகப்பு அணுக்களை அதிகரிக்க உதவும்.
  • குடல் புண்ணை ஆற்றக்கூடியது. இன்ன பிற பல வயிறு சம்மந்தப் பட்டமான பிரச்சனைகளுக்கு ஒரு நல்ல மருந்தாக பயன்படுத்தலாம்

குறிப்பு – 
இதை பாலுடன் சேர்த்து உண்ணக்கூடாது.

உணவே மருந்து – பாரம்பரிய எள் துவையல்

பச்சை சுண்டைக்காய் தொக்கு

பச்சை சுண்டைக்காய் தொக்கு

(இதை செய்வதற்கான காணொளி இணைப்பு கீழே உள்ளது.)

தேவையான பொருட்கள்

சுண்டைக்காய் -200கிராம்
சின்ன வெங்காயம் -12
தக்காளி -1
பச்சை மிளகாய் -3
நல்லெண்ணெய் -4டேபிள் ஸ்பூன்
வெந்தயம் -1டீ ஸ்பூன்
கடுகு உளுத்தம்பருப்பு  1/2 டீ ஸ்பூன்
சோம்பு -1/4டீ ஸ்பூன்
மிளகாய் தூள் -1டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் -1/4டேபிள் ஸ்பூன்
தனியா தூள் -1 டேபிள் ஸ்பூன்
சாம்பார் பொடி -1 1/2டேபிள் ஸ்பூன்
புளி -நெல்லிக்காய் அளவு
பெருங்காயம் பொடி -சிறிதளவு  
வெல்லம் -சிறிதளவு
உப்பு -தேவைக்கேற்ப

சுண்டைக்காய் தொக்கு செய்முறை விளக்கம்

  • ஒரு வாணலியில் எண்ணெய் சேர்த்து காய்ந்ததும் வெந்தயம் ,கடுகு ,சோம்பு சேர்த்து பொரிய விடவும்.
  • பிறகு வெங்காயம் சேர்த்து சிறிது நேரம் வதக்கிய பின் தக்காளி,பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.
  • தக்காளி மசிந்த பின் எடுத்து வைத்த மிளகாய்,மஞ்சள்,தனியா தூள் சேர்த்து மிதமான தீயில் ஒரு நிமிடம் வரை வதக்கவும்.
  • பிறகு சுண்டைக்காய் சேர்த்து நன்கு வதக்கி உப்பு  சேர்த்து  சிறிதளவு தண்ணீர் சேர்த்து மூன்று நிமிடம் வரை கொதிக்க விடவும்.
  • கொதித்த பின்பு எண்ணெய் திரிந்து மேலே வரும் சமயத்தில் புளி, பெருங்காயம், சாம்பார் பொடி சேர்த்து  சில நிமிடங்கள்  கொதிக்க விடவும்.
  • நன்கு கொதித்து புளியின் பச்சை வாசனை  போன பின், இறக்கும் சமயம் சிறிது வெல்லம் சேர்த்து ஒரு நிமிடம் வரை கொதிக்க விட்டு இறக்கவும். அலாதி சுவையுடனான செட்டிநாடு பச்சை சுண்டைக்காய் தொக்கு தயார்.
  • சூடான சாதத்தில் சிறிது நல்லெண்ணெய் விட்டு சாப்பிடலாம். மாறாக, தயிர் சாதம்,சாம்பார் சாதம் தொட்டு கொண்டு சாப்பிட அருமையாக இருக்கும்.

உணவே மருந்து – மணத்தக்காளி கீரை சட்னி

 

Author Profile

Sanjeetha Jainul

Youtuber
Previously – Healthcare Consultant
Interests – Cooking and Natural Remedies
Channel – 

EmbedPress: Please enter your YouTube API key at EmbedPress > Platforms > YouTube to embed YouTube Channel.
EmbedPress: Please enter your YouTube API key at EmbedPress > Platforms > YouTube to embed YouTube Channel.
Share This Article

Related Post

Ellu Thuvaiyal

உணவே மருந்து –

சத்தான சுவையான எள் த...

Aam Panna recipe

Summer Special Drink – Aam Panna

Summer Drink Recipe - Aam Panna  Aam panna is a perfe...

பொன்னாங்கண்ணி க

பொன்னாங்கண்ணி கீரை ...

Leave a Comment

error

Enjoyed this blog? Please spread the word :)