புதிய சுவையில் ஜூஸ் வகைகள் – கொய்யாப்பழம், சாத்துக்குடி, ஸ்ட்ராபெர்ரி

நமக்கு பிடித்தனமான ஜூஸ் வகைகளை இனிப்பாக மட்டும் இல்லாமல், இனிப்பும் காரமும் கலந்து வித்தியாசமாக புதிய சுவையில் குடித்தால்? இதோ சில அவ்வாறான ஜூஸ் வகைகளை பார்ப்போம்.

ஜூஸ் வகைகள்

புதிய சுவையில் ஜூஸ் வகைகள்


1. இனிப்பும் காரமும் கலந்த கொய்யாப்பழ ஜூஸ்


தேவையான பொருட்கள்

கொய்யாப்பழம் – 4
எலுமிச்சைப்பழ சாறு – 1 டேப்ளேஸ்பூன்
புதினா இல்லை (அ) துளசி இல்லை – 10
சர்க்கரை – 3-4 டேப்ளேஸ்பூன் (இனிப்பிற்கேற்ப)
உப்பு – ஒரு சிட்டிகை
மிளகு தூள் – 1/4 டீஸ்பூன்

செய்முறை

1. கொய்யாப்பழங்களை கழுவி, துடைத்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
2. மிக்ஸி-யில் கொய்யாபழ துண்டுகள், எலுமிச்சை சாறு, சர்க்கரை, உப்பு, மிளகு தூள் ஆகியவற்றை தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ளவும்.
3. அரைத்ததை வடிகட்டி, குளிர்சாதன பெட்டியில் குளிர வைக்கவும்.
4. மிகவும் பொடியாக நறுக்கிய புதினா அல்லது துளசி இலைகளை மேலே தூவி பருகவும்.
5. புதிய சுவையில் கொய்யாப்பழ ஜூஸ் தயார்.

உணவே மருந்து – பாரம்பரிய எள் துவையல்


2. காரமான சாத்துக்குடி ஜூஸ்


தேவையான பொருட்கள்

சாத்துக்குடி – 4
புதினா – 6 – 8 இலைகள்
துளசி – 10 இலைகள்
சீரக தூள் – 1 டீஸ்பூன்
மிளகு தூள் – 1/4 டீஸ்பூன்
கருப்பு உப்பு – 1/4 டீஸ்பூன்
சர்க்கரை – இனிப்பிற்கேற்ப

செய்முறை

1. சாத்துக்குடியை பிழிந்து சாறு எடுத்துகொள்ளவும்.
2. கால் கப் தண்ணீர் சேர்த்து துளசியை அரைத்து வடிகட்டவும்.
3. புதினாவை பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
4. சாத்துக்குடி சாறில், துளசி சாறையும் சேர்த்து, பின் சீரக தூள், மிளகு தூள், உப்பு, சர்க்கரை சேர்த்து கரைத்து கொள்ளவும்.
5. பொடியாக நறுக்கிய புதினாவை மேலே தூவவும்.
6. குளிர வைத்து பருகவும்.

உணவே மருந்து – மணத்தக்காளி கீரை சட்னி


3. மில்க் கிரீமுடன் ஸ்ட்ராபெர்ரி மில்ஷேக்


தேவையான பொருட்கள்

காய்ச்சி குளிர வாய்த்த பால் – 2 கப்
ஸ்ட்ராபெர்ரி – 8
பிரெஷ் கிரீம் – 1/2 கப்
சர்க்கரை – இனிப்பிற்கேற்ப

செய்முறை

1. ஸ்ட்ராபெர்ரி பழங்களை நன்கு கழுவி, துடைத்து சர்க்கரை சேர்த்து நன்றாக அரைத்து கொள்ளவும்.
2. அதனுடன் பால் சேர்த்து கடைவதற்குண்டான “whipper mode” -இல் அடித்து கொள்ளவும்.
3. பின்னர், பிரெஷ் கிரீம் சேர்த்து மீண்டு அடித்து கொள்ளவும்.
4. குளிர வைத்து பருகவும்.

குறிப்பு –

ஸ்ட்ராபெர்ரி விதையின் கரகரப்பு பிடிக்காதவர்கள், பழங்களை அரைத்தவுடன் வடிகட்டி பின் பால் மற்றும் கிரீம் சேர்த்து அடித்து, குளிர வைத்து பின் பருகலாம்.

Follow us on Insta – Moms QnA – Instagram and Facebook – Moms QnA – Facebook

Share This Article

Related Post

sukhdi recipe

Sukhdi or Gol Papdi: A Traditional Sweet Reci

Sukhdi or Gol Papdi Recipe Sukhdi is a Gujarati sweet ...

Oats Egg Omelette

Easy High Protein Breakfast: Oats Omelette

High Protein Breakfast: Oats Omelette Protein is impor...

Vazhaithandu Soup

வாழைத்தண்டு சூப

வாழைத்தண்டு சூப் ப...

Leave a Comment

error

Enjoyed this blog? Please spread the word :)