சர்க்கரைவள்ளி கிழங்கு பராட்டா

சர்க்கரைவள்ளி கிழங்கு நன்மைகள்

முக்கிய சத்துக்களான  இரும்புச்சத்து, பீட்டா கரோட்டீன், தாதுச்சத்துக்கள், வைட்டமின் பி நிறைந்த சர்க்கரைவள்ளி கிழங்கு, உடலிற்கு நிறைய ஆரோக்கிய நன்மைகள் தரக்கூடியதாக இருக்கிறது.

பொதுவாக கிழங்கு வகைகள் கொழுப்பு சத்து நிறைந்து இருக்கும்.  ஆனால் சர்க்கரைவள்ளி கிழங்கில் கொழுப்பு சாது மிகவும் குறைவு. மாறாக, நார்ச்சத்து நிறைந்து இருப்பதால், உடலில் கொழுப்பு சேர்வதை தடுக்கிறது.

ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் நிறைந்துள்ளதால், செல்கள் வளர்ச்சிக்கும், செல்கள் சேதமடையாமல் இருக்கவும் உதவுகிறது. இதனால், இளமை காக்கவும் செய்கிறது.

உணவே மருந்து – பச்சை சுண்டைக்காய் தொக்கு

வைட்டமின் பி மற்றும் சி இருப்பதினால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.

குழந்தைகளுக்கு வரம் ஒரு முறையேனும் உணவில்  சேர்க்க, முடி வளர்ச்சிக்கும், கண் ஆரோக்கியத்திற்கும் நிரம்ப நன்மை தர கூடியது.

யாரரெல்லாம் சர்க்கரைவள்ளி கிழங்கு அதிகமாக சாப்பிட கூடாது?

அதிக சத்துக்கள் நிறைந்த காரணித்தினால், எதையுமே அதிக அளவில் உட்கொள்ளக்கூடாது. குறிப்பாக,
சிறுநீரகக்கல் தொந்திரவு உள்ளவர்கள்,  வாய்வு தொல்லை உள்ளவர்கள், பீட்டா பிளாக்கர் கொண்ட மருந்தை உட்கொள்ளும் இதயநோயகாரர்கள், சர்க்கரை வியாதிக்காரர்கள் அதிகமாகவோ அல்லது அடிக்கடியோ சாப்பிடாமல் இருப்பது நல்லது.

சர்க்கரைவள்ளி கிழங்கு பராட்டா

sweet potato paratha

தேவையான பொருட்கள்

சர்க்கரைவள்ளி கிழங்கு – 250கிராம்
கோதுமை மாவு – 1 கப்
உப்பு – தேவைக்கேற்ப
நெய் / எண்ணெய் – பராட்டா செய்ய தேவையான அளவு

செய்முறை

  • சர்க்கரைவள்ளி கிழநகை கழுவி, பெரிய துண்டுகளாக வெட்டி , இட்லி பாத்திரத்தில், ஆவியில் வைத்து கொள்ளவும். குக்கர் உபயோகிப்பதை தவிர்த்தல் நலம்.
  • நன்கு வெந்த கிழங்கை, தோல்  உரித்து, மையாக மசித்து கொள்ளவும்.
  • பின் சப்பாத்திக்கு பாவு பிசைவது போல் ஒரு அகன்ற பாத்திரத்தில் கோதுமை மாவு மற்றும் உப்பு சேர்த்து, சிறிது எண்ணெய் விட்டு பிசறி விடவும்.
  • அதில் கிழங்கை போட்டு கலந்து, பின் தேவையான அளவு தண்ணீர் விட்டு எல்லாவற்றையும் சேர்த்து சாப்பாடு மாவு பிசைவது போல மிருதுவாக பிசைந்து சிறிது நேரம் மூடி வைக்கவும்.
  • மாவை சப்பாத்தி கட்டையில் பரத்தி, சூடான தோசை கல்லில் நெய் அல்லது எண்ணெய் விட்டு இருபக்கம் நன்கு வெந்ததும் இறக்கவும்.
  • சூடான சத்தான ருசியான சர்க்கரைவள்ளி கிழங்கு பராட்டா தயார். கிழங்கு சேர்த்து பிசைந்ததால், பாராட்ட மிகவும் மிருதுவாக இருக்கும்.

புதிய சுவையில் வித்தியாசமான ஜூஸ் வகைகள்

சர்க்கரைவள்ளி கிழங்கு பராட்டா இனிப்பாக செய்ய –

வெல்லத்தை தண்ணீரில் நன்றாக கரைத்து, அதை வடிகட்டிக்கொள்ளவும். அந்த இனிப்பு நீரை, தண்ணீருக்கு பதிலாக மாவு மற்றும் கிழங்கு பிசறி விட்டதில் ஊற்றி பிசைந்து சுவையான இனிப்பு பராட்டா செய்யலாம். சிறுகுழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.

சர்க்கரைவள்ளி கிழங்கு பராட்டா காரமாக செய்ய-

மாவு பிசையும்பொழுது மசித்த கிழங்குடன், சிறிதாக  நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி தழை சேர்த்து பிசைந்து பராட்டா செய்யலாம். பச்சை மிளகாய் பதில் மிளகாய் பொடியும் சிறிது சேர்த்து கொள்ளலாம். ருசிக்கேற்ப, இரண்டும் கூட சேர்த்து கொள்ளலாம்.

Follow us on Insta – Moms QnA – Instagram and Facebook – Moms QnA – Facebook 

Share This Article

Related Post

Mashed Green Gram Gravy| Pasi Payaru Masiyal

Mashed Green gram Gravy Recipe | Pasi/Pachai payaru Mas...

Ellu Thuvaiyal

உணவே மருந்து –

சத்தான சுவையான எள் த...

பொன்னாங்கண்ணி க

பொன்னாங்கண்ணி கீரை ...

Leave a Comment

error

Enjoyed this blog? Please spread the word :)