வாழைத்தண்டு சூப்

பொதுவாக மரங்கள் அனைத்துமே மனித சமுதாயத்திற்கு ஏதாவது ஒரு வகையில் பயன் தரும் வகையில் =தான் படைக்கப்பட்டுள்ளன. அதிலும் சில வகை மரங்களின் அனைத்து பாகங்களும் மனிதனுக்கு பயன் தரும் வைக்வகையில் உள்ளது தான் படைப்பின் மகிமை.

மா, வாழை மற்றும் பனை ஆகியவைகள் இவற்றுக்கு நல்ல உதாரணங்கள் இவற்றில் வாழை மரத்தில் உள்ள தண்டின் வாழைத்தண்டு குணங்கள் பற்றி இன்று பார்ப்போம். பார்ப்பதற்கு வெண்மையாக, நீர்ச்சத்துடன் அதிகம் கணமில்லாமல் மிக சாதாரணமாக காட்சியளிக்கும் வாழைத்தண்டை பற்றி நம் மூதாட்டி அவ்வையார் மிகச்சரியாக சொல்லியிருக்கிறார்கள்.

“கருங்காலிக் கட்டைக்கு நாணாத கோடாரி சிறு கதலி தண்டுக்கு நாணும்”

கூர்மையான எந்த ஆயுதத்தையும் கூர் மழுங்கச் செய்யும் தன்மை வாழைத்தண்டுக்கு உள்ளது.

மேலும் படிக்க – பாட்டி சொல்லிய உடல்நல குறிப்புகள்

இனி இந்த வாழைத்தண்டு மனிதர்களுக்கு எந்த வகையில் பயனுள்ளதாக இருக்கிறது என்பதை பார்ப்போம்.

  • கொழுப்பை குறைக்கும் 
  • வயிற்றுப்புண்களை குணப்படுத்தும்
  • சிறுநீர் எரிச்சலைப் போக்கும் 
  • சிறுநீர் பாதையில் கல் அடைப்பை நீக்கும்
  • உடல் பருமனை குறைக்கும்
  • இதில் உள்ள வைட்டமின் பி6 ஹீமோகுளோபின் மற்றும் இன்சுலின் உற்பத்திக்கு பெரிதும் உதவுகிறது
  • இதிலுள்ள பொட்டாசியம் இதயத் தசைகளை வலுவடையச் செய்கிறது.
  • இதில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் சி தோல் நோயாளிகளுக்கு, தோல் நோய்களுக்கு மிகச் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது.
  • காதுநோய், கர்ப்பப்பை நோய்கள், மஞ்சள் காமாலை, விஷக்கடியால் ஏற்படும் வலி மற்றும் இதர நோய்களுக்கு வாழைத்தண்டு மிகச் சிறந்த மருந்தாகத் திகழ்கிறது.
  • வாழைத்தண்டு சாறு மற்றும் சூப் ஆகியவை உடலுக்கு மருந்தாக பயன்படுகிறது.
  • தண்டை சுட்டு அதன் சாம்பலை புண்களுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது.
  • இதைப்போன்று வாழைத்தண்டு கூட்டு மிகச் சிறந்த சுவையான உணவாக பயன்படுகிறது.

மேலும் படிக்க – கல்லீரலை பலப்படுத்தும் கீழாநெல்லி – கீழாநெல்லி சூப்

வாழைத்தண்டினை பயன்படுத்தும் பொழுது கவனத்தில் கொள்ள வேண்டிய சில குறிப்புகள்

  • வயதானவர்கள் வாழைத்தண்டை உணவில் சேர்த்துக் கொள்வதை குறைத்துக்கொள்ளவேண்டும்.
  • வாழைத்தண்டு குளிர்ச்சியானது என்பதால் வாழைத்தண்டு உண்ணும் நாட்களில் மற்ற குளிர்ச்சியான பொருட்களை குறைத்துக் கொள்வது நல்லது.
  • காலில் வலி உள்ளபொழுது வாழைத்தண்டு உண்பதை தவிர்த்தல் முக்கியம்.
  • இரவில் வாழைத்தண்டு சாப்பிடுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

மேலும் படிக்க – சிறுநீரகக் கற்கள் கரைந்து சரியாக

வாழைத்தண்டு சூப்

Vazhaithandu Soup

தேவையான பொருட்கள்:

1. பொடியாக நறுக்கி நார் நீக்கிய வாழைத்தண்டு – 2 கோப்பை
2. இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
3. முழு பச்சை மிளகாய்(நறுக்க வேண்டாம்) – 1
4. தண்ணீர் – வாழைத்தண்டு அளந்த கோப்பையில் 5 கோப்பை
5. மிளகு தூள் – தேவைக்கேற்ப
6. சமையல் எண்ணெய் – தாளிக்க
7. மக்காச்சோள மாவு – 2 தேக்கரண்டி(சிறிதளவு நீரில் கலந்து கொள்ள வேண்டும்)
8. தூள் உப்பு – தேவையான அளவு

செய்முறை:

  • முதலில் அழுத்தச் சமையற்கலனில் சிறிதளவு எண்ணெய் விட்டு, அதில் இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய் போட்டு பச்சை வாசனை போகும் வரை சிறிது நேரம் வதக்கவும்.
  • நறுக்கிவைத்துள்ள வாழைத்தண்டை போட்டு 2 நிமிடம் வதங்கியதும் தண்ணீர் ஊற்றி  மூடவும்.
  • மூடி போட்டு மூடி, நான்கு ஊதல் வந்தவுடன் அடுப்பை அணைத்து விடவும்.
  • ஊதல் அடங்கியவுடன் மூடியை திறந்து, வெந்த வாழைத்தண்டை வடிகட்டவும்.
  • வடிகட்டியில் உள்ள வாழைத்தண்டை நன்கு மத்தை கொண்டு அழுத்தி அழுத்தி வாழைத்தண்டு சாற்றையும் பிழிந்து எடுத்து கொள்ள வேண்டும்.
  • பிழிந்து வைத்துள்ள நீரை ஒரு பாத்திரத்தில் விட்டு, அடுப்பில் வைத்து கொகிக்கும் தருவாயில் கலக்கி வைத்துள்ள மக்காச்சோள மாவு நீரை அதில் ஊற்றி அடுப்பை மிதமான தீயில் வைத்து பத்து நிமிடம் கிளறி கொண்டே இருக்க வேண்டும்.
  • பின் தேவையான தூள் உப்பு சேர்த்து இறக்கி மிளகுத்தூளை தூவி சுடச்சுட பறிமாறலாம்.
  • வாழைத்தண்டு சூப், மிகவும் ருசியானது. மிகவும் சத்தானது.

மேலும் படிக்க – கர்ப்பிணிகளுக்கான கருவேப்பிலை மருந்து

Author Profile

புனை பெயர் செ.கு.வரா – இயற்பெயர் – வரலட்சுமி.கு

படிப்பு – தகவல் தொழில்நுட்பத்துறை பொறியாளர் வேலை – மென்பொறியாளர் பொழுது போக்கு – எழுத்து, கவிதை எழுதுதல், வரைபடம் வரைதல், கோலமிடுதல், தோட்டம் வளர்ப்பு, நாய் வளர்ப்பு, சமைத்தல்.

Follow us on Insta – Moms QnA – Instagram and Facebook – Moms QnA – Facebook

Share This Article

Related Post

Mudakathan rasam

Mudakathan Keerai Rasam Recipe for Bones

Mudakathan Keerai Rasam Mudakathan (balloon vine) is a...

பொன்னாங்கண்ணி க

பொன்னாங்கண்ணி கீரை ...

panakam recipe

Summer Special Drink: Traditional Panakam

Summer Special Drink: Traditional Panakam In Sanskrit,...

Leave a Comment

error

Enjoyed this blog? Please spread the word :)