காய்ச்சல் மருந்து குறிப்பு பகுதி -2: வாத உடல் காய்ச்சல்

“மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்

வளிமுதலா எண்ணிய மூன்று “

இது திருவள்ளுவர் நமக்கு அருளிய நோய் பற்றிய துள்ளிய விபரம்.

நம்முடைய உடலை பற்றி அறிவு நமக்கு மிகவும் அவசியம். இதுவே நம் உடலை எவ்வாறு பேணி காக்க வேண்டும் என்பதை அறிந்து கொள்ள ஏதுவாக இருக்கிறது.

பித்தம்-வாதம்-கபம்

ஒவ்வொருவரின் உடலும் பித்தம் வாதம் கபம் ஆகிய இந்த மூன்றின் அடிப்படையில் இயங்கக் கூடியதாகும். இதில் ஏதாவது ஒன்று மிகுமாயின் அல்லது குறையும் ஆயின் அங்கே நோய் தொற்று ஆரம்பிக்கிறது. நம்முடைய உடலில் உள்ள ஒவ்வொரு அசைவையும் நகர்த்தும் உயிர் தாதுக்கள் இந்த வாதம் கபம் பித்தம் ஆகியவையே. இதனைப் பற்றிய அடிப்படை அறிவு மிகவும் முக்கியம்.

வாத உடல் காய்ச்சல் மருந்து

வாதத்தின் அவசியம்

வாதம் நம் உடலின் இயக்கத்தையும் எலும்பின் வலுவையும் தசை மூட்டுகள் போன்றவற்றின் பணியையும் மற்றும் சீரான சுவாசம் மலம் கழிப்பது போன்றவற்றையும் செவ்வனே செய்ய மிகவும் அவசியம்.

வாத உடல் கொண்டவர்களின் தன்மைகள்  நாம் எவ்வாறு அறிய முடியும்?

இங்கே படிக்கலாம் – வாத உடல்வாகு – இயல்பு, உணவு முறைகள் 

வாத உடல் தன்மையை அறிவது எப்பொழுது?

இவ்வாறு வாதம் மிகுந்தவர்கள் என்பதனை எந்த வயதில் நாடி பார்த்து உணரலாம் என்பதற்கும் விதி உள்ளது.

  • வாதம் மிகுந்த ஒருவருடைய நாடி ஆனது தவளை கத்துதல் போலவும், குருவி காடை ஆகியவற்றின் நடையை ஒத்தும் இருக்கும்.
  • இதனை சராசரியாக 14 வயதிற்கு மேற்பட்டவர்களிடம் மட்டுமே மிகச்சரியாக கணிக்க முடியும்.

உடலில் அடிக்கடி தோன்றும் நோய் பிரச்சனைகள் ஆகியவற்றை வைத்தே தன்னுடைய உடம்பு வாத உடம்பு என்பதை அறிந்து கொள்ளலாம்.

வாத மிகுதியால் ஏற்படும் உடற் கோளாறுகள்

  • மயக்கம், ரத்த சோகை, திடீர் என்று மூர்ச்சை ஆகுதல், அடிக்கடி சளி ஜலதோஷம், அடிக்கடி காய்ச்சல் போன்றவை அறிகுறிகள் ஆகும்.
  • இவர்களுக்கு வாய் கசக்கும், வாயு தொந்தரவு இருக்கும் தலை வறட்சி ஆகி பிடரி வலிக்கும், உடம்பில் சொறி சிரங்கு போன்ற தோல் வியாதிகள் அதிகமாகும்.
  • வயிறு எரிவு காணப்படும், தலைவலி உண்டாகும்.

காய்ச்சல் வகைகளும் அதற்கான மருந்துகளும் பகுதி -1

வாத உடல் காய்ச்சல்

இவ்வாறு வாத உடம்பு கொண்டவர்களுக்கு காய்ச்சல் மற்றும் உடல் பிரச்சினைகள் வந்தால் அதற்கான மருந்தும் அதன் செய்முறையும் கீழே விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

வாத உடல் காய்ச்சல் மருந்து 1

  • தேவையான பொருட்கள்

நல்லவேளை இலை 30 கிராம், சுக்கு ஒரு துண்டு, மிளகு 6, சீரகம் ஒரு கிராம்.

  • செய்முறை

நல்லவேளை இலை இதனை நன்கு சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும் அதனுடன் தோல் நீக்கிய ஒரு துண்டு சுக்கு ஆறு மிளகு ஒரு கிராம் சீரகம் இவை அனைத்தையும் சேர்த்து நன்கு இடித்து அதனை அரை லிட்டர் நீரில் நன்கு காய்ச்சவும்.

அரை லிட்டர் நீர் 200 மில்லி லிட்டர் அளவு வரும் வரை அதனை காய்ச்சி எடுத்து ஒரு பாத்திரத்தில் பத்திரப்படுத்தவும். இந்த நீரை தினமும் மூன்று முறை குடிக்க கொடுத்து வர வாதசுரம் தீரும்.

வாத உடல் காய்ச்சல் மருந்து 2

  • தேவையான பொருட்கள்

பேய்மிரட்டி இலை

  • செய்முறை:

பேய்மிரட்டி இலையை நன்கு கழுவி சுத்தம் செய்து அதனை குடிநீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து பின் அந்த கொதிநீரில் வேது பிடிக்க விடாத வாதசுரமும் சரியாகும்.

Follow us on Insta – Moms QnA – Instagram and Facebook – Moms QnA – Facebook

Share This Article

Related Post

Leave a Comment

error

Enjoyed this blog? Please spread the word :)