பாட்டி வைத்தியம் – பாசிப் பயறு, முட்டை- சருமப் பளபளப்பிற்கு

தேவையான பொருட்கள்:

பாசிப்பயறு (200 grams)
முட்டை – 1

செய்முறை:

முட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் தனியாக பிரித்து எடுத்து வைத்துக் கொள்ளவும். பின்பு பாசிப்பயறை ஒரு அகலமான சில்வர் அல்லது கண்ணாடி தட்டில் பரப்பி அதனுடன் வெள்ளை முட்டை கருவை அனைத்து பாசி பயிரிலும் நன்றாக கலந்து பின் அதை காயவிடவும்.நன்றாக காய்ந்த பாசிப்பயறை மிக்ஸியில் நன்கு அரைத்து எடுத்து மாவாக்கி வைத்துக் கொள்ளவும்.

Read about – முகம்,சருமம் பொலிவுடன் ஜொலிக்க

உபயோகிக்கும் முறை:

அரைத்த மாவிலிருந்து தேவையான அளவு மாவை எடுத்து அதனுடன் அவரவர் சருமத்திற்கு ஏற்ப காய்ச்சாத பால் அல்லது பாலாடை அல்லது தயிர் சேர்த்து கலந்து குளிப்பதற்கு முன் முகம் கை கால்களில் தேய்த்து குளிக்கலாம்.

இந்த பொடியினை வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் பயன்படுத்துவதால் நல்ல பலனைப் பெறலாம்.

 Easy Tip for தலை முடி நன்கு செழித்து அடர்த்தியாக வளர

பயன்கள்:

இந்தப் பொடி நமது மேனிக்கு இயற்கையான ஒரு நல்ல பொலிவையும், மென்மையையும் தரவல்லது. அதுமட்டுமல்லாது தேவையில்லாத நாட்பட்ட அழுக்குகளையும் போக்கும் ஒரு நல்ல இயற்கை மருந்து.

பின்குறிப்பு:

பாசிப்பயறை முட்டையுடன் பயன்படுத்துவதால் அதிகமாக எந்த ஒரு பக்க விளைவுகளும் இல்லை.

Read about – Bathing Powder Mix For Children

Follow us on Insta – Moms QnA – Instagram and Facebook – Moms QnA – Facebook

Share This Article

Related Post

Leave a Comment

error

Enjoyed this blog? Please spread the word :)