எளிய இயற்கை மருத்துவ குறிப்புகள்

நான் பகிர்ந்துகோள்ள நினைப்பது மருத்துவ குறிப்புகள் தானே தவிர மருத்துவம் அல்ல என்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும்.

 இயற்கை மருத்துவ குறிப்புகள்

  • நல்ல உடல் நலத்துடன் இருக்க விரும்புபவர்கள் காலையிலும் இரவிலும் உணவு உட்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம் குறிப்பாக இரவில் வெறும் வயிற்றில் படுப்பதை தவிர்க்க வேண்டும்.
  • குளித்துவிட்டு வந்ததும் தண்ணீர் குடிக்கக்கூடாது.
  • பேரிச்சம்பழம் சாப்பிடுகிறவர்கள் இடையே எள்ளையும் சிறிதளவு உட்கொள்ளலாம் பேரீச்சையினால் ஓரளவு பித்தம் ஏற்பட்டால் அதை கண்டிக்கிறது எள்.
  •  உப்பு உணவுக்கு முன்னும் பின்னும் தொட்டு சுவைப்பது சுகம் தரும் .வெண்குஷ்டம் ஏற்படாமல் தடுக்கும் சக்தி உப்புக்கு உண்டு உப்பு தாக வேட்கை மார்புச்சளி கரும்பித்தம் ஆகியவற்றை கண்டிக்கிறது.

மேலும் படிக்க – கல்லீரலை பலப்படுத்தும் கீழாநெல்லி – கீழாநெல்லி சூப்

  • காளான் வயிற்றுப் போக்கை நிறுத்தும் மருத்துவ குணம் பெற்று இருக்கிறது. அதை காயவைத்து அரைத்து உட்கொள்ள வேண்டும்.எள்ளை மருந்துப் பொருளாக அளவாக உண்ணலாம். நரம்புகள் நலம் பெறவும் வீக்கங்கள் வடியவும் துணைபுரிகிறது.
  • தோல் உரிவதை யும்தேமல் ஏற்படுவதையும் தடுத்து நிறுத்த கருஞ்சீரகத்தை உபயோகிக்கலாம் .விரைவில் குணம் தெரியும். கருஞ்சீரகத்தை ஓமவல்லி இலையின் சாற்றில் கலந்து முகர்ந்து வந்தால் கண் நோய் நீங்கிவிடும்.
  • பூண்டை பக்குவமாக பொங்கச் செய்து வாய் கொப்பளித்து வந்தால் பற்கள் உறுதி அடையும்.
  • மாதவிலக்கு நன்கு வெளிவர குன்றிமணி வேர் துணை புரியக் கூடியது அதிமதுர குச்சி எனப்படும் இந்த வேர் சிறுநீர் நன்கு பிரி வதற்கும் உதவுகிறது.
  • நந்தியாவட்டை வேரை கொதிக்க வைத்து பருகினால் பேறுகால நிலையில் உள்ள பெண் சுகமாக பிரசவிக்கலாம்.
  • பட்டுத் துணியை உடுத்தி வந்தால் சொறி, சிரங்கு ஆகிய நோய்கள் நீங்கிவிடும் .பேன் தொல்லையையும் அது போக்கிவிடும்.

மேலும் படிக்க – பாட்டி சொல்லிய உடல்நல குறிப்புகள்

  • இரவு உணவுக்குப் பிறகு சிறிது தூரம் நடந்து விட்டு வருவது உடலுக்கு நல்லது .100 அடி தூரம் வரை நடக்கலாம் அப்படி நடந்து போகும் போது உடலை வருத்திக் கொள்ளக் கூடாது.
  • நின்ற நிலையிலோ அல்லது படுத்தவாறோ தண்ணீர் பருகினால் நரம்புகளும் இரப்பையும் தளர்வடையும்.
  • கஸ்தூரியை கண் புருவத்தில் தடவி வந்தால் கண் நோய் குணமடையும்.
  • உப்பையும் வெள்ளரிக்காயை யும் சேர்த்து உட்கொண்டால் செரிமானம் ஏற்படும் .உடல் பொலிவடையும் பித்தமும் நீங்கும் .
  • கர்ப்பிணிகள் நீர்பூசணி அதாவது தர்பூசணி பழத்தை சாப்பிட்டு வந்தால் அழகிய குழந்தை பிறக்கும்.
  • பிரசவித்த பெண்களுக்கு  பால் நன்கு சுரக்க வேண்டுமானால் வில்வப் பழத்தை உண்டு வரவேண்டும்
  • சுரக்காய் கறி சமைத்து உண்டுவந்தால் உடலில் பொலிவும் மனதில் தெளிவும் ஏற்படும் .மனக் கவலையைப் போக்கும் சக்தி சுரக்காய்க்கு உண்டு.
  • நகச்சுற்று வடிந்து குணமடைய பறங்கிப்பட்டையை (சிவன் வேம்பு) உரைத்துத் தடவ வேண்டும் . எலுமிச்சை சாற்றில் கலந்து தடவுவது.நல்லது.

மேலும் படிக்க – உடல் பலம் பெற 8 வழிகள்

  • வாந்தி வரும் போல் இருந்தால் அதை கட்டுப்படுத்தாமல் வெளியேற்றுவது நல்லது.
  • நினைவாற்றல் குறைவுக்கு தேன் நல்ல மருந்து .தேன் தேவையான அளவு பருகுவதால் நினைவாற்றல் அதிகரிக்கும்.
  • தேள் கடித்தால் தண்ணீரில் உப்பைக் கரைத்து அந்த பாத்திரத்துக்குள் விரலை வைத்துக் கொண்டிருக்கலாம் வலி குறையும் .
  • வயிற்றில் உள்ள புழுக்களை அழிக்க கருஞ்சீரகத்தை உட்கொள்ளவேண்டும் உள்ளுக்கு ச்சாப்பிடாமல்  தர்பூசணிகாயில் உள்ள நீரில் கலந்து அடி வயிற்றில் தடவினாலும் புழுக்கள்  மடிந்துவிடும்
  • இரத்தக்கொதிப்பு உள்ளவர்களுக்கு வெள்ளரிக்காய் கைகண்ட இயற்கை மருந்து. அந்த நோய் உள்ளவர்கள் தினமும் வெள்ளரிக்காயை சாப்பிட்டு வரலாம். பித்தம்  உஷ்ணம் ஆகியவற்றையும் இது  போக்குகிறது.
  • பல் வலி உள்ளவர்கள் கருஞ்சீரகத்தை தண்ணீரில் கலந்து வாய் கொப்பளித்து வந்தால் விரைவில் பல்வலி நீங்கும்.
  • ஆலிவ் எண்ணெயையும் கருஞ்சீரகத்தையும் கலந்து பயன்படுத்தி வந்தால் உடல் செக்க சிவந்த நிறமாகும் முகமும் பொலிவடையும்.
  • கருஞ்சீரகத்தை தேனுடன் கலந்து உட்கொண்டு வந்தால் கிட்னியில் உண்டாகும் கற்கள் கரைந்துவிடும் .மூலநோயை குணப்படுத்தும் சக்தியும் கருஞ்சீரகத்திற்கு உண்டு.

மேலும் படிக்க – சிறுநீரகக் கற்கள் கரைந்து சரியாக

  • கோபம் வந்தால் குளிர்ந்த நீரை குடிக்கவேண்டும் கோபம் வந்தவரின் கழுத்து நரம்புகள் முறுக்கேறி கண் சிவந்து போகும் உடல் சூடு ஏறும் இதைக் கட்டுப்படுத்துவது அவசியம் குளிர்ந்த நீருக்கு அந்த சக்தி உண்டு.
  • இலந்தை இலை கலந்த தண்ணீரில் குளிப்பது சரும நலத்தை பாதுகாக்கும். உடம்பை சுத்திகரிக்கும் சக்தி இலந்தை இலைக்கு உண்டு.
  • காலணியைக் கழற்றி விட்டு தரையில் உட்கார்ந்து சாப்பிடுவது உகந்த முறையாகும்.
  •  அளவுக்கு அதிகமாக தூங்க கூடாது. இது இருதயத்தை பலவீனமாக்கி விடும் .அக மகிழ்ச்சியை போக்கிவிடும்.
  • கோபம் வரும்போது நின்று கொண்டிருந்தால் உட்கார்ந்து கொள்ள வேண்டும். உட்கார்ந்திருந்தால் படுத்துக்கொள்ள வேண்டும். அப்பொழுதும் கோபம் தனியா விட்டால் குளித்துவிட வேண்டும்.

படித்தேன் பகிர்கிறேன் யாரேனும் பலன் பெற்றால் மகிழ்வேன்.

Follow us on Insta – Moms QnA – Instagram and Facebook – Moms QnA – Facebook 

Author Profile 

சாது

வ.போ.அலுவலரின் நே.மு. உதவியாளர் (ஓய்வு)

படித்தல், எழுதுதல்.

Share This Article

Related Post

சித்த மருத்துவம

சித்தர்கள் எனும் அற...

எளிய நலவாழ்வு கு

எளிய நலவாழ்வு குறிப...

உ டல் நலக் குறிப்புகள் - தூக்கம்

உ டல் நலக் குறிப்

உ டல் நலக் குறிப்புக...

Leave a Comment

error

Enjoyed this blog? Please spread the word :)