பாட்டி வைத்தியம் – மலச்சிக்கல்

மலச்சிக்கல்

நம்மில் பலபேருக்கு மலச்சிக்கல் என்பது இப்பொழுது தவிர்க்கமுடியாத ஒரு பிரச்சினையாக மாறியுள்ளது. இதற்கு முக்கிய காரணம் நம்முடைய உணவு பழக்க முறை,
நாம் ஒரு நாளைக்கு எடுத்துக்கொள்ளும் நீரின் அளவு,
நாம் எவ்வாறு சுறுசுறுப்புடன் நடமாட்டத்துடன் இருக்கிறோம் என்பதும்,
நாம் எவ்வளவு நேரம் நன்றாக உறங்குகிறோம், நாம் உண்ணும் உணவில் எவ்வளவு நார்ச்சத்துள்ள உணவு இருக்கிறது என்பதும் தான்.

நம்முடைய உடல் இயக்கத்திற்கு முக்கிய தேவை நல்ல சத்தான உணவு, சராசரியாக ஒரு தினத்திற்கு 2 லிட்டர் தண்ணீர் , உடலுக்குத் தேவையான ஓய்வு, மற்றும் உடம்பிற்கு அத்தியாவசிய தேவையான உடல் உழைப்பு . இவை அனைத்தும் ஒருசேர இருந்தால் மட்டும்தான் உடம்பில் உள்ள குடல் சம்பந்தப்பட்ட எந்த நோயும் வராது. இதில் ஏதேனும் ஒன்று குறைந்தாலும் வயிற்று, மலச்சிக்கல், குடல் புண், செரிமான பிரச்சனை, வாயுத்தொல்லை, வாயில் துர்நாற்றம் போன்ற பல பிரச்சினைகள் ஒன்றன்பின் ஒன்றாக வந்துசேரும்.

மேலும் படிக்க – புத்தி கூர்மை அதிகரிக்க

அவ்வாறு ஏற்படும் முக்கியமான பிரச்சினைகளுள் ஒன்றான மலச்சிக்கலுக்கு சில வைத்திய முறைகள்.

வைத்தியம் 1

தேவையான பொருட்கள்:

கருவேப்பிலை, சுக்கு, மிளகு ,சீரகம், இந்துப்பு பொரித்த பெருங்காயம்.

செய்முறை:

நன்கு சுத்தம் செய்து எடுத்த ஒரு கைப்பிடி கறிவேப்பிலை, ஒரு டீஸ்பூன் சுக்கு, மிளகு, சீரகம், பொரித்த பெருங்காயம், சிறிதளவு இந்து உப்பு இவை அனைத்தையும் நன்கு இடித்து சூரணம் செய்து எடுத்துக் கொள்ளவும். ( சூரணம் என்றால் நன்கு பொடித்த பொடி ஆகும்).

மருந்து உபயோகிக்கும் முறை: மேலே கூறிய அனைத்து பொருட்களையும் இடித்து பொடித்த பொடியை சுடு சாதத்தில் நெய்விட்டு பிசைந்து தினந்தோறும் எடுத்துக் கொள்ளலாம்.

வைத்தியம்-2

மருந்து செய்முறை மற்றும் உபயோகிக்கும் முறை: நில ஆவாரை இலையை நன்கு கழுவி பின் அதனை சிறிது வட மிளகாய், பூண்டு, கல்லுப்பு சேர்த்து துவையலாக அரைத்து இரவில் நாம் உண்ணும் உணவுடன் சேர்த்து உண்டு வர மலச்சிக்கல் நீங்கி காலையில் அனைத்தும் கடினம்மின்றி வெளியேறும்.

வைத்தியம் 3

அகத்திக்கீரையை வாரம் ஒரு முறை சமைத்து உண்டுவர மலச்சிக்கல் என்பது ஏற்படவே ஏற்படாது.

மேலும் படிக்க – சிறுநீரகக் கற்கள் கரைந்து சரியாக

வைத்தியம் 4

30 மில்லி லிட்டர் விளக்கெண்ணையில் 3 துளி எருக்கு இலை சாறு கலந்து குடித்தால் மலச்சிக்கல் பிரச்சனை தீரும்.

வைத்தியம் 5

நாள்தோறும் நன்கு பழுத்த பப்பாளி பழம் ஒரு துண்டு அளவாவது சாப்பிட்டுவர மலச்சிக்கல் என்ற பிரச்சனை அறவே ஏற்படாது.

வைத்தியம் 6

முடக்கத்தான் இலையை இட்லி செய்யும் பாத்திரத்தில் வைத்து அவித்து எடுத்து பின் அதனை நன்கு சாறு பிழிந்து அந்த முடக்கத்தான் சாரை ரசமாக்கி உணவுடன் சேர்த்து வாரத்திற்கு ஒரு முறை உண்டு வந்தால் குடல் பிரச்சினைகள் அனைத்தும் நீங்கி மலம் எளிதாக வெளியேறும்.

வைத்தியம் 7

மிளகாய் பூண்டு இலை கீரை போல் நன்கு வதக்கி அதனை சாதத்துடன் பிசைந்து சாப்பிட தீராத மலச்சிக்கலும் தீர்ந்து போகும்.

மேலும் படிக்க – தொப்பையை குறைக்க

வைத்தியம் 8

சேப்பங்கிழங்கை வாரம் ஒரு முறையேனும் நம் உணவுடன் சேர்த்து வர மலச்சிக்கல் எனும் பிரச்சினை எழவே எழாது.

வைத்தியம் 9

வில்வ இலையை காய வைத்து அரைத்து பொடியாக்கி அதனுடன் அரை தேக்கரண்டி வெண்ணெய் அல்லது அரை தேக்கரண்டி நெய்யுடன் காலை மாலை உண்டு வர மலச்சிக்கல் தீர்ந்து மலம் இலகுவாக வெளியேறும்.

வைத்தியம் 10

ரோசாப்பூ இதழ்கள் சிறிதளவு எடுத்து அதில் சிறிதளவு சீனி கற்கண்டு சேர்த்து நன்கு பிசைந்து அதனை சிறிது தேனுடன் கலந்து தொடர்ந்து 5,6 நாட்கள் வெயிலில் வைத்து குல்கந்து செய்து எடுத்துக் கொள்ளவும். இந்தக் குல்கந்தை காலை மாலை சிறிய உருண்டை அளவு சாப்பிட கொடுக்க மலச்சிக்கல் நீங்கும்.

மேலே கூறிய அனைத்து பாட்டி வைத்தியங்களும் பின்பற்றினாலும் தினம் தோறும் நாம் எடுத்துக்கொள்ளும் நீரின் அளவு 1.5 முதல் 2 லிட்டர். இந்த 2 லிட்டர் அளவு என்பது வெறும் நாம் அருந்தும் தண்ணீர் மட்டுமல்ல, நாம் எடுத்துக்கொள்ளும் உணவில் உள்ள அளவையும் சேர்த்தே ஆகும். ஆதலால் அதிக நீர்ச்சத்துள்ள காய்கறி பழங்கள் எடுத்துக் கொள்வது மிக நல்லது. மலச்சிக்கல் உள்ளவர்கள் மைதா மாவில் தயாரித்த உணவுகளை தவிர்க்க வேண்டும், எண்ணெயில் பொரித்தெடுத்த உணவுகளை அதிகமாக சேர்த்துக் கொள்ளக் கூடாது, உணவு அருந்தியதும் சிறிது வெந்நீர் பருக வேண்டும், குளிர்ந்த நீர் மற்றும் பழச்சாற்றில் ஐஸ்கட்டிகளை சேர்த்து அருந்துவது போன்றவற்றை கண்டிப்பாகத் தவிர்த்தல் நல்லது.

மேலும் படிக்க – வயிற்றுப் பூச்சி அனைத்தும் வெளியேற

Follow us on Insta – Moms QnA – Instagram and Facebook – Moms QnA – Facebook

Share This Article

Related Post

Leave a Comment

error

Enjoyed this blog? Please spread the word :)